Sunday, February 16, 2014

பிரயாகை

பிரயாகை
(சர்மா சாஸ்திரிகளின் ‘வேதமும் பண்பாடும்’ நூலிலிருந்து ஒரு பக்கம்)
பிரயாகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. கங்கை மற்றும் யமுனை நதிகள் இரண்டு மட்டும் இங்கு நமது கண்களுக்கு தெரிகின்றது. மூன்றாவது நதியான சரஸ்வதி நம் கண்களுக்கு தெரிவதில்லை. அந்தர்வாஹினியாக அதாவது உள்ளோட்டமாக ஓடுகின்றது.

பிரயாகையில் ஆண்கள் க்ஷவரம் செய்து கொண்டு த்ரிவேணியில் நீராடி ஹிரண்ய ச்ராத்தம் செய்யவேண்டும் என்பது விதி. ப்ரயாகையில் முன்பே இந்த் புஇஸ்தகத்தில் குறிப்பிட்ட ம...ாதிரி தம்பதிகளாக வழிபாடு செய்வது உசிதம்.

கணவன் மனைவியை இங்கு பூஜிக்க வேண்டும்:
இருவரும் சங்கமத்துக்குச் சென்று, பண்டாவின் உதவியுடன் திரிவேணிக்குப் பூஜை செய்ய வேண்டும். அங்கு மனைவி, தன் புருஷனை மாதவனாகக் கருதி அவனுக்குப் பூஜை செய்ய வேண்டும். புருஷன் தன் மனைவியை வேணியாகக் கருதிப் பூஜிப்பான். பின்னர் கணவன், மனைவியின் தலையை வாரிப் பின்னல் போட்டு, மலர் வைத்து, நுனி முடியில் இரண்டு அங்குலம் கத்தரித்து குங்குமம், சந்தனம், அட்சதையுடன் பண்டாவிடம் அளிக்க அவர் அதை நீரில் போட்டு விடுவார். நதியில் போடப்படும் கூந்தலை தவிற மற்றவையெல்லாம் மிதக்கின்றன. கூந்தல் விர்ரென்று நதியில் மூழ்கி அந்தர்த்யானமாகி விடுகின்றது.

வேணி என்றால் நதி, மூன்று நதிகள் கூடுவதால் திரிவேணி சங்கமம் ஆயிற்று. வேணி என்றால் தலைப் பின்னல் என்ற ஒரு பொருளும் உண்டு. தலைப் பின்னலில் இரண்டு கால்கள் வெளியே தெரியும். ஒரு கால் உள்ளே மறைந்து இருக்கும். அதைப் போன்று திரிவேணியில் கங்கையும் யமுனையும் வெளியே தெரிய, சரஸ்வதி உள்ளுக்குள்ளே இருக்கிறது.
த்ரிவேணி சங்கமத்தில் ஸ்நானம்: இது ஒரு புது அனுபவம் தான். படகுதுறையை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடனே நம் மனது தெய்வீக சக்தியை உணர ஆரம்பிக்கின்றது. படகில் ஏறியதும் காசியிலிருந்து எங்களுடன் அனுப்பி வைத்த நபர் மூலம் ஏற்பாடு செய்த பண்டாவும் நம்முடன் படகில் ஏறுகிறார். படகிலேயே சங்கல்பமும் செய்து வைக்க யமுனையில் படகு சென்றுக் கொண்டிருக்கின்றது.

ஆண்களுக்கு வபனம் இங்கு விசேஷமாக சொல்லியிருப்பதால் நாவிதனும் படகில் நம்முடன் பயணித்து நமக்கு உதவி புரிகிறார். அதற்குள் நதியில் சங்கமம் ஆகும் இடம் வந்து விடுகின்றது. படகுக்காரர்கள் சங்கமத்தருகில் படகை நிறுத்தி விடுகிறார்கள். சுற்றிலும் தண்ணீர். நமது படகு நிற்கும் இடத்தில் ஆழம் அதிகமில்லை. மண்தரை. அதில் நடப்பட்டிருக்கும் மூங்கில் கம்புகளில் படகுகள் நகராத வகையில் கட்டி விடுகிறார்கள். மூங்கில்களால் அங்கு ஜலத்தில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. நாம் படகிலிருந்து இறங்கி அந்த மேடையில் நின்றுக் கொண்டு ஸ்நானம் செய்யலாம்.

சங்கமத்தில் ஸ்நானம் செய்து விட்டு படகில் ஏறி சற்று தூரம் சென்று கங்கை நீரை, நாம் முன்னதாக கையோடு எடுத்துச் சென்ற டின்களிலும், குடங்களிலும், கேன்களிலும் நிரப்பிக் கொள்ள படகு கரையை நோக்கி பயணமாகின்றது.

த்ரிவேணி ஸ்நானத்திற்கு பின் கணவன், மனைவி இருவரும் தாம் உடுத்தியிருந்த வேஷ்டி, புடவை, ரவிக்கையை அங்கேயே விட்டுவிட வேண்டும் என்பது ஐதீகம்.

கங்கை (சொம்பு) ஜலம் :
பூஜைக்காக நம் இல்லங்களுக்கு எடுத்துவரும் கங்கை ஜலம் இங்கிருந்துதான் எடுப்பது சம்பிரதாயம். காசியில் அல்ல. இங்கு எல்லாவிதமான அளவுகளிலும் சொம்புகள், பிளாஸ்டிக் கேன்கள் கிடைக்கின்றன. நாம் ஜலத்தை நதியிலிருந்து கொண்டு வந்து கொடுத்தால் கடைக்காரர்களே சீல் வைத்து தருகின்றனர்

No comments:

Post a Comment