Monday, May 5, 2014

புராணம்

புராணம்
புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக்கூறுவதே என பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறுகிறார். அதாவது சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி நன்றாகப் பெரிசு பண்ணிக் காட்டுகிறதல்லவா? இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவதுதான் புராணம். ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனஸில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரம் பண்ணிச் சொன்னால் நன்றாக மனசில் பதியும். ஸத்யம் வத (உண்மையே பேசு) என்று மட்டும் வேதம் சொல்கிறது. அப்படிப் பேசுவதால் எத்தனை பெருமை ஏற்படுகிறது என்பதை ஹரிச்சந்திரன் கதை பல அத்யாயங்களில் விஸ்தாரமாகச் சொல்கிறது. தர்மம் சர (அறத்தைப் பின்பற்று) என்று இரண்டு வார்த்தையில் வேதம் சொன்னதை நீள நெடுக மஹாபாரதத்தில் தர்மபுத்திரரின் கதையாகச் சொல்லியிருக்கிறது. மாத்ரு தேவோ பவ. பித்ரு தேவோ பவ வாக்குக்கு ஸ்ரீராம சரித்ரம் பூதக்கண்ணாடியாய் இருக்கிறது. அடக்கம், பொறுமை, தயை, கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் கட்டளையிட்டுள்ளவற்றை புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாகப் பிரகாசிக்கும்படி செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும், கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது.
புராணங்கள் தோன்றிய காலம்: புராணங்கள் பல உண்டு. அவற்றில் மகா புராணங்களையே பதினெண் புராணங்கள் என்று கூறுவர். வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் உள்ள உட்பொருளை சற்றுக் கற்பனையும் கலந்து யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய கதை வடிவில் உள்ளவை புராணங்கள். புராண என்ற சொல்லுக்கு மிகப் பழைமையானது என்ற பொருள் உண்டு. புராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துள்ளியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்து சமயத்தின் பொற்காலம்: கி.பி. 300-600 காலகட்டங்களில் வடநாட்டை ஆண்ட குப்தர்கள் வடமொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம் என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.
கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி: திருப்பூவணப் புராணத்தில், சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி.
திருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே,
மேவுமந்தமிகுந்திரையாயுக
மோவில்பல்புகழோங்குநளன்றனக்
கியாவுநல்கியிருங் கலி தீர்த்தருள்
பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன் (பாடல் 1325)
என்று கூறப்பட்டுள்ளது. எனவே கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் என்பதும், அவனது ஆட்சிக்காலத்திற்குப் பிறகே பிரமகைவர்த்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் உறுதி. கலியுகம் தோன்றி 5108 ஆண்டுகள் ஆகின்றன. எனவே பிரமகைவர்த்த புராணம் எழுதப் பெற்ற காலம் (கலி5108 கி.மு.2008 3100) கி.மு.3100க்குப் பிற்பட்டகாலம் எனத் திருப்பூவணப் புராணத்தின் வழியாக அறியமுடிகிறது. இந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது.
இறைவன் குறித்த புராணங்கள்: நைமிசாரண்யத்தில் சூதர் சொன்ன கதைகளை வியாசர் புராணங்களாகத் தொகுத்தார் என்பது ஐதீகம். வியாசரால் தொகுக்கப்பட்ட புராணங்கள் பதினெட்டு. அந்தப் பதினெண் புராணங்களும், சத்துவம், ராஜஸம், தாமசம் ஆகிய முக்குணங்களுக்கு உரியவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இதில்
சத்துவ குணப் புராணங்கள் விஷ்ணுவைப் புகழ்கின்றன. அவையாவன: விஷ்ணுபுராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், கருட புராணம், மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், பத்மபுராணம், வராக புராணம், வாமன புராணம். ராஜஸ குண புராணங்கள் பிரம்மாவைப் புகழ்கின்றன. அவையாவன: பிரம்ம புராணம், பிரமாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம். தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன. அவையாவன: சிவபுராணம், லிங்கபுராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், அக்கினி புராணம், மத்சய புராணம், கூர்ம புராணம் முதலியன.
வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும் . அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள். வேதத்தின் கண்ணாடி என்று புராணங்களைச் சிறப்பிப்பர். புரா என்றால் முற்காலத்தில் நடந்தது என பொருள்.வேதங்களைப் போலவே புராணங்களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன.
வேதங்களின் அங்கங்களாக உள்ள பிராம்மணங்களில் கூட புராணங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நான்கு வேதங்களையும் தொகுத்த வேதவியாசரே புராணங்களையும் தொகுத்துக் கொடுத்துள்ளார். திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரும் உருவாகக் காரணமாக இருந்த வேதவியாசரே அவர்களின் உண்மை வரலாற்றை உடனிருந்து மகாபாரதம் என்ற இதிகாசமாக இயற்றியதுடன் ஸ்ரீமத் பாகவத புராணம் என்பதையும் இயற்றியுள்ளார். புராணங்களில் 18 பெரிய புராணங்களும் 18 சிறிய உபபுராணங்களும் இருக்கின்றன. பதினெட்டுப் பெரிய புராணங்களைப் பற்றிய விவரங்களை இனி பார்ப்போம்.
மற்ற புராணங்கள்: 1.அக்னி புராணம். 2.வாயு புராணம். 3.பவிஷ்ய புராணம். 4.நாரதீய புராணம். 5.ஸ்காந்தம் (கந்த புராணம்). 6.மார்க்கண்டேய புராணம்.
பிரம்ம புராணம் : பிரம்மன் தட்சப் பிரஜாபதிக்கு விவரிப்பதாக உள்ள இப்புராணத்தில் 25,000 ஸ்லோகங்கள் உள்ளன.
விஷ்ணு புராணம் : இது மிகவும் பழைமையானது. ஆறு காண்டங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் ஐந்து பெரும் பிரிவுகளையும் கொண்டது. பராசர மகரிஷி, மைத்ரேயருக்கு உபதேசம் செய்ததே விஷ்ணு புராணமாகும்.
மத்ஸ்ய புராணம் : விஷ்ணுவின் முதலாவது அவதாரமான மத்ஸ்யம் (மீன்) தன்னைக் குறித்து மனுவிடம் விவரிப்பதாக உள்ளது இப்புராணம். பதிமூன்றாயிரம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய இப்புராணம் பல மன்னர்களின் வரலாறுகளைக் கதைபோல விவரிக்கிறது.
கூர்ம புராணம் : விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்மம் (ஆமை) இந்திரத்யும்னன் என்று மன்னனிடம் விவரிப்பது போல அமைந்துள்ளது. இதில் எட்டாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில்தான் முதன் முதலாக ஜம்புஸ்த்வபம் என்பதாக நமது பரதக்கண்டத்தின் பூகோள அமைப்பு விவரிக்கப்படுகிறது.
வராஹ புராணம் : விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தை பதினான்காயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம்.
வாமன புராணம் : பத்தாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் வாமன அவதார வரலாற்றை மட்டுமல்லாது பரமேஸ்வரன்பார்வதி ஆகியோரின் திருமண வரலாற்றையும் கூட விரிவாக விவரிக்கிறது.
கருட புராணம் : மகாவிஷ்ணுவானவர், தமது வாகனமாகிய கருடனுக்கு எட்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கும் செய்திகளே இப்புராணம். இதில் மருத்துவம், வான் ஆராய்ச்சி, மரணத்திற்குப் பின் மனிதர்கள் அடையும் நிலைகள் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.
ஸ்ரீமத் பாகவத புராணம் : வியாசரே எழுதியது. மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறாத ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும், விஷ்ணுவின் பிற அவதாரங்கள் குறித்த செய்திகளும், பன்னிரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு பதினெட்டாயிரம் ஸ்லோகங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.
லிங்க புராணம் : சிவபெருமானைக் குறித்தும் அவரது 28 வடிவங்களைப் பற்றியும் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம். லிங்க வழிபாட்டின் தோற்றமும், காரணமும், சிவபெருமானின் அவதார லீலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பத்ம புராணம் : ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்களைக் கொண்ட பெரிய புராணம் இது. பிரம்மனின் பத்மாசனம் விவரிக்கப்படுவதால் இது பத்ம புராணம் என்று பெயர் பெற்றது.
பிரம்மவைவர்த்த புராணம் : பிரம்மகாண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகிய பிரிவுகளுடன் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இதில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதிதான் விநாயக புராணம் என்ற உபபுராணமாக பின்னர் உருவானது. “கிருஷ்ண ஜன்ம காண்டம்” என்ற பகுதிகளில் உள்ள தகவல்களை ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் காணலாம்.
பிரம்மாண்ட புராணம் : பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் ஒரு பொன்னிற முட்டையிலிருந்துதான் நமது பிரபஞ்சம் (பிரம்மாண்டம்) தோன்றி விரிவடைந்தது என்று விவரிக்கிறது. நவீன விஞ்ஞானம் தற்காலத்தில் நம்பும் பெருவெடிப்பு என்ற நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்ட இப்புராணத்தில் காணலாம்.
அக்னி புராணம் : அக்னிதேவன் வசிஷ்ட மகரிஷிக்கு விவரித்தது இப்புராணம். சிவலிங்கம், துர்க்கை, இராமர், கிருஷ்ணர் ஆகியோரைப் பற்றியும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற கலைகளைப் பற்றியும் விவரிக்கிறது என்பது இப்புராணத்தின் சிறப்பாகும்.
வாயுபுராணம் : பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டு இப்புராணத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆண்ட குப்த வம்சத்து மன்னர்களைப் பற்றியும், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் என்பவரைப் பற்றியும் கூட தகவல்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பவிஷ்ய புராணம் : வருங்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெல்லாம் நடக்க இருக்கின்றன என்று சூரியன் முன் கூட்டியே மனுவுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது இப்புராணம். ஸ்தலங்களைப் பற்றியும் அங்கெல்லாம் யாத்ரிகர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் கூட இப்புராணம் விவரிக்கிறது.
நாரதீய புராணம் : நாரத மகரிஷியானவர் சனத்குமாரருக்கு உபதேசித்தது இப்புராணம். 25,000 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.
ஸ்காந்தம் : முருகனின் வரலாற்றை விவரிப்பதுதான் இப்புராணம்
மார்க்கண்டேய புராணம் : மிகப்பழைமையான புராணம் இது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான், பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெடுத்தது.
மேற்குறிப்பிட்ட பதினெட்டு பெரிய புராணங்களும் தேவபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் தான் உள்ளன என்றாலும் பிற்காலங்களில் பாரத நாட்டின் பல்வேறு பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஸ்காந்தம் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியரால் கந்தபுராணம் என்ற பெயரில் வழிநூலாக எழுதப்பட்டது. ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற உப புராணம் தான் பின்னர் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் தமிழில் உருவெடுத்தது. பதினெண் புராணங்கள் எனப்படினும் அவை உண்மையில் வாயு புராணத்துடன் 19 என்று ரோமஹர்ஷனர் (அ) லோமஹர்ஷனர் கூற்றாக ஓர் ஆங்கில நூலில் வாயுபுராணத்துடன் சேர்த்து 19 பெயர்கள் தரப்பட்டுள்ளன. இந்த ரோமஹர்ஷனர் வியாசரின் சீடர்களில் முதன்மையானவர் என்றும், புராணங்களைக் கூறும் இனத்தவர் என்பதால் சூதர், சூதமுனிவர், சூதபவுராணிகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
புராணங்கள் சூதமுனிவரால் நைமிசாரணிய முனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்டுப் பின்னர் சீடர்கள் பலர் மூலம் பரவின என்பர். அவை வடமொழியில் இயற்றப்பட்ட பின் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. எனினும் புராணங்கள் முதன்முதலில் தோன்றிய வரலாறு பற்றி அகச்சான்றுகள் சில உள்ளன. எடுத்துக்காட்டுகள் :
1. சிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.
2. கூர்ம புராணம் - புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.
3. கருட புராணம் - கருடன் காசியபருக்குக் கூறினார்.
4. மார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது.
5. அக்கினி புராணம் - அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார்.
6. வராக புராணம் - வராகரே கூறினார்.
7. கந்த புராணம் - கந்தனே கூறி அருளினார்.
8. வாயு புராணம் - வாயுவாலேயே கூறப்பட்டதாகும்.
9. விஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.

ஓங்காரத்து உட்பொருள்

ஓங்காரத்து உட்பொருள்
கும்பகோணத்துக்கு அருகில் சுவாமிமலை என ஒரு தலம் இருப்பதை அனைவரும் அறிவர். இந்தத் தலத்து இறைவன் சுவாமிநாதன் சில குடும்பத்தினருக்குக் குலதெய்வமும் ஆவன். முருகன் சுவாமிநாதனான புராணக்கதையைப் பெரும்பாலான இந்துக்கள் அறிவர். இந்தக் கதையைச் சில வேறுபாடுகளுடன் கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருத்தணிகைப் புராணம், முதலிய தலபுராணங்களும், பாம்பன் சுவாமிகளின் குமாரசுவாமியம், குமரகுருபரரின் திருச்செந்தூர் கலிவெண்பா முதலிய தோத்திர நூல்களும் கூறுகின்றன.
தந்தையாகிய சிவனின் சிஷ்யபாவத்தையும் தனயனான முருகனின் குருபாவத்தையும் உள் அடக்கி, அருணகிரிநாதர், கந்தரநுபூதியில்,
“நாதா குமர நமஎன்று அரனார்
ஓதாய் எனஓதியது எப்பொருள்தான்”
என வினவி, முருகன் ஓதிய அந்தப்பொருள் இன்னதென நம்மை உய்த்து உணர விட்டுவிட்டார்.
இந்த நிகழ்ச்சியினால் முருகனுக்கு உபதேசமூர்த்தி, சுவாமிநாதன், பரமகுரு, குமரகுரு, குருபரன் எனக் காரணப் பெயர்கள் எழுந்தன.
ஓம் – பொதுமந்திரம்
‘ஓம்’ எனப்படும் பிரணவ மந்திரத்தை இந்துக்களில் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்துகின்றனர். இறைவனின் பெயர்களாகிய மந்திரங்களுக்கு முன் ‘ஓம்’ என்னும் ஓரெழுத்து மந்திரத்தையும் இறுதியில் போற்றி எனப்பொருள்படும் நம: என்ற சொல்லையும் இணைத்து, மந்திரத்தை உச்சரிப்பர். ஓம் ஸ்ரீ மாத்ரே நம:, ஓம் நாராயணாய நம: என்பன போல
சிவநெறியில் தோத்திரம் சாத்திரம் ஆகியவற்றில் “ஓம்’ எனும் பிரணவம் ஆளப் பெற்றிருக்கும் முறைமையையும் அவற்றில் கூறப்படும் பொருளைச் சுட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.
ஓங்காரத்தின் பலபெயர்கள்
பிரணவம், குடிலை, குண்டலி, பிரமம், பரம், சிவம், மாமாயை, சுத்தமாயை, நாதம், விந்து, வைந்தவம் எனப் பலபெயர்கள் ஓங்காரத்துக்கு உண்டு.
பிரணவத்திற்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தத்தால் அவ்விரண்டும் பிரணவமென்றோ சிவசத்தி என்றோ ஒருபெயரால் வழங்கப்படும். பிரணவம் சத்தியின் பெயராலும் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் பெயர்களாவன: பரை(பரன்), வாகீசுவரி(வாகீசுவரன்), வித்தை, மாயை, பரவிந்து(பரநாதம்), பராசத்தி(பரசிவன்), மாமாயை, குண்டலி என்பன.
பிரணவம் – பிரபஞ்ச வித்து
ஒருபொருள் தோன்ற மூன்று காரணங்கள் வேண்டும். அவை 1.முதற்காரணம்,(material cause) 2.நிமித்தகாரணம் அல்லது கருத்தா,. 3.துணைக்காரணம் அல்லது கருவி காரணம்.(instrumental cause) என்பன.
குடத்திற்கு மண் முதற்காரணம்;. குயவன் நிமித்த காரணம்;. தண்டசக்கரம் துணைக்காரணம்.
அதுபோல, பிரபஞ்சத் தோற்றத்துக்கு மாயை முதற்காரணம்;. சிவம் நிமித்தகாரணம்;. சிவசத்தி துணைக் காரணம்.
சிவம் முழுவதும் ஞானமே வடிவானது. சிவத்துடன் பிரிப்பின்றி இருப்பது சித்சத்தி. அது ஆற்றல் வடிவமானது. சிவத்துக்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தம் சூரியனுக்கும் சூரிய ஒளிக்கதிருக்கும் உள்ள சம்பந்தத்தைப் போன்றது. உலகுக்குச் சூரியனால் பயன் சூரியக்கதிர்களால் வருவதுபோல, உயிர்களுக்குச் சிவத்தால் வரும் நன்மை சிவசத்தியால் கிடைக்கிறது. சூரியன் ஒளியால் அறியப்படுதல்போல் சிவத்தைச் சிவசத்தியால் அறியப்படும்.
சிவத்துக்குச் சிவசத்தி போல இன்னொரு சத்தியும் உண்டு. அதற்குப் பரிக்கிரக சத்தி அல்லது வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளும் சக்தி என்று பெயர். இந்தப் பரிக்கிரகசத்தி ஜடசத்தி. ஜடம் என்றால் அறிவற்றது என்று பொருள். சித்சக்தி X ஜடசத்தி.
மாயை என்னும் பிரபஞ்ச முதற்காரணமாகிய ஜடசத்தி, சித்சத்தியைத் தாரகமாகக் கொண்டிருக்கும். சித்சத்தி சிவத்துடன், சூரியன் சூரியஒளி போலக் குணி குணசம்பந்தத்துடன் இருக்கும்.
இந்த மாயையே பிரணவம். இது சித்சத்தியுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் இப்பிரணவம் சித்சத்தியின் வடிவம் என்றும் கூறப்படும்.
மாயையும் சத்தியும் சம்பந்தப்பட்டு இருப்பதைக் காட்டும் ஒரு பெயர் மாயாசத்தி.
சித்சத்தியை குணமாகவும் சிவத்தைக் குணியாகவும் கொள்ளும் ஒருவடிவத்தில் சித்சத்தியாகிய பிரணவம் சிவவடிவம் என்றும் கொள்ளப்படும்.
சிறுமீன் கண்ணைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் அதன் விதையில் நால்வகைபடையுடன் அரசர் தங்குவதற்கேற்ற நிழலை அளிக்கத் தக்க பெரிய விருட்சம் தோன்றும் ஆற்றல் அடங்கி இருப்பதுபோல , இந்த மாயையில் மகத்தான பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூலம் அடங்கியிருக்கும்.
பிரணவமே உலகத்துக்கு முதற்காரணம்.
இதனைத் திருமந்திரம்,
“ஓங்காரத்தின் உள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த சராசரம்
ஓங்காரம் அதீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ ரூபமே” (தந்திரம்9)
எனக் கூறியது.
மாயை சடப்பொருளாயினும் சிவசத்திசம்பந்தத்தால் அறிவுடைப்பொருள் (சேதனம்) ஆகவே கொள்ளப்படும்.
ஓங்காரம் சிவசொரூபம்
“கைலாஸ சிகராவாஸம் ஓங்கார ஸ்வரூபிணம்
மஹாதேவம் உமாஅர்த்த க்ருதசேகரம்”
என அதர்வண வேத மாண்டூக்யோபநிஷதமும்,
“துறந்தோர் குடிலை சிவனுருவம் என்றே உணர்ந்து சொல்லுவார்”
என வாயு சங்கிதையும் கூறுவதால்,
குணம் குறி கடந்த சிவபரம்பொருள், உயிர்களை உய்விக்க எடுத்துக் கொள்ளும் திருமேனிகளில் ஒன்று, ஓங்காரம் என்னும் பிரணவத் திருமேனி.
“உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” (திருவாசகம், சிவபுராணம்,33)
‘நான் உய்யும் பொருட்டு என் உள்ளத்துள் பிரண வடிவமாக நிலைபெற்றுள்ள உண்மைப்பொருளே’ என்பது இதன் பொருள்.
ஓம் என்பதன் பொருள் சிவமே
உயிரில் சிவம் ஓங்காரமாய் நிற்கும் உபகாரம்
உயிர்கள் வினைகளைச் செய்து அவற்றின் பயன்களை நுகருதல் வேண்டும். அதனால் அனுபவம் ஏற்பட்டு ஆணவமலம் அல்லது அறியாமை என்னும் மறைப்பு சிறிது சிறிதாக நீங்கும்; அறிவு வளரும். வினைகள் உடலாலும் வாக்காலும் மனத்தாலும் செய்யப்படுவன. உடலாலும் வாக்காலும் வினைசெய்வதற்கு முன் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களில் செயல் பற்றிய சிந்தனை முகிழ்க்கின்றது.
அந்தக்கரணங்கள் அறிவற்ற சடம் ஆகையால் அவற்றோடு அறிவுடைய சித்துப் பொருளாகிய உயிர் கூடினால்தான் அவற்றின் இயக்கம் உண்டாகும். செம்பில் களிம்பு போலவும் நெல்லுக்கு உமிதவிடு போலவும் உயிர் அறியாமையாகிய ஆணவத்தால் அநாதியாகவே கட்டுண்டது. உயிர் தானாக இயங்கும் சுதந்திரம் இல்லாதிருக்கின்றது. ஆகவே இறைவன் உயிர்களின் உள்ளத்தில் பிரணவ வடிவமாக நின்று இயக்குகின்றான்.( விரிவினைச் சிவஞானமாபாடியம் சூத்திரம் 4, அதிகரணம் 1 காண்க)
சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக் கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக மாணிக்க வாசகர், “”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” (திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்.
இது, சைவசித்தாந்தத்தில், சிவம் உயிருக்குள் உயிராக நின்று உயிரின் உணர்வினை நிகழச் செய்கின்ற முறையைக் கூறுவதாகும்.
ஓங்காரத்தின் வழி சிவம் ஆன்மாவின் இச்சை கிரியை ஞானங்களை எழுப்பிச் வினையை அனுபவிக்கச் செய்து மலபரிபாகம் வருவித்து முத்தியை அளிக்கும் நெறியைச் சைவசித்தாந்த சாத்திரங்கள் கூறுகின்றன.
சிவமே ஓங்காரத்தின் உட்பொருள் எனத் திருமுறைகள் கூறுகின்றன.
* ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவனாகும்
* ஓங்காரன்காண்
* ஓங்காரத் துட்பொருளாய் நின்றான்காண்
* ஓங்காரத் தொருவனை
இவை போன்ற சொற்றொடர்கள் திருமுறைகளில் உள்ளன.
ஓங்காரம் –ஓரெழுத்து மந்திரம்
