மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் திளைத்ததால் என்னில் பிறந்த ஒரு வாசகம் இது...
------------------8------------------------------
செங்கனிவாயிதழ்க்கும்- எழில்...
பொங்கும் கொங்கை பொருந்து
மங்கையின் சுகமதற்கும் நாளும்
ஏங்கித் தவிக்கின்றாய் நெஞ்சே
கங்கை வார்சடையன் நாமம் ஓதி
மங்கை பங்கன் அடி தொழாமலே- அவன்
அங்கையின் அருள் பெறுவாயோ இலை
மங்கையில் வீழந்துழல்வாயோ
இதன் பொருள்: மகளிரின் செங்கனி வாய் இதழ் தரும் முத்தத்தில் மயங்கி, அவர்தம் மார்பகம் உடலில் பொருந்த அணைக்கும் சுகத்துக்கு தினம் தினம் ஏங்கித் தவிக்கின்றாய் நெஞ்சே! கங்கையை சடாமுடியில் தரித்த இறைவனின் திரு நாமம் ஓதி, உமையொருபாகனாக விளங்குகின்ற்வனின் அடி தொழாமல், ஆசைச் சுழலில் கிடக்கினறாய் என் நெஞ்சே.... இனியேனும் அவனைத் தொழுது அவன்ருள் பெறுவாயோ? இல்லை மங்கை தரும் சுகத்திலேயே மயங்கிக் கிடந்து உழல்வாயோ....

No comments:
Post a Comment