பொய் , பயனற்ற சொல் , கடுஞ்சொல் ஆகியவற்றை தவிர்த்துவிடுங்கள் ...
"ஒருவன் பொய்யுரையைத் தவிர்த்து விட்டாலே, அவன் உண்மை பேசுபவனாகிவிடுகிறான்; நம்பகமானவனாகி விடுகிறான், பொறுப்பானவனாகி விடுகிறான்;
எவரும் அவனை நம்பி வாழலாம். அவன் இவ்வுலகத்தை ஏமாற்ற மாட்டான்....
தீய எண்ணங் கொண்ட வார்த்தைகளை அவன் என்று விட்டு விட்டானோ,
அன்றே அங்கு பேசுவதை இங்கும், இங்கு பேசுவதை அங்கும் புனைந்து, புறங்கூற மாட்டான்.
அவன் பிரிந்திருப்பவர்களை ஒன்று சேர்ப்பான்; நண்பர்களை மேலும் நெருங்கிய நண்பர்களாக்குவான்;
ஒற்றுமையே அவனது மகிழ்ச்சி; ஒற்றுமையே அவனது தெளிவு; ஒற்றுமையே அவனது அன்பு; அவனது பேச்சுக்களின் நோக்கமே இவைதாம்:
கடுஞ்சொற்களைத் தவிர்த்தல்;
அவனது சொற்கள் குற்றமற்றவை; குறையற்றவை; காதுகளுக்கு இனிமையானவை; எல்லாராலும் ஏற்று கொள்ளக் கூடியவை;
உள்ளத்தைத் தொடுபவை; நாகரிகமானவை; எல்லாராலும் விரும்பப்படுபவை; பயனற்ற பேச்சைத் தவிர்த்துச் சரியான நேரத்தில்,
சரியானவற்றை மட்டுமே அறத்தைப் பற்றியும் ஒழுக்கத்தைப்பற்றியும் பேச வேண்டியவை பற்றிமட்டுமே பேசுவான்.
அவன் பேசுஞ் சொற்கள் புதையலைப் போன்று காக்க வேண்டியவை; காலத்துக்குகந்தவை; சரியான காரணங்களுடையவை; எதை விளக்க வேண்டுமோ, அதைமட்டும் மிகச்சரியாக விளக்குபவை. "

No comments:
Post a Comment