சிவம் கருணையால் கொள்ளுகின்ற வடிவங்களில் மந்திர வடிவமும் ஒன்று. சிவபரம்பொருளை வழிபடுபவர்கள் மந்திர எழுத்துக்களில் வைத்து வழிபடுவது வழக்கம். அம்முறையில் ஓங்காரம் சிவனது திருமேனி.
ஓங்காரம் சப்தவடிவினது. அது சுத்தமாயை என்னும் அறிவற்ற சடப்பொருளின் விருத்தி. சிவசத்தி சுத்தமாயையில் கலந்து இயக்கிக் கொண்டிருப்பதால்,அது சிவனின் திருமேனியாக உபசாரமாகச் சொல்லப்படும்.
முருகனே ஓங்கரத்துட்பொருள்:
“ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம்கண்டு
தூங்கார் … … என்செவார் யமதூதருக்கே”
என்ற கந்தர் அலங்காரப் பாடலுள் முருகனே ஓங்காரத்துட்பொருள் என அருணகிரிநாதர் பாடுகின்றர்.
திருப்புகழ் ஒன்றில், “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” என்ற அடியில், ‘ஓம்” என்ற ஓரெழுத்து மந்திரமே, தன்னுள் அடங்கியிருந்த திருவைந்தெழுத்து மந்திரங்களையும் விரியச் செய்து ஆறெழுத்து மந்திரமாயிற்று என உணர்த்தினார்.
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர சுவாமிகள், முருகன் ஓங்காரத்து உட்பொருளாக இருப்பதை,
” ஓதிய ஐந்து,
ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே!”
என்று பாடினார்.
ஐந்து முகங்களைக் கொண்ட சிவமாகிய ஒரு பரம்பொருளே “குருசிஷ்ய பாவ”த்தின் மேன்மையை உலகு அறிந்து உய்யும் பொருட்டு , இரண்டு பொருளாகி, அரன் சீடனாகவும் குமரன் குருவாகவும் திருவிளையாடல் புரிந்தது என அறிதல் வேண்டும்.
விநாயகனே ஓங்காரத்துட் பொருள்
கச்சியப்ப முனிவர் தம்முடைய விநாயகபுராணத்தில் பிரணவம் என்பது ஏகாட்சரம் என்னும் பெயருடைய மந்திரம் என்றும் அது விநாயகப் பெருமானுக்கு உரிய மந்திரம் என்றும் கூறியுள்ளார். யானைமுகப் பெருமானின் முகத் தோற்றமே ஓம் எனும் ஓரெழுத்துமந்திரம் போலக் காட்சி அளிக்கும்.
ஓங்காரத்துள் பிரபஞ்சம் எல்லாம் அடங்கும் என்பதைக் காட்டவது விநாயகப் பெருமானின் பேழை வயிறு.
விநாயகன், கணபதி எனும் பெயர்கள் சிவனுக்கும் உண்டு. விநாயகனே சிவன். சிவனே விநாயகன்
விநாயகனும் முருகனும் சிவனின் தடத்த வடிவங்களே. எனவே, இவ்விருவரை வழிபடுவது சிவ வழிபாடே.
பிரமன் செய்த குற்றம்
சைவசித்தாந்தம் சத்காரிய வாதம் பேசும். அதாவது’ உள்ளதுதான் தோன்றும்; இல்லது தோன்றாது’. உள்ளது போகாது; இல்லது வாராது’ என்பது சத்காரிய வாதம். சத்காரியவாதத்தில் உள்ளபொருள் முற்றாக அழிந்து விடுவதில்லை. காரியமான பொருள் அழியும்போது அதன் முதற்காரணத்தில் அடங்கும். மண்குடம் அழியும்போது அதன் முதற்காரணமான மண்ணாகும். பொன்னால் ஆன நகை அழியும்போது அதன் முதற்காரணமான பொன்னாகும்.
மாயா காரியமான பிரபஞ்சம் அதன் முதற்காரணமான(material cause) மாயையில் ஒடுங்கும். மீளத் தோன்றும்போது எதில் ஒடுங்கியதோ அதிலிருந்துதான் தோன்றும். பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவன்தான் அதனை ஒடுங்கியதிலிருந்து அதனை மீளத்தோற்றுவிப்பான். எனவே சங்கார காரணன் அதாவது பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவனே மீளத் தோற்றுவிக்கும் கருத்தாவுமாவன்.
எனவே, படைத்தல் தொழிலைப் புரியும் பிரமன், அழித்தல் தொழிலின் பின் நிகழும் உண்மைகளை உணரான். முத்தொழிலுக்கும் கருத்தாவாகிய முதல்வன் சங்கார கருத்தா ஆகிய சிவனே ஆவன். அவனே பிரபஞ்சத்தைப் பிரணவமாகிய முதற்காரணத்தில் ஒடுக்குபவன். ஒடுங்கிய அந்தக் காரணத்திலிருந்து சங்கார கருத்தாவாகிய அவனே மீளத் தோற்றுவிப்பவன். அதனால் பிரணவத்தின் உண்மைப் பொருள் பிரமப் பெரும்பொருளாகிய சிவமே என்று அறியாமல், படைத்தல் தொழிலைச் செய்கின்ற தானே பிரணவப் பொருள் என்று அகந்தையில் கூறினான். அதனால் முருகனால் தண்டிக்கப்பட்டான் என்பது புராணக் கதை. புராணக் கதையைச் சாத்திரப் பின்னணியில் உணரவேண்டும்.
முடிவுரை:
ஓங்காரத்தின் தோற்றமும் பொருளும் மேலோட்டமாக ஒருவாறு விளக்கப்பட்டது. இங்குக் கூறப்பட்டவை மிகக் குறைவே. ஞானசாத்திரங்களைக் கொண்டு விரிவாக விளக்கம் பெறல் வேண்டும்.

