Wednesday, May 7, 2014

வெள்ளை மனசு வேணுமா?


மந்திரங்களில் சிறந்த காயத்ரியை, வேதத்தின் தாயாகப் போற்றுவர். அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில்(4.30-6.00) கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து, காயத்ரி மந்திரம் சொல்வது சிறப்பு. புருவ நடுவிலோ அல்லது இதயத்திலோ காயத்ரி வீற்றிருப்பதாக எண்ணியபடி, 108 முறை ஜெபிப்பர். இதனால், நல்லறிவு, மனஉறுதி, முகப்பொலிவு, உடல்நலம்
உண்டாகும். மனம் தூய்மை பெற இதை விட சிறந்த வழி வேறில்லை என சிவானந்தர் குறிப்பிடுகிறார்.
""ஓம் பூர்புவஸ்ஸுவ
தத் ஸவிதுர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ பிரசோதயாத்''
என்பதே காயத்ரி மந்திரம்.
""எல்லா பாவங்களையும், அறியாமையையும் போக்குபவரே! வணக்கத்திற்குரியவரே! உலகைப் படைத்த கடவுளே! உமது புகழை நாங்கள் தியானிக்கிறோம். நீங்கள் எங்கள் புத்தியை நெறிப்படுத்த வேண்டும்,'' என்பது இதன் பொருள்

No comments:

Post a Comment