Sunday, November 16, 2014

செந்தாமரை மலரில் அமர்ந்திருப்பவள் லட்சுமி

செந்தாமரை மலரில் அமர்ந்திருப்பவள் லட்சுமி. அந்த மலரின் அடிப்படையில் அவளுக்கு பலவிதமான பெயர்கள் உண்டு. தாமரையில் பிறந்தவள் என்பதால் பத்மோத்பவம். தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள் என்னும் பொருளில் "பத்மாலயாம்'. தாமரை போன்ற முகம் கொண்டவள் என்பதால் "பத்மமுகி'. இருகைகளிலும் தாமரை மலர் ஏந்தியிருப்பவள் என்பதால் "பத்மஹஸ்தாம்' அங்கம் முழுவதும் தாமரை மலர் போல நறுமணம் கொண்டவள் என்பதால் "பத்மகந்தி' நாபிக்கமலத்தில் (தொப்புள்) தாமரையை ஏந்தியிருக்கும் விஷ்ணுவுக்கு பிரியமானவள் என்னும் பொருளில், "பத்மநாப பிரியா'. அவளது கண்கள் தாமரை போல் மலர்ந்திருப்பதால் "பத்மநளாய தாட்சி'. இதுதவிர, செந்தாமரை மலராள், தாமரையாள், அலர்மேல் மங்கை என்னும் பெயர்களும் தாமரை மலரைக் குறிக்கும் விதத்தில் உள்ளன

No comments:

Post a Comment