Sunday, February 3, 2013

நம என்ற சொல்லுக்கு அர்த்தம்

ஒவ்வொரு தெய்வத்திற்குரிய மந்திரத்தைச் சொல்லும் போதும், நம என்ற வார்த்தையை சேர்த்து உச்சரிக்கிறோம். நாராயணய நம, சிவாய நம, கணேசாய நம இப்படி சில உதாரணங்களைக் காட்டலாம். நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்று அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராய ணனே, சிவனே, கணேசனே! உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவது உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் இறைவா! உன்னால் வந்த நாங்கள், உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று பொருள். கலியுகக்கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ நம மந்திரங்களைச் சொல்வது நல்லது.

No comments:

Post a Comment