Sunday, October 25, 2015

வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்?


வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? பகுதி 1 
நாம் உடுத்தும் உடை முதல் அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்கள் வரை நமக்கு பிடித்த நிறங்களில் அவற்றைத் தேர்வு செய்கிறோம். இந்த வர்ணங்களுக்கு ஏதேனும் பொருள் உண்டா, அது நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? தெரிந்துகொள்வோம் இக்கட்டுரைகளில்… சத்குரு: மனித விழிப்புணர்வு அல்லது ஒரு ஆன்மிக செயல்முறை, இதில் வர்ணம் எந்த அளவு முக்கியம்? நீங்கள் பிரதிபலிக்கும் வர்ணம் இயல்பாகவே உங்கள் “ஆரா”வில் (ஒளி வட்டம்) சேரும். துறவறம் பூண்ட ஒருவர் எந்த உடையும் அணிந்து கொள்ள விரும்புவதில்லை, ஏனென்றால் புதிதாக எதையும் சேர்த்துக்கொள்ள அவர் விரும்புவதில்லை. இருப்பவற்றைக் கொண்டு தொடர்ந்து வேலை செய்யவே விரும்புவார். இருப்பவற்றைக் கொண்டு செயல் செய்வதே பெரிய விஷயம். மேலும் ஒன்றை சேர்த்துக்கொண்டால் சிக்கல்தான். ஆதலால் சிலர் ஒன்றும் அணியாமல் நிர்வாணமாக இருப்பார்கள். சமூகத்தில் நிர்வாணமாக இருப்பது சிரமமாக இருந்தால் கோவணம் மட்டும் உடுத்திக் கொள்வார்கள். அதிகமாக எதையும் சேர்த்துக் கொள்ள விரும்பாததுதான் அடிப்படைக் காரணம். தாங்கள் இருக்கும் நிலையே குறிப்பிடத்தக்க அளவில் போதுமானது என்பது அவர்களுக்கு தெரியும். அதில் வேறு பல அம்சங்கள் இருந்தாலும், இது வர்ணத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது. ஒருவரின் ஆரா தூய வெண்மை நிறத்தில் இருந்தால் அவர் தூய்மையானவர் எனலாம்.
 அவரின் இருப்பே அற்புதமாக இருக்கும். 
முதலில் நிறம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். 
ஒரு பொருளின் நிறம் எனப்படுவது, அந்த பொருள் நிராகரிக்கும் அல்லது பிரதிபலிக்கும் ஒன்று, அது அந்த பொருள் அல்ல. எதோ ஒன்று சிவப்பாக இருக்கிறது என்றால், வெளிச்சத்தில் இருக்கும் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, சிவப்பை மட்டும் பிரதிபலிக்கிறது. அதனால் சிவப்பு என்றால் அந்தப் பொருள் சிவப்பு அல்ல. நீங்கள் உலகில் என்ன வெளிப்படுதுகிறீர்களோ அந்த தன்மை உங்களுடையதாகிறது. 
சிவப்பு வர்ணம் என்றால் என்ன? 
நீங்கள் ஒரு காட்டில் நடந்து சென்றீர்களானால் பச்சை பசேல் என்று இருக்கும், நடுவில் எங்கேயாவது ஒரு சிவப்பு மலர் மலர்ந்திருந்தால் அது உங்கள் கவனத்தை ஈர்க்கும் ஏனென்றால் உங்கள் புரிதலில் சிவப்புதான் மிக துடிப்புள்ள, வசீகரமான வர்ணம். மற்ற வர்ணங்கள் அழகாகவும், நன்றாகவும் இருக்கலாம் ஆனால் சிவப்பு மிக வசீகரமானது. உங்களுக்கு வேண்டிய முக்கியமான சில பொருள்கள் சிவப்பாக இருக்கும். உதாரணமாக உங்கள் ரத்தத்தின் நிறம் சிவப்பு. மனிதனின் விழிப்புணர்வில், மற்ற நிறங்களை விட சிவப்பு நிறம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். உணர்ச்சிபூர்வமான எதுவும் சிவப்பு. ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு – நகரத்தை சிவப்பு வர்ணமாக ஆக்குவது’ (“painting the town red!” ) என்று. நாம் படைத்த தெய்வ சிலைகளில், பெண் தெய்வங்கள் தான் மிக உணர்வு பூர்வமானது. லிங்கபைரவியின் நிறம் சிவப்பு, ஏனென்றால் அவள் உணர்ச்சிபூர்வமானவள், அதனால் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறாள். அவளுடைய முழுமையான துடிப்பானது, உணர்வு பூர்வமானது. அதனால் உங்களுக்கு சிவப்பாக இருக்கிறாள்.
 நீல நிறத்தின் அர்த்தம் 
நீலம் அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளும் ஒரு நிறம். பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும், விசாலமாக, உங்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் அது நீல நிறத்தில் இருக்கும். பெரும் கடலோ அல்லது ஆகாயமோ, நீலமாக இருக்கும். உங்களின் புரிந்து கொள்ளும் தன்மையை தாண்டி இருக்கும் எதுவும் நீல நிறத்தில் இருக்கும். ஏனெனில் நீல நிறத்தின் அடிப்படை தன்மை எல்லாவற்றையும் தன்னுடன் இணைத்துக்கொள்வது. இதனாலேயே இந்தியாவில் கடவுள்களை நீல நிறத்தில் சித்தரித்தார்கள். சிவன், கிருஷ்ணன், ராமன் எல்லோரும் நீல நிறமாக இருந்தார்கள். அப்படி என்றால் அவர்கள் உடல் நீல நிறத்தில் உள்ளது என்றில்லை எல்லாவற்றையும் தன்னுடன் சேர்த்துகொள்ளும் தன்மை கொண்டு இருந்தார்கள். இதில் வேறு ஒரு அம்சமும் இருக்கிறது. ஒருவரின் பரிணாம வளர்ச்சியில், அவரின் ஆரா பல்வேறு நிறங்களை உள்வாங்கும். நமது பயிற்சியில் ஆக்னா சக்கரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், ஆரஞ்சு நிறம் பிரதானமாக இருக்கும். அது துறவறத்தின், க்ரியாவின் நிறம். ஒருவரின் ஆரா தூய வெண்மை நிறத்தில் இருந்தால் அவர் தூய்மையானவர் எனலாம். அவரின் இருப்பே அற்புதமாக இருக்கும். ஆனால் அவர் செயல்திறன் மிக்கவர் என்று சொல்ல முடியாது. ஒருவர் தன்னுடைய உயர்ந்த நிலையை அடைந்தாலும், உலகில் செயல்திறன் உள்ளவராக இருந்தால், அவருடைய பிரதிபலிப்பு நீல நிறமாக இருக்கும். ஆற்றல் மிக்கவர்கள் நீல நிறமாக இருந்தார்கள். இந்த வகை ஆரா இருப்பவர்களின் செயல்பாடுகளை பார்த்து மக்கள் அவர்களை அதீத ஆற்றல் உடையவர்கள் என கருதினார்கள்.


வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? பகுதி 2 

ஆன்மீகம் என்றால் காவியும் வெள்ளையுமா?
, சிவப்பு மற்றும் நீல நிறங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் காவி மற்றும் வெள்ளை நிறங்களின் மகத்துவத்தைக் காண்போம்… சத்குரு: காவி நிறத்தின் பொருள் ஒருவர் இந்த நிற உடை அணிகிறார் என்றால் ஒரு புதிய வெளிச்சம் வாழ்க்கையில் உண்டாகி இருக்கிறது என்று அர்த்தம். நம் நாட்டில் ஆன்மீகப் பாதையில் செல்பவர்கள் காவி உடை ஏன் தரித்தனர் என்றால் காவி நிறம் நிறைய விஷயங்களைக் குறிக்கும். ஒருவரின் சக்தி நிலை ஆக்ஞா சக்கரத்தை நோக்கி செல்லும்பொழுது அது ஆரஞ்சு நிறத்தில் இருப்பது தெரியும். அந்த சக்கரத்துக்கே உரித்தான இயற்கை நிறமும் அதுவே. ஒரு சில தியான பயிற்சிகளில் ஆக்ஞா காவி நிறம் அல்லது குங்குமப்பூ நிறத்தில் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அது தூய குங்குமப்பூ நிறம் அல்ல, மஞ்சள் கலந்த காவி நிறம். ஆக்ஞா சக்கரம் என்பது புரிதல் அல்லது ஞானத்தைக் குறிக்கும். அதை மூன்றாவது கண் என்றும் சொல்லுவார்கள். மனித உடலில் 114 சக்கரங்கள் உள்ளது. இவற்றில் இரண்டு சக்கரங்கள் நிறங்களுக்கு அப்பாற்ப்பட்டவை, ஏனென்றால் அவை பொருள் தன்மை வாய்ந்தது இல்லை. மற்ற 