Sunday, November 16, 2014

கொலுவை வெறும் கண்காட்சியாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கையின் படிநிலையை உயர்த்தும் ஆன்மிக சிந்தனையுடனும் பார்க்க வேண்டும்

நாள் செய்வதை நல்லவன் கூட செய்ய மாட்டான்' என்பார்கள். அதனால், நல்ல நாள் பார்த்து வழிபட்டால் கடவுளின் அருளை எளிதாகப் பெற முடியும். ஆண்டு முழுவதும் வழிபடுவதை விட, நவராத்திரி சமயத்தில் அம்பிகையை வழிபடுவது வாழ்வில் மிகுந்த சுகத்தைத் தரும். புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியை ஒட்டி, வீடுகளில் கொலு வைக்கிறார்கள். பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள் என்னும் கீழ்நிலை பருவத்தில் இருந்து மனித பொம்மைகள், மகான்கள், தெய்வங்களின் பொம்மைகளை கொலு படிக்கட்டில் வரிசை வாரியாக வைப்பதன் மூலம், கீழ்நிலையில் இருந்த நாம் மனிதப்பிறவிகளாக வடிவெடுத்துள்ளதை <உணர வேண்டும். மனிதப்பிறவி மகத்தான பிறவி. இந்தப் பிறவியில் இருந்து மீண்டும் கீழ்நிலைக்கு வந்து விடாமல், மகான்களாகவும், தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் விளங்கி, ஆதிபராசக்தியுடன் ஐக்கியமாகி விட வேண்டும் என்பதை கொலு பொம்மைகள் உணர்த்துகின்றன. கொலுவை வெறும் கண்காட்சியாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கையின் படிநிலையை உயர்த்தும் ஆன்மிக சிந்தனையுடனும் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment