ஆன்ம தத்துவங்கள், பிரபஞ்ச தத்துவங்கள், போன்ற தத்துவங்களையெல்லாம் ஆராய்ந்து, அதைத் தங்களுக்குப் பின்னால் வருபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உருவங்களாகவும், புராணங்களாகவும் உருவாக்கி வைத்தார்கள் ரிஷிகள். அந்த காலகட்டங்களில் மக்கள் நலனிலும், தேச நலனிலும் அக்கறை கொண்டு சிறப்பாக ஆட்சி செய்து வந்த தெய்வாம்சம் பொருந்திய அரசர்களை நாயகர்களாகக் கொண்டு இந்த புராணங்களில் அமைந்துள்ள தத்துவங்களுக்குப் பொருந்தும் விதமாக இதிகாசங்கள் படைத்தார்கள். காலப் போக்கில் அவரவர்க்குப் பிடித்த புராண, இதிகாச நாயகர்களையும், அவர்கள் தத்துவம் விளக்கும் உருவங்களையும் வணங்கி வரலாயினர். அப்படி வணங்கியவர்கள் குழுவாகி, பிறகு அது ஒரு சமயமாகி, அதற்கென்று பல அடையாளங்கள், சம்பிரதாயங்கள் உருவாகி, அதன் பிறகு தங்கள் சமயத்தை தேசமெங்கும் பரப்பும் செயலிலும் ஈடுபட்டனர். பல்வேறு சிறிய, பெரிய சமயங்கள் நம் தேசத்தில் இருந்தாலும், அவற்றிலெல்லாம் மிகவும் பிரசித்தி பெற்ற சமயங்கள் ஆறு. சிவன், சக்தி, திருமால், முருகன், கணபதி, சூரியன் போன்றவர்களை வணங்குவதே அந்த ஆறு சமயங்கள்.
பிறகு அவரவர் சமயங்களை பரப்புவதற்காக அந்தந்த சமயங்களைச் சேர்ந்த அறிஞர்கள் தங்கள் தெய்வங்களைப் போற்றும் விதமாகக் கதைகளை உருவாக்கினார்கள். அவற்றில் மற்ற சமயங்களுக்குரிய தெய்வங்களையோ, பக்தர்களையோ தம் தெய்வம் அழிப்பது போலக் காட்டினார்கள். சிவ பெருமானிடம் வரம் வாங்கியவர்களெல்லாம் அரக்கர்கள் என்றும் அவர்களைப் விஷ்ணு அழிப்பதாகவும் வைணரவர்கள் சொல்வார்கள். திருமால் அவதாரம் எடுத்து சிவ பக்தர்களை அழிப்பதோடு, எல்லா உயிர்களுக்கும் துன்பம் தந்ததால் சிவன் அவரை அடக்கி அருள் செய்ததாக சைவர்கள் சொல்வார்கள். இதன் விளைவாக எழுந்த வடிவங்களே மச்ச சம்ஹார மூர்த்தி, வராக சம்ஹார மூர்த்தி, சரபேஸ்வரர், கூர்ம சம்ஹார மூர்த்தி இவையெல்லாம். ஆனாலும், இவை எல்லாவற்றிற்கும் பின்னால் பெரும் தத்துவங்கள் ஒழிந்து கிடக்கின்றன. இதை உணராமல் நான் பெரிது, எனது பெரிது என்று சண்டையிட்டுக் கொள்வது வீண் செயலே.
பரமாத்மாவிடம் வரம் வாங்கி தவறு செய்பவன் மாயையில்(மஹா விஷ்ணு) அழுந்தி அழிந்து போவான். அந்த மாயையில் அழுந்தியவன் மனம்(மஹா விஷ்ணு) செய்யும் வினைகளையெல்லாம் அந்த மாயா காரியங்களின் மூலமாகவே பக்குவப்படுத்தி பரமாத்மா(சிவன்) ஏற்றுக் கொள்வார். இதுவே சம்ஹாரம். இன்னும் சூக்குமமாக இந்த பிரபஞ்சத்தை ஊன்றிக் கவனித்தால் மிகப் பெரிய உண்மை ஒன்று புலப்படும். வாழ்வில் ஜீவன் பஞ்ச இந்திரியநங்கள் வாயிலாக வினை புரிந்து விஷத்தை விளைவித்துக் கொண்டே இருக்கின்றன. அமிர்தம் வரும் போது அதன் விளைவாக நஞ்சும் வரும். உணவு அமிர்தம், அது பிறகு மலமாவது போல. ஏனவே பஞ்ச பூதங்கள் வாயிலாக பரமாத்மதா அந்த விஷத்தை அமிர்தமாக மாற்றிய வண்ணமாயிருக்கிறார். எனவே உயிர்களின் நலத்துக்காக நஞ்சுண்ணுவது அவரது ஓயாத செயலாகும். இதையே நீலகண்டன் என்றும், இந்த தியாகத்தை போற்றும் விதமாக தியாகராசன் என்றும் போற்றி வணங்குகிறார்கள்.
ஈஸ்வரன் படைப்பில் நல்லவர்கள்(தேவர்கள்), கெட்டவர்கள்(அசுரர்கள்) இருவரும் உண்டு. இவர்களுக்கிடையே ஒற்றுமை இருக்காது. வாழ்க்கை நடத்த இருவரும் ஒருவரிடம் ஒருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெறுவதற்கு இரு பிரிவினரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். மேரு மலையை மத்தாகக் கொண்டு, வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு இருவரும் சேர்ந்து கடைகிறார்கள் பல விதமான சம்பத்துகள் வருகின்றன. அவரவர் தகுதிக்கு ஏற்றவற்றை அவரவர் ஏற்றுப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இறுதியாக ஹாலால விஷம்( மரணம்) வந்தது. அது இரு பிரிவினரையும் விடாமல் துரத்தியது. எனவே பரமாத்மாவிடம் சரண் புகுந்தார்கள். சிவபெருமான் நஞ்சைத் தானே உண்டு உயிர்களை உய்வித்தார். இதற்குள்ளே இன்னும் கிளைக் கதைகள் உண்டு. அதற்கும் தத்துவங்கள் உண்டு.
இது புராணக் கதை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தினமும் நடந்து வரும் நிகழ்ச்சியாகும். எல்லோரும் வாழ்க்கை எனும் பாற்கடலைக் கடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் மூலம் செல்வம், வண்டி, வாகனம், ஆடை, ஆபரணங்கள் அனைத்தையும் அடைகிறார்கள். இதில் தேவர்கள் என்பது நல்ல குணம் அல்லது நல்ல வழி. அசுரர்கள் என்பது தீய குணம் அல்லது கெட்ட வழி. மரணத்தை ஒத்தி வைப்பது அமிர்தமாகும். அது உணவின் வாயிலாக நடைபெறுகிறது. எனினும் மரணம் எனும் விஷம் விடாது துரத்துகிறது. எனவே சிவபெருமானாகிய பரமாத்மாவை சரண்டையும் போது நம் வினைகளை அவர் ஏற்றுக் கொள்கிறார். இந்தப் புராணக் கதை உலகாய வாழ்விற்கு மட்டுமின்றி யோக வாழ்விற்கும் முற்றிலும் பொருந்துவதாகும்.

No comments:
Post a Comment