Tuesday, February 4, 2014

உயிர் போகிற நிலையில் ஒருவன் மற்றவனிடம் உதவி கேட்கலாம்

ஒரு முனிவர் பெரும்பாலும் பட்டினியே கிடப்பார்.

ரொம்ப பசித்தால், ஒன்றிரண்டு கனிகளைச் சாப்பிடுவார், ஏரிகளுக்குப் போய் தண்ணீர் குடிப்பார்! அவ்வளவு தான்!

ஒருநாள் அடர்ந்த காட்டுக்குள் வழிதெரியாமல் சென்று விட்டார். பசி, தாகம் தாங்க முடியவில்லை. ஒருநாள் முழுக்க கடந்து விட்டது, மறுநாள் காலை வரை பசி மயக்கத்தில் ஓரிடத்தில் விழுந்து கிடந்தார்....

காலையில், விறகு வெட்டும் தொழிலாளி அந்தப் பக்கமாக வந்தார். அவர் கொண்டைக் கடலையை சுவைத்துக் கொண்டிருந்தார். மயங்கிக் கிடந்த முனிவர், அவனை நோக்கி கையை நீட்டினார்.

""பாவம்! இந்த சுவாமிக்கு பசி போலும்,'' என்றெண்ணியவன் சில கடலைகளைக் கொடுத்தான். அதைச் சாப்பிட்டார். அவருக்கு விக்கல் வந்து விட்டது. அவன் தண்ணீர் குடுவையை நீட்டினான், அவர் வாங்க மறுத்து விட்டார்.

""அப்பா! உயிர் போகிற நிலையில் ஒருவன் மற்றவனிடம் உதவி கேட்கலாம். இதை "ஆபத் தர்மம்' என்பர். என் உயிர் போய்விடும் என்ற நிலையில், அதைக் காக்க நீ தந்ததைப் பெற்றுக் கொண்டேன். இப்போது எனக்கு சக்தி வந்து விட்டது. நானே ஏரியில் போய் தண்ணீர் குடித்துக் கொள்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்







No comments:

Post a Comment