பரசுராமர்

பரசுராமர்
பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.
பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன். அவனை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதிராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை பிருகு புத்திரரான ரிசிகன் என்ற பிராமணன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான். சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன், எப்படியாவது அவனைத் தட்டிக் கழிக்க ஓர் உபாயம் செய்தான். அவன் ரிசிகனைப் பார்த்து, பிராமணரே! நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா? என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா! நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும்! என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான். கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது.
அதே சமயம் சத்தியவதியின் தாய் காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால் தனக்குப் பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாகப் பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞானக்குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடணம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாகனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாகச் சொல்லி சத்தியவதியை உண்ணும்படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்னக் கவளைகளை அளித்து விட்டு ரிசிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான்.ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசியாகப் பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும்! என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் மொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கை. இப்படிக் கொண்டு வந்த தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.
சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.
ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தவீரியன். வேட்டையை முடித்துவிட்டு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களைக் கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார். மற்றும் பல சவுகர்யங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. முனிவர் ஆசிரமத்தில் நின்ற தேவ பசுவாகிய காமதேனுவால்தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார். இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.
ராமா, காரணம் இல்லாமல் ஓர் அரசனைக் கொன்று விட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய ÷க்ஷத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா! என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்சனைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். மறுபடி அன்னை உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.
ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும் போதே ரேணுகா தேவி சிரசு வெடிக்கும்படி கதறினாள். அரசகுமாரர்களே! அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது? தரும தேவதைகளையும் தலை முழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். அவளுடைய அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார். பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.
ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.
மகாபாரதத்தில் பரசுராமர்: காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய் மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளைச் சாலுவனிடம் அனுப்பினார். ஆனால் அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடமிருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தாள். சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம்வரத்தின் போது என்னைக் கவர்ந்து வந்த நீர்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். பீஷ்மரோ தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் ஏற்றிருப்பதால் தாம் அவளை மணம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும், அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, அவர் என்னை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்வதுதான் க்ஷத்திரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரைச் சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்திப் பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்தார். பீஷ்மர், நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய, விரதத்தை மீறி நரகத்திற்குப் போவதற்காக உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார். போரில் பரசுராமர் தோற்றார். பின்பு தவம் செய்யச் சென்றார். மகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார்.
பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குரு÷க்ஷத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று இயம்புகிறார்.
கோயில்கள்: பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம ÷க்ஷத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.

கெட்ட கனவு தொல்லையை நீக்கும் ஆஞ்சநேயர் மந்திரம்

கெட்ட கனவு தொல்லையை நீக்கும் ஆஞ்சநேயர் மந்திரம்
இது ஸ்ரீஆஞ்சநேயரின் அரிய மந்திரமாகும். இதை ஆஞ்சநேயரின் சன்னிதியில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். ஒரு செவ்வாய்க்கிழமையன்று காலையில் குளித்து முடித்து, விரதம் அனுஷ்டித்து, கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு சிவப்பு நிறக் கயிற்றில் ஒன்பது முடிச்சுகளை இட வேண்டும். ஒவ்வொரு முடிச்சுக்கும் ஒருமுறை கீழ் கண்ட மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்.
'ஓம் ஹம் ஓம் ஹம் ஓம் ஹநுமதே ஃபட்'
...
என்ற மந்திரத்தை கூறி, ஒன்பது முறை முடியிட்ட பின்னர், அதை ஒரு சிவப்பு நிற துணியில் வைத்து விட வேண்டும். அன்று மாலையில் ஆஞ்சநேயரின் சன்னிதியில் அவருடைய பாதத்தில் அந்த சிவப்பு நிறக்கயிறை வைத்து அர்ச்சனை, ஆராதனைகள் செய்து அங்கேயே அந்த சிவப்புக் கயிற்றை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அவரது சன்னிதியிலேயே அமர்ந்து இந்த மந்திரத்தை 27 முறை உச்சாடனம் செய்வது அவசியம். பிறகு 9 முறை பிரதட்சணம் செய்து விட்டு வீடு திரும்பலாம். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும், அவரவரது ஜென்ம நட்சத்திரங்களிலும்,
பிறந்த வாரங்களிலும் ஆஞ்சநேயர் சன்னிதியில் இந்த மந்திரத்தை 27 முறை உச்சாடனம் செய்துவர வேண்டும். கெட்ட கனவுகள் வருவது நின்ற பின்னர் அந்தக் கயிற்றை ஏதாவது ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ சேர்ப்பித்துவிட வேண்டும். இந்த காலகட்டத்தில் அசைவம் தவிர்ப்பது முக்கியமாகும்

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?
தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்பதே மன்னரின் சந்தேகம். அரசரின் சந்தேகத்திற்கான பதிலை சிற்பி ஒருவர், ஒரு சிலையின் மூலமாக விளக்கினார். அதை கேட்டு இராஜராஜ சோழன் மகிழ்ந்து, ஆயிரம் பொன் பரிசு தந்து, தஞ்சை பெரிய கோவிலுக்கான சிற்ப வேலைகளுக்கான பொறுப்புகளையும் அந்த சிற்பிக்கே தந்தார். இராஜராஜ சோழனின் கேள்விக்கு விடை தந்த சிற்பி வடித்த சிலை என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும். ஆயிரம் பொன் பரிசு மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு கேள்வி எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி. “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள், யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள். மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார். முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?” அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” என அதை நிராகரித்தார் மன்னர். அடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார். அடுத்து, அழகான மலர்கள் இருந்தன. “இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?. அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது. “நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?” என்று கூறி அதனையும் நிராகரித்த மன்னர் இராஜராஜ சோழர், அடுத்தாக ஒரு பெரிய சிவலிங்கத்தின் அருகில் வந்தார். அந்த சிவலிங்கத்தின் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிற்பத்தின் கீழே “அன்பே சிவம்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார் மன்னர். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார். “நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.” என்றார் மன்னர் அந்த சிற்பியிடம். “அரசே நான் ஒரு சிற்பி, இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான். சிவலிங்கத்தின் கீழே ஒரு பெண்மணி அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள். இந்த உலகில் அன்பை மட்டும்தான், கண் தெரியாதவர்ளும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும் அன்பைதான் எதிர்பார்க்கிறார்கள். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது. அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும். அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும் அன்பு. அன்புதான் இறைவன். அதனால்தான் சிவலிங்கத்தின் கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து, ”அன்பே சிவம்” என்று எழுதி வைத்தேன்.” என விளக்கினார் சிற்பி. இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார். “உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம். நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள்.” என்று கூறி ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து, ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர். அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?. அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. அன்பே சிவம்.!

குழந்தைப்பேறு தரும் தந்திரம்!

குழந்தைப்பேறு தரும் தந்திரம்!
அகத்தியர், சித்தர் பாடல், சித்தர்கள்
நமது சமூகத்தில் திருமணமாகி ஒரு கால கட்டத்திற்குள் குழந்தைச் செல்வங்களை பெற்றெடுத்து விடுவது தொடரும் மரபாக இருக்கிறது. இந்த கால கட்டத்தை தாண்டிய குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் சமூகத்தின் கவனிப்புக்கும், பேச்சுக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது. நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாக்கப் படுவது நிதர்சனம். தற்போதைய நவீன மருத்துவம் பலவேறு தீர்வுகளை தந்துவிட்ட சூழலில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் ச...ித்தர் பெருமக்கள் இதற்கான எளிய தந்திரம் ஒன்றினை அருளியிருக்கின்றனர். கொஞ்சம் சுவாரசியமானதுதான், வாருங்கள் தெரிந்து கொள்வோம்..
"அட்சரமாஞ் சிகாரமுதல் சகலபூவாம்
சிறப்புனனே யிருந்துதான் வருணன்மூலை
நிசமான தாமரையின் மணிதானாவல்
நிலையான பலகையது நீலவஸ்த்ரம்
தலையான வருவைந்து நூறுபோடு
சகலபில்லி சூனியங்கள் தெறித்துப்போகும்
மலையாதே பெரும்பாடு முடனேதீரும்
மங்கையர்க்கு மதலையுண்டா மலங்கிடாதே."
- அகத்தியர் -
நாவல் மரத்தின் பலகை ஒன்றை எடுத்து அதில் “சிவயநம” என்கிற சிவ மந்திரத்தை எழுதிட வேண்டும். பின்னர் அந்த பலகையின் மீது தாமரை மணிகளையும், ஒரு பூவினையும் வைத்திட வேண்டுமாம். நீல நிறத்திலான ஆடை அணிந்து கொண்டு, மேற்கு முகமாய் அமர்ந்து நாவல் மரத்தின் பலகையை முன்னர் வைத்துக் கொள்ள வேண்டும். “சிவயநம” என்கிற சிவ மந்திரத்தை செபித்தவாறே ஒவ்வொரு பூவாக, ஐநூறு முறை அந்த பலகையின் மீது பூக்களை போட வேண்டுமாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் பெண்களை பீடித்திருக்கும் பில்லி,சூனியம் போன்றவை விலகி, பெரும்பாடு என்ற நோயும் தீர்ந்து போவதுடன் குழந்தை பாக்கியமும் கிட்டும் என்கிறார் அகத்தியர். தேவையுள்ளவர்களுக்கு இந்த முறையை பரிந்துரைக்கலாம்.
Mehr anzeigen

விளக்கு வைக்கும் நேரத்தில் (சாயங்காலத்தில்) தூங்கக் கூடாது என்பது ஏன்?

