பந்தக் கயிறு அவிழ்வது எப்போது?
சிவனுக்கு பசுபதி என்றொரு பெயருண்டு. பசு என்பது அவருடைய வாகனமாகிய ரிஷபமோ, காவலரான நந்தியோ அல்ல. பசு என்பது உயிர்களைக் குறிக்கும். பசுக்களாகிய உயிர்களின் தலைவன் என்பதால் பசுபதி என்று குறிப்பிடப்படுகிறார். பசுமையான தழையைக் கண்டால், அதைத் தின்ன ஓடும் பசுவைப் போல, உலகத்தில் இன்பம் கிடைக்கும் இடங்களைத் தேடி உயிர்களும் ஓடுகின்றன. பசுவிற்குச் சொந்தக்காரன் அதை கட்டிப்போட்டிருப்பது போல, சிவனும் நம்மை கர்மபந்தம் என்னும் கயிறால் கட்டிப்போட்டிருக்கிறார். பசு தன்னைக் கட்டியுள்ள கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடப் பார்க்கிறது. அதுபோல், மனிதர்களும் கர்மபந்தத்தை அறுத்துக் கொண்டு போக ஆசைப்படுகிறார்கள். ஆனால், இரண்டுமே எளிதல்ல. ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் வாழும் பக்குவம் எப்போது வருகிறதோ, அப்போது தான், கர்மபந்தக் கயிறு அவிழும்...

No comments:
Post a Comment