Tuesday, November 18, 2014

தன்னை நம்பியவர்களுக்கு "அன்பு' என்னும் கனிகளைத் தருவான் கண்ணன்

நரகாசுரன் தனது பிள்ளையாய் இருந்தாலும், தப்பு செய்ததால் அவனையே வதம் செய்து நீதியை நிலைநாட்டியவர் கண்ணபிரான். அவர் எப்போதுமே நீதியின் காவலர் தான். நம்பியவர்களை அவர் கைவிட்டதில்லை.
ஒரு சமயம், அவர் தனது அண்ணன் பலராமனுடன் மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் அவரது நண்பன் ஸ்ரீதாமா, "கண்ணா! இதோ தெரியும் பனந்தோப்பில் கிடைக்கும் பழத்தின் சுவை அபாரமாக இருக்கும். ஆனால், இங்கே அவ்வளவு எளிதில் யாரும் நுழைந்து விட முடியாது! இதனுள், தேனுகாசுரன் என்னும் கொடியவன் இருக்கிறான். அவன் மனிதர்களை அப்படியே விழுங்கி விடுவான். அதேநேரம், நீ மனது வைத்தால் நண்பர்களாகிய எங்களுக்கு பழம் சாப்பிடும் ஆசை நிறைவேறும்,'' என்றான்.
கண்ணனும், பலராமனும் தோட்டத்துக்குள் நுழைந்து, பழங்களைப் பறித்துப் போட்டனர்.
பனை மரங்களில் உண்டான சலசலப்பு ஒலி அசுரனின் காதில் விழுந்தது. கோபத்துடன் ஓடி வந்தான். கழுதை வடிவில் தன்னை உருமாற்றி, கால்களால் உதைக்க வந்தான். ஆனால், கிருஷ்ண பலராமர், அதன் பின்னங்கால்களைச் சுழற்றி மரத்தில் அடித்துக் கொன்றனர். பின், அசுரனின் உறவினர்கள் அனைவரும் கழுதைகளாக உருவெடுத்து அவர்களைத் தாக்க வந்தனர்.
அத்தனை கழுதைகளையும் அவர்கள் கொன்று குவித்தனர்.
தன்னை நம்பியவர்களுக்கு "அன்பு' என்னும் கனிகளைத் தருவான் கண்ணன்.

No comments:

Post a Comment