Tuesday, July 26, 2011

சரஸ்வதி மகிமை

சரஸ்வதி சாதுவான குணம் கொண்டவள். அதேநேரம் மமதையை அழிப்பவள். கல்வியின் காரணமாக மமதை அதிகரித்தால் அதை அழிப்பதற்கு சற்றும் தயங்கமாட்டாள். சம்பன் முதலான அரக்கர்கள் இதன் காரணமாகவே சரஸ்வதியால் அழிக்கப்பட்டனர். பாணம், உலக்கை, சூலம், சக்கரம், மணி, கலப்பை, வில் ஆகிய ஆயுதங்களை கையில் ஏந்தியிருப்பாள். கல்விக்கு இவள் அதிபதி. எனவே, கலைமகள் எனப்படுவாள். சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று திதிகளும் சரஸ்வதிக்கு பூஜை செய்ய ஏற்ற நாட்கள். வெண்தாமரை, முல்லை, மல்லிகை ஆகிய மலர்கள் அவளுக்கு ஏற்றவை.

No comments:

Post a Comment