Saturday, October 10, 2015

இந்துவாகவே வீழ்வேன் விதையாக...

இந்துவாகவே வீழ்வேன் விதையாக...
அந்நியப் படையெடுப்பினால் அடுத்த நாட்டு மதங்கள் இங்கே உள்ளே நுழைந்ததை நாம் புரிந்து கொள்ளலாம்.ஆனால் அந்நிய ஆதிக்கம் நீங்கிய பிறகும் அந்த மதங்களுக்கு நாம் இங்கே இடம் கொடுக்க வேண்டுமா? அப்படி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இந்து மதத்தை விடச் சிறந்த கோட்பாடுகள் அவற்றில் ஏதாவது இருக்கின்றனவா?
உலகில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இறைவனைப் பற்றியோ ஆத்மாவைப் பற்றியோ தெளிவான விவரங்கள் இல்லை. ஆனால் நம் நாட்டு உபநிஷதங்களில் இறைவனுடைய வடிவம், குணம், மஹிமை முதலியவற்றைப்பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த முடிவுகள் சரியானவை என்று காலங்காலமாக யோகத்யானத்தில் அமர்ந்துள்ள முனிவர்களும் சித்தர்களும் வழி மொழிந்து இருக்கிறார்கள்.
மனிதனுடைய ஆத்மா உடலில் எங்கே இருக்கிறது என்று கேட்டால் பிறர் தெரியாது என்பர். ஆனால் இதயக் கமலத்தில் உள்ள ஜீவாத்மாவைப் பற்றியும், மூலாதாரத்தில் உள்ள குண்டலினிப் பற்றியும் அதன் சக்தியை ஆறு ஆதாரங்கள் வழியாக எழுப்பும் வழியைப்பற்றியும் கூறும் நூல்கள் நம்நாட்டில் நூற்றுக்கணக்காக இருக்கின்றன.
நம்முடைய உலக வாழ்வு ஒரு நீண்ட பயணத்தின் ஒரு பகுதி தான் என்று தெளிவுபடுத்தி இருக்கிறது.முன்வினை பின்வினை முதலிய விளக்கங்கள் இந்து மதத்தில் இருப்பது போல் அறிவு பூர்வமாக வேறெங்கும் இல்லை.
கலாச்சார ரீதியாக இந்து மதம் உயர்ந்த கோட்பாடுகளைச் சொல்லுகிறது.ஒரு தமையனை தகப்பனுக்குச் சமமாகவும், தமயனின் மனைவியை தாய்க்குச் சமமாகவும் கூறி குடும்பத்தை கோயிலாக்கியது இந்து மதம்.ஆனால் மேல்நாட்டு மதங்களோ அண்ணன் இறந்துவிட்டால் அவன் மனைவியை தம்பி மணக்கலாமென்றும்,அவனும் இறந்துவிட்டால் வரிசையாக அடுத்தடுத்த தம்பிமார்கள் மணக்கலாம் என்றும் உயிர் இல்லாத வீடு நிலம்; போன்ற சொத்துக்களை ஒருவர் மாற்றி ஒருவர் அனுபவிப்பதைப் போல ஒரு அண்ணியை அனுபவிக்கலாம் என்ற கொள்கை உள்ளதாக இருக்கின்றன.
விவாகரத்து என்பது, இந்துமதத்தில் கணவன் ஆண்மை இல்லாதவனாகவோ, 7 ஆண்டுகளுக்கு மேல் எங்கோ காணாமல் போய்விட்டால் மட்டுமே அனுமதிக்க படுகிறது. ஆனால் அல்பக் காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து செய்வதென்ற விலங்கியல் வாழ்க்கை முறையை மேல்நாட்டு மதங்கள் தான் தொடங்கி வைத்தன.
உண்ணும் உணவுக்கும், மனிதனின் குணத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு என்று இந்து மதம் சொன்னது.மாமிச உணவு அதிகம் உண்பவர்களுக்கு காமம், கோபம், கொலைவெறி இவை உண்டாகும் என்பதை அது அறிந்து சொன்னது. ஆனால் மற்ற மதங்களில் மதத்தின் பெயரினாலேயே மாமிச உணவு அதிகம் ஆதரிக்க படுகிறது. பாலியல் ஒழுங்கீனங்களும், உலக மஹா யுத்தங்களும் அந்த நாடுகளில் அதிகம் நிகழ்வதன் காரணமும் அதுதான். இந்தியாவில் மனஅடக்கம் அதிகம் இருப்பதின் காரணம் இந்து மதத்தின் உணவுக் கட்டுப்பாடுதான்.
இன்றும் மேலைநாடுகளில் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களே அதிகம் விரும்ப படுகிறார்கள். காரணம் அவர்களுக்குத் தான் மூளை நுட்பம் அதிகம். இதன் பின்னணி என்னவென்றால், அறிவையும் நினைவாற்றலையும் வளர்த்துக்கொள்வது எப்படி என்பதுபற்றி இந்து மதம் கூறிய நியமங்களை இந்தியர்கள் கடைபிடிப்பதுதான். கிருத்திகை விரதம்,ஏகாதசி விரதம்,மிதமான அசைவ உணவு, மார்கழி நோன்பு, கார்த்திகை நோன்பு இன்னும் பல, குருவை தெய்வமாக வணங்குதல், தாய் தந்தையை கடவுளாக நினைத்தல் இப்படி பல காரணங்களால் ஒரு இந்துவின் அறிவும் நினைவாற்றலும் வேறு எந்த மதத்தினரை விட நேர்த்தியாக உள்ளது. மற்ற மதத்தைச் சேர்ந்த அறிவாளிகள் வெடிகுண்டு விஞ்ஞானம், அணுசக்தி கண்டுபிடிப்பு, சிற்றின்பம் அளிக்கும் கண்டுபிடிப்புகளில்தான் அதிகம் ஈடுபடுவர். மெய்ஞ்ஞானமும், 7-வது அறிவின் வளர்ச்சியும் இந்தியாவில் மட்டும் தான்.
ஒற்றுமையான குடும்பங்கள், பாசமான பிள்ளைகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். மற்ற நாடுகளில் உடைந்துபோன உள்ளங்கள், நொறுங்கிப்போன உறவுகள், பிரிந்துபோன பந்தங்கள் ஆகியவற்றைத்தான் அதிகம் பார்க்கலாம். மேலைநாடுகளுக்குச் சென்று திரும்பிய இந்தியர்களைக் கேளுங்கள் நான் சொல்வதன் உண்மை புரியும்.
நெற்றியில் பொட்டு வைத்தல் வெறும் அழகுக்காக அல்ல.இரண்டு புருவங்களுக்கு மத்தியிலே ஈஸ்வரஸ்தானம் இருக்கிறது. குங்குமத்தால் அங்கே பொட்டு வைப்பதனால் ஞானம் விழிப்படைகிறது.
திலகமிடும் பழக்கமே மற்ற மதங்களில் இல்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்து மதத்தை விட்டு விட்டு மேல்நாட்டு மதங்களுக்கு மதமாற்றம் செய்து கொண்டு போகத்துடிக்கும் உங்கள் நண்பர்களைப் பார்த்து இந்த விஷயங்களை எடுத்துக் கூறி,அவர்கள் அறிவு விழிப்படையச் செய்வீர்

No comments:

Post a Comment