Thursday, November 13, 2014

அவன் புண்ணியம் பண்ணியிருக்கான்

""அவன் புண்ணியம் பண்ணியிருக்கான்... அவன் பிள்ளை நல்ல பிள்ளையா இருக்கு... நான் என்ன பாவம் செய்தேனோ, என் வயிற்றில் இப்படி அவதாரம் எடுத்திருக்கு..'' என்று வருந்தும் பெற்றவர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்கிறது சாஸ்திரம். சில பிள்ளைகள் பெற்றோர் என்ன தான் சொன்னாலும், குழந்தைப் பருவத்திலேயே அடங்காமல் நடக்கிறார்கள். அதிலும் ஒரு சில வாலிபப்பிள்ளைகள் செய்யும் அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இளம் பெண்கள் கூட காதல் வயப்பட்டு, பெற்றோரை மீறுகிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் பெற்றவர்கள் புண்ணியம்
செய்யாதது தான். அப்படியானால், இப்படிப்பட்ட குழந்தைகள் நம் சொல்லைக் கேட்க ஏதாவது பரிகார பூஜை செய்யலாமா என்றால், அப்படி எதுவுமே இல்லை என்கிறது சாஸ்திரம். இருப்பினும், உறவினர்கள் மனம் புண்படாதபடி நடப்பது, தர்மச் செயல்களைச் செய்வது, கெட்ட பழக்கங்களைக் கைவிடுவது ஆகியவற்றின் மூலம், இதன் தாக்கத்தை ஓரளவு குறைக்கலாம்

No comments:

Post a Comment