Sunday, November 16, 2014

சரஸ்வதி அமைப்பு!

சரஸ்வதி வெள்ளையுடை உடுத்தி வெள்ளைத் தாமரை மலரில் வீற்றிருப்பாள். அக்கமாலை, சுவடி என்னும் புத்தகம், வீணையை ஏந்திய இவள் தூய்மையின் அடையாளமாக திகழ்வதாக ஆகம சாஸ்திரம் கூறுகிறது. இதற்காகவே, வெள்ளை உடையணிந்து, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இவளின் நான்கு கரங்களும் நான்கு வேதங்களாகவும், கண்களே எண், எழுத்தாகவும், வீணையே ஓங்கார மந்திரமாகவும் இருக்கின்றன. காப்பியங்களில் சிந்தாதேவி, நந்தாவிளக்கு, வானோர்தலைவி என்னும் பெயர்களில் சரஸ்வதி குறிப்பிடப்படுகிறாள். சமணர், பவுத்தர்களும் கல்வியில் சிறக்க சரஸ்வதி வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment