Tuesday, November 18, 2014

விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், ......

சுலபன் என்ற மன்னன் எருதாகவும், அவனது மனைவி சுபத்திரை மாடு மேய்க்கும் பெண்ணாகவும், மன்னனைக் காணவந்த அந்தணர் கழுதையாகவும் மாறும் வகையில் சாபம் பெற்றனர். இவர்கள் மூவரும் எதிர்பாராதவிதமாக சந்திக்க நேர்ந்தது. அன்று பெரும் காற்றும் மழையும் வீசியது. சுபத்திரை தனது மாடுகளுக்காக அருகம்புல் அறுத்து கட்டுகட்டி வைத்திருந்தாள். மழை அதிகரிக்கவே அங்கே உள்ள ஒரு விநாயகர் கோயிலில் அந்தப் பெண் ஒதுங்கினாள். அதே கோயிலில் மாடும் ஒதுங்கியது. சுபத்திரை அறுத்து வைத்திருந்த அருகம்புல்லைத் தின்றது. அதன் வாயிலிருந்து சில புற்கள் காற்றில் சென்று அங்கிருந்த விநாயகர் சிலை மீது விழுந்தன. மாடு புல்லைத் தின்னும் வேகத்தில் அருகில் நின்றிருந்த கழுதையை தள்ளிவிட்டது. கழுதை தனது பின்னங்காலால் மாட்டை உதைத்தது. அப்போது கால், அந்த புல்கட்டில் பட்டு மேலும் சில அருகம்புற்கள் விநாயகர் மீது விழுந்தன. தான் கஷ்டப்பட்டு அறுத்து வந்த புல்லை மாடும், கழுதையும் சேர்ந்து துவம்சம் செய்வதை கண்ட சுபத்திரை, இரண்டையும் அடித்து விரட்டி விட்டு, புல்கட்டை தூக்கினாள். அப்போது சிதறிய மேலும் சில புற்கள் விநாயகர் மீது விழுந்தன. இவ்வாறு மூவரிடமிருந்தும் புற்கள் பறந்து விநாயகர் சிலை மீது விழுந்ததால், மூவரும் சாபவிமோசனம் அடைந்தனர்.
சிதறிய புற்களே சாப விமோசனம் அளிக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவை என்றால், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், நம் பாவங்களெல்லாம் தீயிலிட்ட பஞ்சாய் காணாமல் போய்விடும் என்பதில் சந்தேகமென்ன!

No comments:

Post a Comment