Wednesday, May 7, 2014

பரமஹம்சர் என்றால் என்ன?

விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ணர். இவருடைய முழுபெயர் ராமகிருஷ்ண பரமஹம்சர். உணர்ச்சியை வென்ற ஞானிகளையே பரமஹம்சர் என்று குறிப்பிடுவர். "ஹம்சம்' என்றால் "அன்னப்பறவை'. தண்ணீரையும், பாலையும் கலந்து வைத்தாலும், பாலை மட்டும் பருகும் இயல்பு கொண்ட பறவை இது என சொல்வார்கள். அதுபோல, உலகில் நன்மையும், தீமையும் கலந்து இருந்தாலும், நல்லதை மட்டும் சிந்திக்கும் ஞானிகளை "பரமஹம்சர்' என்பர். ஞானத்தை வழங்கும் கலைமகளின் வாகனம் அன்னப்பறவை. அதனால், அவளுக்கு "ஹம்சவல்லி' என்றொரு பெயருண்டு. ஆதிசங்கரருக்கும் "பரமஹம்சர்' என்ற பட்டம் உண்டு.

No comments:

Post a Comment