Wednesday, May 7, 2014

உயர்ந்த மலர் தாமரையே!

தாமரை மலரை உறைவிடமாகக் கொண்டவள் லட்சுமி. தாமரை மலரால் லட்சுமியை அலங்கரிப்பது சிறப்பு. மல்லிகை, முல்லை மலர்களும் லட்சுமிக்கு உகந்தவை. விஷ்ணுவுக்குரிய துளசியாலும் லட்சுமியை அர்ச்சிக்கலாம். வரலட்சுமி தாயாரை தாழம்பூவால் அலங்கரிப்பது சிறப்பு. அந்தி நேரத்தில் மலரும் செவ்வந்தியும் லட்சுமிக்கு உகந்ததே. லட்சுமி செம்பொன்னிறம் கொண்டவள். அவளை, பொன்னிறம் கொண்ட மஞ்சள் மலரான செவ்வந்தியால் வழிபடுவதை ஆந்திரா, கர்நாடகா மக்கள் விரும்புகின்றனர். செவ்வந்திக்கு "சாமந்தி' என்றும் பெயருண்டு.


கஜலட்சுமி'


தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அவதரித்தவள் லட்சுமி. ஐராவதம் என்னும் யானையும் அவளுடன் வந்தது. அதனால், யானையுடன் இருக்கும் கஜலட்சுமியை வழிபடுவதை சிறப்பானதாக கருதுவர். லட்சுமி நடுவிருக்க, இரு யானைகள் கும்பத்தை ஏந்தியபடி காட்சி தருபவளே "கஜலட்சுமி'. கோயில் கருவறையின் நிலையின் மேற்பகுதியில் கஜலட்சுமியை செதுக்கியிருப்பர். இதை எல்லா பெரிய கோயில்களிலும் பார்க்கலாம். யானையின் முன் நெற்றியான மத்தகத்தில், லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.

No comments:

Post a Comment