Monday, December 30, 2013

வாசுதேவனின் பொருள்

கண்ணனை "வாசுதேவ் கிருஷ்ணா' என்று குறிப்பிடுவர். வசுதேவரின் பிள்ளையாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். கிருஷ்ணர் பூவுலகில் பிறப்பதற்கு முன்பே, "வாசுதேவன்' என்ற பெயர் வழக்கில் இருந்தது. விஷ்ணு சகஸ்ர நாமத்தில் கடைசியில் இடம்பெறும் பலன் கூறும் ஸ்லோகத்தில்(பலச்ருதி), ""எல்லா உயிர்களிலும் வசிக்கும் வாசுதேவனாகிய உனக்கு நமஸ்காரம்'' என்று கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணாவதாரத்திற்கு முன்பே, விஷ்ணு எடுத்த அவதாரம் நரசிம்மர். விஷ்ணு மீது பக்தி கொண்ட பிரகலாதன், அசுரக்குழந்தைகளுக்கு பெருமாளைப் பற்றி உபதேசிக்கும் போது, அவரை "வாசுதேவன்' என்னும் பெயரால் குறிப்பிடுகிறான்

No comments:

Post a Comment