Monday, July 25, 2011

நூறாண்டு காலம் வாழ்க

பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும் போது, நூறாண்டு காலம் வாழ்க! என்று சொல்லி வாழ்த்துவர். இதற்குள் பெரிய அர்த்தம் புதைந்து கிடக்கிறது. மனிதர்களின் சராசரி வாழ்க்கையில் மனைவி, மக்களின் முன்னேற்றத்திலேயே 60 வயது வாழ்க்கை கழிந்து விடுகிறது. இந்த வயதில், உலக பந்தத்தில் இருந்து விடுபட்டு விட வேண்டும். எனவே இச்சமயத்தில், சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்துகிறார்கள். இதன்பிறகு கணவன், மனைவி இருவரும் பொறுப்புகளை தங்களுக்கு அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். எண்பது வயதுக்குள் இவர்கள் பக்குவமுதிர்ச்சியும் பெற்று விடுவார்கள். இதன் பிறகு நற்கதி அடைய கடவுள் இவர்களுக்கு வழிகாட்டுவார். எனவே சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். தொண்ணூறு வயது வரை வாழ்ந்தால் அவர்களைப் பிடித்த நவக்கிரக தோஷங்கள் அகன்று விடும் என்பார்கள். நூறு வயது வரை வாழும் வாய்ப்பு கிடைத்தால், கடவுளுடன் மனிதன் ஒன்றிப் போவான். சாப்பிடுவது, உறங்குவது, உணர்வது, பார்ப்பது, நடப்பது எல்லாமே இறைவனுக்குள் ஒடுங்கிப் போகும். அதாவது இவற்றை செய்யும் ஐம்புலன்களும் அடங்கிப் போகும். இப்படி இறைவனுக்குள் அடங்கிப் போகிறவர்கள் மீண்டும் பிறவியெடுக்கமாட்டார்கள் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில் தான் நூறாண்டு காலம் வாழ்க! என்று சொல்லி வாழ்த்துகிறார்கள்

No comments:

Post a Comment