Sunday, July 24, 2011

கர்மவினைகள் தீர்கும் அகத்திக் கீரை

அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். நமது அகத்தின் தீயை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று இறைவனை வணங்கி உண்ணும் உணவில் அகத்திக் கீரை முக்கிய உணவாக இடம் பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப் படுகிறது. பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் இச்செடியில் வெற்றிலைச் கொடிக்கால்களில் வெற்றிலைக்கு நிழல் தருவதாகவும் வெற்றிலைக் கொடிக்குக் கொழு கொம்பாக உதவவும் பயிர் செய்கிறார்கள்.

முனி விருட்சம்

அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, காரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் வடமொழியில் வழங்கப்படுகிறது. வானத்தில் அகத்திய முனிவாரின் நட்சத்திரம் தோன்றுகின்ற காலகட்டத்தில் அகத்திமரம் பூக்கத் தொடங்குகின்ற காரணத்தினால் இதற்கு அகத்தியம் என்றும் முனிவிருட்சம் என்றும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர்.

கர்மவினைகள் தீரும்

அகத்திக் கீரையைத் தானமாகக் கொடுப்பது மிகவும் சிறப்புடைய செய்கையாகக் கருதப்படுகிறது. அதிலும் பசுக்களுக்குக் கொடுத்தல் பூர்வ-கர்மவினைகள் யாவும் விலகும் என்பர். ஆனால் இக்கீரையைத் தின்று கொண்டிருக்கும் கறவை மாட்டின் பாலில் உடலுக்கு நன்மை தரும் அனேக நற்குணங்கள் நிரம்பி இருக்கும். இப்பாலைச் சாப்பிடுவதால் அகத்திக் கீரையை உண்பதால் உண்டாகும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்

1 comment:

  1. அகத்திக்கீரைபற்றிய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete