Monday, July 25, 2011

கண் திருஷ்டிப் பாடல்

மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னர் ஒருவருக்கு பரம்பொருள் யாது? என்ற சந்தேகம் எழுந்தது. தன் சந்தேகத்தை அறிஞர்களிடம் கேட்டார். அப்போது, மதுரைக்கு வந்த பெரியாழ்வார், மன்னனிடம் சென்றார். அவரிடம், திருமாலின் பெருமைகளை உரைத்து மகா விஷ்ணுவே உலகத்திற்கெல்லாம் முழுமுதலான பரம்பொருளானவர் என நிரூபித்தார். அப்போது கருடவானகத்தில் சுவாமி, பெரியாழ்வாருக்கு காட்சி கொடுத்தார். திருமாலின் தரிசனத்தில் சொக்கிப்போனார் பெரியாழ்வார். சுவாமியின் அழகு மீது கண்பட்டு விடுமே என்று நினைத்த அவர், அவருக்கு திருஷ்டி கழிக்கும் விதமாக,
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
உன் சேவடி செவ்வி திருக்காப்பு,
எனத்தொடங்கி பாடல் பாடினார்.
இந்த பாடல்களின் தொகுப்பே தமிழகத்திலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பாடப்படுகிறது.

No comments:

Post a Comment