112 சக்கரங்களும் எதோ ஒரு நிறத்தை கொண்டிருக்கும். பொருள் தன்மை சார்ந்தவற்றிற்கு வெளிச்சத்தை பிரதிபலிக்கும் தன்மை இருக்கும். வெளிச்சத்தை பிரதிபலித்தால், அதற்கு நிறமும் இருக்கும். ஞானோதயம், மற்றும் மூன்றாவது கண் என்று குறிப்பிடப்படும் புரிதல் பரிமாணத்தை திறப்பது இவற்றை நோக்கியே செயல்முறைகளும் இருக்கும். ஆன்மிக பாதையில் இருப்பவர்கள் இந்த வர்ணத்தையே நாடுவார்கள். அந்த நிறத்தை வெளிப்படுத்தவே விரும்புவார்கள். சாதாரணமாக ஒருவர் காவி நிறத்திற்கு மாறினார் என்றால் அவரை சார்ந்த பழைய விஷயங்கள் – உதாரணமாக அவர் பெயர், அடையாளம், குடும்பம், தோற்றம், அனைத்தையும் உதறி விட்டு வேறு விதமான வாழ்க்கை முறைக்கு மாறுகிறார். அப்படி என்றால் அவர் வாழ்வில் புது உதயம் ஆரம்பிக்கும். அந்த புது விதமான புரிதலில், அவர் பழையன எல்லாவற்றையும் துறந்து, புதிய பாதையில் செல்ல, ஒரு புதிய சாத்திய கூற்றை நோக்கி செல்ல ஆயத்தமாக உள்ளார் என்று பொருள். ஞானத்தை, தெளிவை அது குறிக்கிறது. அவர் ஒரு புதிய பார்வையை உருவாக்க வேண்டும் அல்லது உருவாக்க விருப்பமாக இருக்க வேண்டும், அதனால் இந்த நிறத்தை தேர்ந்தெடுக்கிறார். இருவருக்குமே இந்த நிறம் உகந்தது. ஆரஞ்சு ஒரு குறியீடு கூட. காலையில் உதிக்கும் சூரியன் ஆரஞ்சு நிறமாக இருக்கும். ஒருவர் இந்த நிற உடை அணிகிறார் என்றால் ஒரு புதிய வெளிச்சம் வாழ்க்கையில் உண்டாகி இருக்கிறது என்று அர்த்தம், உங்களுக்குள் ஒரு எழுச்சி உருவாகி இருக்கிறது – ஒரு புதிய உதயம். மற்றொரு விதமாக பார்த்தோமானால், பழம், கனிய ஆரம்பித்தால் அது ஆரஞ்சு நிறமாக மாறும். ஆரஞ்சு நிறம் முதிர்ச்சியை குறிக்கும். ஒருவர் ஒரு வித முதிர்ச்சி நிலையை அடைந்தால், அவர் இந்த நிறத்தை உபயோகிக்கலாம். வெள்ளை நிறத்தின் பொருள் வெள்ளை என்பது எட்டாவது நிறம். நிறங்கள் மொத்தம் ஏழு. வெண்மை எட்டாவது நிறம். அதாவது, வெண்மை என்பது எல்லாவற்றையும் கடந்த வாழ்வின் பரிமாணம். வெண்மை என்பது ஒரு நிறம் அல்ல, எந்த நிறமும் இல்லாத பொழுது வெண்மை இருக்கிறது. நிறம் அல்லாத நிலைதான் அது. ஆனால் அது எல்லாவற்றையும் உள்ளே வைத்துக்கொண்டுள்ளது. வெளிச்சம் என்பது வெண்மையாக இருக்கும், அதே சமயம் எல்லா நிறமும் அதனுள்ளே இருக்கும். அதை தனி தனி நிறங்களாக பிரிக்க முடியும். வெள்ளை நிறம் உங்கள் மீது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் வெப்ப மண்டலத்தில் இருந்தீர்களானால், அம்மாதிரியான சீதோஷ்ண நிலைக்கு, வெள்ளை நிறம் மிக உகந்தது. கலாச்சாரப்படி, காவி உடை அணிபவர்கள் குடும்ப மற்றும் சமுதாயத்திலிருந்து விலகி இருப்பார்கள். வெள்ளை உடை அணிபவர்கள் ஆன்மீக பாதையில் இருந்தாலும், மற்ற காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆன்மீகப் பாதையில் இருந்து கொண்டு, மற்ற விஷயங்களில் ஈடுபட்டாலும் தன்னை பாதிக்காமல் அதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விருப்பம் கொண்டவர்கள், மேலும் சேகரிக்க விரும்பாதவர்கள் வெள்ளை உடையை தரிக்கலாம். 

வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்? பகுதி 3 
 மஞ்சள், கருப்பு – மகத்துவம் என்ன? 

கருப்பு நிறம் பற்றி பல்வேறு கருத்துக்களும், கற்பனைக் கதைகளும் உலவி வருகின்றன. உண்மையில் கருப்பு நிறம் என்ன செய்யும், கருப்பு உடை அணிந்தால் என்னாகும்? மஞ்சள் மற்றும் கருப்பு நிறம் பற்றி சத்குருவின் விளக்கம் இதில்… சத்குரு: மஞ்சளின் மகிமை புத்த மதத்தினர்களில், அர்ஹட் (arhat) என்ற நிலை அடைந்த துறவிகள் காவி உடை பூண்டனர். மற்றவர்கள் மஞ்சள் உடை தரித்தார்கள், ஏனென்றால் ஆன்மீகப் பாதையில் புதிதாக தொடங்கி இருப்பவர்களுக்கு கௌதமர் எளிய பயிற்சிகளையே சொல்லிக் கொடுத்தார். ஏனென்றால் அதற்கு தயாராக தேவை இல்லை. ஒரு விழிப்புணர்வு அலை உருவாக்கவே இந்தப் பயிற்சி. அவர் ஒரே இடத்தில் வெகு நாட்கள் இல்லாமல், கிராமம் கிராமமாக சென்று போதனை செய்ததால், ஒரே இடத்தில் இருந்து கடின பயிற்சிகளை சொல்லிக்கொடுக்க நேரம் இல்லாததால், எளிய முறைகள் சொல்லிக்கொடுத்து, அவர்களை துறவறத்தில் ஈடுபடுத்தினார். ஆதலால் அவர்களை மஞ்சள் நிற ஆடை அணியச் சொன்னார். மூலாதார சக்கரத்தின் நிறம் மஞ்சள். மூலாதாரம்தான் உடலின் அடிப்படையான சக்கரம். அவர்களை ஒரு நிலைப்படுத்த நினைத்தார். ஒருவர் மிக அதிர்வுள்ள, நேர்மறையான ஒரு இடத்திற்கு கருப்பு நிற ஆடை அணிந்து சென்றால், அதிக சக்தியை கிரகித்துக் கொள்ள முடியும். ஒருவரை ஆன்மீகப் பாதையில் பல பிறவிகளில் பயணிக்க வைக்க வேண்டுமானால் எளிய பயிற்சி முறை தேவை. இம்முறை இன்றும் புத்த மதத்தில் இருக்கிறது. அவர்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருப்பார்கள், ஏனென்றால் இது நிலைபடுத்துவதை குறிக்கோளாக கொண்டது அவர்கள் மெய்ஞானம் பெறுவது குறிக்கோள் அல்ல. ஆதலால் அவர்களை மஞ்சள் உடை அணிய சொன்னார். கருப்பு நிறத்தின் அறிகுறி: நீங்கள் எதோ ஒரு நல்ல சக்தி வாய்ந்த இடத்திற்கு சென்று, அந்த சக்தி நிலையை உள்வாங்க வேண்டுமானால், கருப்பு நிறம் அணிவது நல்லது. கருப்பு நிறத்திற்கு எதையும் வெளியே தள்ளாமல் கிரகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. கருப்பு நிற ஆடை அணிந்து சக்தி வாய்ந்த இடத்திற்கு சென்றால், உங்களால் அந்த சக்தியை உள்வாங்க முடியும். அதே மாதிரி கருப்பு ஆடை உடுத்தி ஒரு எதிர்மறை சக்தி உள்ள இடத்திற்கு செல்ல நேரிட்டால், அதையும் உள்வாங்கக் கூடும். நிறைய பேர் கருப்பு நிற ஆடை உடுத்த தகுதி அற்றவர்கள். நீங்கள் எப்பொழுதும் கருப்பு உடை அணிந்து, பல தரப்பட்ட சூழ்நிலைகளுக்கு உங்களை உட்படுத்தினால், உங்கள் சக்தி நிலையாக இல்லாமல் இருப்பதை கவனிக்க முடியும். உங்கள் உணர்வுகளை உறிஞ்சி, மனதை சமநிலை இல்லாது செய்து விடும். உங்களை துயரத்தில் ஆழ்த்தி விடும். அதை வெளிப்படுத்தக் கூட முடியாத ஒரு துயர நிலையில் இருப்பீர்கள். அதே ஒருவர் மிக அதிர்வுள்ள, நேர்மறையான ஒரு இடத்திற்கு கருப்பு நிற ஆடை அணிந்து சென்றால், அதிக சக்தியை கிரகித்துக் கொள்ள முடியும். ஒரு இடத்தின் தன்மையை பொறுத்தே கருப்பு ஆடை உடுத்த வேண்டும். வைராக்கியம்: நீங்கள் வைராக்கியம் என்ற வார்த்தையை கேட்டு இருப்பீர்கள். ராகா என்றால் நிறம். வை என்றால் ‘கடந்து’. வைராக் என்றால் நிறங்களைத் கடந்து, அதாவது ஒளி ஊடுருவக் கூடிய ஒருவராக இருப்பவர். அதாவது, உங்களுக்குப் பின்னால் சிகப்பு நிறம் இருந்தால் நீங்கள் சிவப்பாக தெரிவீர்கள், உங்களுக்கு பின்னால் நீல நிறம் இருந்தால் நீங்கள் நீலமாக மாறுவீர்கள். மஞ்சளாக இருந்தால் மஞ்சள் நிறத்தை பிரதிபலிப்பீர்கள். அதாவது நீங்கள் பாரபட்சம் அல்லாதவராக இருப்பீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், அந்த இடத்தின் ஒரு பகுதியாக இருப்பீர்கள். அந்த மாதிரி, வைராக்ய நிலையில் இருந்தால், வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் ஆராய முடியும்.

 வெள்ளை நிறத்தின் முக்கியத்துவங்கள் என்ன? 

வெள்ளை நிறம் அமைதி சமாதானத்திற்கான அடையாளமாகவும், தூய்மை-நேர்மைக்கான அடையாளமுமாகப் பொதுவாகப் பார்க்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் உள்ள ஆன்மீக முக்கியத்துவம் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. இதோ சத்குருவின் வாயிலாக இங்கே தெரிந்துகொள்ளலாம்! சத்குரு: வெண்மை – நிறம் அற்ற நிலை வெண்மை அல்லது அத்வாரங் என்பது எட்டாவது நிறம். ஏழு நிறங்கள் உள்ளன. வெண்மை தான் எட்டாவது நிறம். வெண்மை அல்லது அத்வாரங் என்றால், நம்மைக் கடந்திருக்கிற வாழ்க்கையின் பரிமாணம் என்று அர்த்தம். அது அடிப்படையில் ஒரு நிறம் அல்ல, நிறம் அற்ற நிலை வெண்மை. நிறங்கள் இல்லாமையே அதை வெண்மையாக்குகிறது. அதே போல வெண்மையில் எல்லா நிறங்களும் உண்டு. அது எல்லாவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. நீங்கள் பார்க்கிற ஒளி ஏழு நிறங்களைக் கொண்டது. அந்த நிறங்களை அதற்குரிய முறையிலே பிரித்து விடலாம். எனவே வெண்மை எல்லாவற்றையும் உள்ளடக்கியது. அவை உங்கள் மீது ஒரு நல்ல பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. உஷ்ணமான நாட்டில் வாழுகிறவர்களுக்கு வெண்மை அணிவதற்கேற்ற ஆடை. இந்த சீதோஷ்ண நிலையில் மிக வசதியான ஆடையும் கூட. ஒருவர் வெள்ளைநிற உடையை அணிகிறார் என்றால் ஆன்மீகப் பாதையில் நடந்து கொண்டே, வாழ்வின் பிற தன்மைகளோடும், அவர் இயைந்து இருக்கிறார் என்று பொருள். இந்தப் பாரம்பரியத்தில் பொதுவான ஒரு மனிதர் காவி ஆடை அணிகிறார் என்றால், குடும்பம் மற்றும் சமூக சூழ்நிலைகளிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்கிறார் என்பது பொருள். ஆனால் ஒருவர் வெள்ளைநிற உடையை அணிகிறார் என்றால் ஆன்மீகப் பாதையில் நடந்து கொண்டே, வாழ்வின் பிற தன்மைகளோடும், அவர் இயைந்து இருக்கிறார் என்று பொருள். அது தொடக்க நிலையாகக் கூட இருக்கலாம். இதுதான் இங்கு பாரம்பரியமாக இருந்திருக்கிறது. இதுதான் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் ஒருமுறை. இந்த மனிதர் இந்த வகையைச் சார்ந்தவர், அந்த மனிதர் அந்த வகையைச் சார்ந்தவர் என்று அடையாளம் காண்பதற்கு உதவுகிறது. ஆன்மீகப் பாதையில் இருக்கிற மனிதருக்கு ஆடைகள் மாற்றுவது, பெயர்கள் மாற்றவது, தோற்றத்தை மாற்றுவது எல்லாம் அவருடைய அடையாளங்களை அகற்றுவதற்காக. சந்நியாசம் மேற்கொள்ளுகிறபோது, அது எந்த சம்பிரதாயமாக இருந்தாலும் சரி, முதலில் உங்கள் பெயரை அகற்றி விடுவார்கள். பின்பு உங்கள் தோற்றத்தை மாற்றி, உங்கள் சிகை அலங்காரத்தை மாற்றி விடுவார்கள். உங்கள் பெயர், உங்கள் ஆடை முறை, உங்கள் பெற்றோர், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் கணவர் எல்லாவற்றையும் அகற்றுவார்கள். சந்நியாசம் மேற்கொள்ள வேண்டுமானால் பெற்றோருக்கு நீங்கள் கருமகாரியங்களைச் செய்ய வேண்டும். கருமகாரியங்கள் என்றால் என்னவென்று தெரியுமா? நீங்கள் பெற்றோருக்குச் செய்கிற இறுதிச் சடங்குகள். ஏன் இப்போது பெற்றோருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டுமென்றால், சந்நியாசத்திற்குப் பிறகு அதைச் செய்ய முடியாது. இதன் பொருள் அந்த உறவு முடிந்துவிட்டது என்பதுதான். உங்களுக்கும், மற்றவர்களுக்குமான எல்லா உறவும் முடிந்துவிட்டது. நீங்கள் முழுக்க முழுக்க ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறீர்கள். பெரும்பாலானவர்களுக்கு இது தேவை. பழையவற்றைச் சுமந்து கொண்டே புதிதாக இருக்க உங்களால் முடியாது. இந்தப் பழைய சுமைகளையும் பற்றுதல் இல்லாமல் சுமந்து கொண்டு விநாடிக்கு விநாடி, புத்துணர்ச்சியுடன் வாழ இயலவில்லை. பழையவற்றிலிருந்து துண்டித்து முற்றிலும் புதியதாக்க வேண்டும். அதனால்தான் இந்த சடங்குகளை வைத்தார்கள். சங்கரன்பிள்ளையின் ஆன்மீக தேடுதல் தீட்சை தருவதெற்கென்று பலமுறைகள் உண்டு. இந்தியாவில் பலபேர் பல வெவ்வேறான முறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் குருவையும், ஆன்மீகப் பாதையையும் தேடிக்கொண்டு போகிறவர்கள் எப்போதுமே சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு ஆன்மீகப் பாதையை கண்டுணர வேண்டுமானால் அதைத் தேடிப் போகாதீர்கள். அதற்காக உண்மையாகவும், விருப்பத்தோடும் இருங்கள். குரு உங்களிடமே வருவார். சங்கரன்பிள்ளை ஒருமுறை சந்நியாசம் மேற்கொண்டு ஆன்மீகப் பாதையில் போக விரும்பினார். நீங்கள் ஆன்மீகப் பாதையில் போகும்போது தலைசிறந்த பாதையைத்தான் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள். தலைசிறந்த குருதான் உங்களுக்குத் தேவை. உங்கள் மனதில் வருகிற தலைசிறந்த குரு யார்? இந்த நாட்டிலேயே மிகவும் பிரபலமான