Wednesday, May 7, 2014

மீனாட்சி

மீன் கண்களை மூடாமல் குஞ்சுகளைப் பாதுகாப்பது போலவே, அன்னை மீனாட்சியும் எப்போதும் விழித்திருந்து மக்களை காப்பதாக ஐதீகம். அதுபோல ""உன்னை விழிப்புடன் இருந்து காப்பாற்ற நானாச்சு! நீ என்னைச் சரணடைந்தால் போதும்,'' என அவள் பக்தர்களை அழைக்கிறாள். இதற்காகவே, வலக்காலை சற்றே மடக்கி, பக்தன் அழைத்தவுடன், கிளம்பத் தயாராக இருக்கும் கோலத்தில் காட்சி தருகிறாள். ஆதிசங்கரர் மீனாட்சியை பற்றிப்பாடும்போது, "அந்தக் கருணை கடலுக்கு இரண்டு மீன்கள் கண்களாக இருக்கின்றன' என்கிறார்




மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்


திருச்செந்தூர் முருகன் அருளால் கவிபாடும் புலமை பெற்ற குமரகுருபரர், ஒருசமயம் காசி யாத்திரை புறப்பட்டார். மதுரை வழியாக சென்ற அவர், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தார். அம்பிகை மீது "பிள்ளைத்தமிழ்' பாடினார். திருமலை நாயக்கர் அவர் பாடுவதை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது குழந்தை வடிவில் வந்த மீனாட்சி, குமரகுருபரரின் பாடலை ரசித்துக் கேட்டாள். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் குமரகுருபரர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், அம்பாள் சந்நிதியை சுற்றியுள்ள சுவரில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment