Wednesday, May 7, 2014

மடாதிபதி, சந்நியாசிகளின் பெயருக்கு முன், "பூஜ்யஸ்ரீ' என்ற அடைமொழி இருக்கும்.

மடாதிபதி, சந்நியாசிகளின் பெயருக்கு முன், "பூஜ்யஸ்ரீ' என்ற அடைமொழி இருக்கும். பூஜ்யம் என்றால் "சைபர்'... அதாவது "ஒன்றுமில்லை' என அர்த்தம். சந்நியாசிகள், தனக்கென எதுவுமே வைத்துக் கொள்ளாததால், அவர்கள் "பூஜ்யஸ்ரீ' ஆகிறார்கள். அது மட்டுமல்ல, சைபர் என்ற எண் மட்டுமே உருண்டையாக அதற்கு மேல் எழுத முடியாமல் நின்று போகும். இதை "பூரணநிலை' (நிறைவான நிலை) என்பர். மனம் பக்குவம் அடைந்தவர்களால் மட்டுமே, விருப்பு, வெறுப்பு உணர்வற்று நிறைவாக வாழ முடியும். இப்படிப்பட்ட குணம் கொண்ட ஞானிகள், பூஜிக்கத் (வணங்கத்) தக்கவர்கள் என்பதாலும் "பூஜ்யஸ்ரீ' என்னும் அடைமொழி இணைந்தது. ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சந்நியாசிகளின் பெயருக்கு முன் "பூஜ்யஸ்ரீ' என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது.

No comments:

Post a Comment