குரு. மிகவும் புகழ்பெற்ற ஒரு ஆன்மீக முறைதான் சிறந்தது என்று கருதுகிறீர்கள். எனவே, அந்தக் காலத்தில், மிகவும் பிரபலமான ஒரு முறையாக, கோரக்நாத் முறையிருந்தது. எனவே கோரக்நாத் முறையைச் சேர்ந்தவர்களிடம் சென்று சந்நியாசம் கேட்டார் சங்கரன் பிள்ளை. அவர்கள் ஒப்புக்கொண்டு அவர் தலையை மொட்டையடித்தார்கள். பொதுவாகவே கோரக்நாத் வகையைச் சேர்ந்தவர்கள் தங்கள் காதுகளில் ஒரு பெரிய வளையலையே அணிந்திருப்பார்கள். எனவே சங்கரன்பிள்ளை காதில் ஒரு பெரிய ஓட்டையைப் போட்டு வளையலை மாட்டி மொட்டையடித்து, காவிநிற ஆடையை அணிவித்தார்கள். அங்கே ஒரு மாதம் இருந்தார். அவருக்கு மனநிறைவு கிடைக்கவில்லை. எனவே மறுபடியும் தேடுதலைத் தொடங்கினார். அவர் மிகத் தீவிரமாகத் தேடி கொண்டிருந்தபோது, ஒரு காட்டுக்குள் போனார். அங்கே ஒரு இஸ்லாமியத் துறவியைச் சந்தித்தார். தீட்சை கேட்டார். அவர் காவி ஆடையைக் கழற்றிவிட்டு ஒரு பச்சை ஆடையைத் தந்து அணியச் சொல்லி சுன்னத்தும் செய்ய வேண்டும் என்று சொன்னார். அதுவும் நடந்தது. நீண்ட காலம் அந்தக் காயம் சங்கரன் பிள்ளைக்கு ஆறவில்லை. ஏனென்றால், அதை ஒரு மருத்துவர் செய்யவில்லை. காட்டுப்பகுதி வேறு. எனவே அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அதைச் செய்திருந்தார்கள். அந்தத் துறவி மொட்டையடிக்கப்பட்ட தலை கூடாதென்றும், முடி வளரவேண்டும் என்றும் சொன்னார். தலைமுடி மட்டுமல்ல, தாடியும் வளர வேண்டும் என்று சொன்னார். எனவே சங்கரன்பிள்ளை அதை வளர்க்கத் தொடங்கினார். அங்கே ஒரு மாதம் இருந்தார். அவருக்கு மனநிறைவு வரவில்லை. அதையும் விட்டுவிட்டு ‘கன்பத்’ என்கிற ஒரு துறவுமுறைக்கு சென்றார். மிகவும் புகழ்பெற்ற ஒருமுறை. கோரக்நாத் வகையை சேர்ந்தவர்கள் வலது காதிலே ஒரு வளையலை அணிவது போல, கன்பத் இனத்தைச் சேர்ந்தவர்கள் இடது காதிலே அணிவது வழக்கம். எனவே இப்போது இடது காதில் ஒரு பெரிய ஓட்டையைப் போட்டு அதில் ஒரு பெரிய வளையலையும் மாட்டிவிட்டார்கள். இப்படியே தொடர்கிறது. உங்களுக்குப் புரியும். இது எங்கே போகும் என்று, இல்லையா? எல்லோரும் உங்கள் உடலில் எங்காவது ஒரு துளையைப் போட்டு விடுவார்கள். ஒரு மனிதர் உண்மையான தேடுதலில் இருந்தால் அது அவனுக்கு கிடைக்கும். அவர் எதையும் தேடிப் போக வேண்டியதில்லை. அது உங்களைத் தேடிவரும். உங்களில் பலருக்குக் கூட, ஈஷா யோகா, உங்கள் வாழ்வின் ஒரு முக்கிய தருணத்தில்தான் வந்திருக்கும். அப்படித்தானே? ஒரு கொதி நிலையையோ, ஒரு எல்லையையோ அடைகிறபோது இயல்பாக ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்திருப்பீர்கள். அப்படித்தான் அது எப்போதுமே இருக்கிறது. அந்த எல்லையைத் தொட்டிராத மனிதனுக்கு இது இன்னுமொரு வேடிக்கையாகத்தான் வாழ்வில் இருக்கும்.

 வெள்ளை நிறத்தின் முக்கியத்துவங்கள் என்ன? 

No comments:

Post a Comment