Monday, October 12, 2015

நாம் வாழும் பூமியில்

நாம் வாழும் பூமியில்...
ஒரு பெண் நாகரிகமாக உடையணிந்து சென்றால் கிராமத்தில் கலியுகம் முற்றிவிட்டது என்பார்கள். தர்மத்திற்கு ஒவ்வாத காரியங்கள் பூமியில் நடைபெறும் இடத்து இது கலிகாலம் என்பார்கள். கடவுளில் பற்று அற்றுப்போய் கடவுள் இல்லை என்று வாதாட ஒருகாட்டுமிராண்டிக் கூட்டம் உலகம் முழுக்கச் சாத்தானின் வேதத்தை ஒதிக்கொண்டு திரியும். உரித்திராட்சப் பூனைகள் நாட்டில் அதிகரித்து பன்னீரில் வாய் கொப்பளித்துத் தங்களை ஆசுவாதப்படுத்திக் கொள்வர். மனத்தளவில் கடவுள் நிலைமாறி மிருகவடிவம் ஆழ்மனத்தில் அத்திவாரம் இடும். நம்பிக்கை என்பது உதட்டளவில் கூட இருக்காது. பூமியில் கடவுள் தன்மை விலகி, ஆன்மாக்கள் மிருக விம்பத்திற்குள் நுழைய முற்படும். காம இச்சை ஒன்றையே நோக்கமாக வைத்துப் பெண்களை ஆண்கள் மாசுபடுத்தப் பல வழிகளில் முயற்சிப்பர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கருத்தியல்புகள் மக்கள் மனங்களில் முரண்பட்டு நிற்கும்.
.
இப்படியாகக் கலியகத்தின் கால எச்சங்களை எழுதிக்கொண்டே போகலாம். இன்றைக்கோ நாளைக்கோ பூமி அழிந்துவிடும் என்பது மாயன் காலண்டரோடு மக்கள் மறந்துபோன ஒன்று. ஒருவேளை அதில் மீதி இருந்திருந்தால் இப்படி இருந்திருக்கலாம் என்றும் ஊகிக்க இடமுண்டு. சந்திரரேகை 200 என்ற நூலில் சித்தர் போகரின் சீடரான கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்
கிருதயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ ராமர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது) துவாபரயுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள். (ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த யுகம் எனப்படுகிறது) கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். (கலியுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்குவங்குவார்களாம். (50க்கு50) , சில நேரம் தேவர் பல நேரங்களில் அசுரர். கடவுள் பாதி மனிதன் பாதி. அதனால் தான் இந்த காலத்தில் யாரையும் நிரந்தரமான நல்லவர்கள் என்று முழுமையாக நம்ப முடிவதில்லை.) யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பிப்ரவரி 18, 3102 என்று காலக்கணக்கீட்டு நிபுணர்கள் கண்டறிந்து இருக்கிறார்களாம், ஆக இந்த 2010 ஆம் வருடம் கலியுகத்தின் 5112 ஆம் வருடம் ஆகின்றது என்கிறார்கள். அதாவது கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,26,888 வருடம் இருக்கின்றது என்கிறார்கள்.
.
கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.
.
கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும். கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும். சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும். யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும். கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும். வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும். மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.
.
எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக்கொள்வான். பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள். சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்.
.
இதனையே இயேசுவின் வருகை என்றும், கலியுகம் முடிந்த பின்னான கல்கியுகம் தோன்றும் என்றும் பலவாக நம்பப் படுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம். மன்னிக்கவும் நாம் 426888 வருடங்கள் இருக்கமாட்டோம். 

No comments:

Post a Comment