விளக்கு வைக்கும் நேரத்தில் (சாயங்காலத்தில்) தூங்கக் கூடாது என்பது ஏன்?
பகலும் இரவும் ஒன்றுசேரும் நேரத்துக்கு சந்த்யா காலம் (சேரும் நேரம்) எனப் பெயர். இரவு முடிந்து பகல் ஆரம்பமாகும் அதிகாலை நேரம் மற்றும் பகல் முடிந்து இரவு ஆரம்பமாகும் சாயங்கால நேரம் என்பதாக ஒரு நாளில் இரண்டு முறை சந்த்யா காலம் சம்பவிக்கிறது.
இந்த வேளையில், சூரிய மண்டலத்தில் இருக்கும் காயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளின் கூட்டு ஸ்வரூபமான சந்த்யா என்னும் தேவி (ஆகாசத்தில்) காட்சி தருகிறாள். அந்த சமயத்...தில், இந்த தேவியை உபாசிக்க (வழிபட) வேண்டும்.
சூரிய ஒளியில் வழிபடும் இது - அருவ வழிபாடுமில்லை; உருவ வழிபாடுமில்லை. இதற்கு வடமொழியில் ‘சந்த்யோபாஸனை’ எனப் பெயர். ஆண், பெண் என (ஜாதிமத பேதமின்றி) அனைவரும் இந்த உபாசனையைச் செய்து பலனடையலாம். ஆகவே தான், வேதம் கற்ற அந்தணர்கள் இந்த காலங்களில் சந்த்யாவந்தனம் என்னும் கர்மாவைச் செய்து சூரியனுக்கு அர்க்யம் தந்து, காயத்ரீ மந்திரத்தை ஜபம் செய்கிறார்கள்.
மற்றவர்களும் இந்தக் காலத்தில் சூரியனை நோக்கி பிரார்த்தனை செய்து இரு கைகளிலும் சுத்தமான ஜலம் எடுத்து சூரியனை நோக்கி அர்க்யம் விட வேண்டும். இதனால் சந்த்யா தேவியின் அருள் கிட்டும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம், மனச்சாந்தி முதலானவை கிட்டும் என்கிறது சாஸ்திரம்.
இவ்விதம் வழிபடாவிட்டாலும் பரவாயில்லை. அந்த தெய்வத்தை அவமதிக்கும் செயலையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதாவது சந்த்யா காலங்களில் - சாப்பிடுதல், காபி, டீ போன்ற பானம் அருந்துதல், படுக்கையில் படுத்துக் கொண்டிருத்தல், புதிய பாடம் கற்றுக் கொள்ளுதல், தூங்குதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இந்த வேளையில் காட்சிதரும் தெய்வத்தை வழிபடாமல் தூங்கிக் கொண்டிருந்தால், அந்த தெய்வத்தை நாம் அவமதித்ததாக ஆகும். தெய்வ அவமதிப்பு, நம்மிடமுள்ள செல்வத்தை அபகரித்துவிடும்.
சூர்யோதயே ச அச்தமயே ச ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம்
‘சூரிய உதயம், சூரிய அஸ்தமன காலங்களில் தூங்குபவர் யாராக இருந்தாலும், ஏன்! தேவேந்திரனாக இருந்தாலும் கூட, அந்த நபரை விட்டு (செல்வத்தைத் தரும்) மகாலட்சுமி விலகிச் சென்றுவிடுவாள்’
என்கிறது சாஸ்திரம். நோயுற்றவர்கள் எனில், படுக்கையில் சாய்வான முறையில் அமர்ந்து கொள்ளலாம்.

தெருவில் சவ ஊர்வலம் போகும் போது கோவில் கதவுகளை வேகமாக மூடிவிடுகிறார்களே. ஏன் இது?

தெருவில் சவ ஊர்வலம் போகும் போது கோவில் கதவுகளை வேகமாக மூடிவிடுகிறார்களே. ஏன் இது?
பொதுவாக சவ ஊர்வலம் வரும்பொழுது கோவில் கதவை மூடுவது தீட்டுபடக் கூடாது என்று சொல்வார்கள். யாருக்கு தீட்டு கடவுளுக்கா? இல்லை. இறந்து போனவருக்கா? இல்லை.
மனதில் ஒரு குறைபாடு வரக்கூடாது என்று இந்த விஷயம் நடைபெறுகிறது। அந்த பிணத்தோடு போகிறவர்கள், அந்த ஊரைச் சார்ந்தவராக, அந்த இருப்பிடத்தை சார்ந்தவராக இருப்பார்। தினம் தினம் உன்னை வழிபாடு செய்துக் கொண்டிருக்கிறேனே, என்னுடைய சகோதரனை அல்லது தகப்பனை, அல்லது ...மகனை, அல்லது நெருங்கிய உறவினனை, நண்பனை பிரித்து எடுத்துக் கொண்டு போய்விட்டாயே। நீ தெய்வமாக இருந்தும் எனக்கு இப்பேர்ப்பட்ட துன்பம் வந்ததே என்று அந்த இடத்தை கடக்கும் போது அந்த கடவுள் மீது கடுமையான ஒரு அவநம்பிக்கை வரும்। கடவுள் இல்லை என்று நினைக்கத் தோன்றும்।
வேதனைப்படுகின்ற நேரத்தில் கடவுளைப் பற்றிய அவநம்பிக்கை வந்துவிடக்கூடாது. அது வேரூன்றி விடும் என்பதற்காக அந்த இடத்தை சட்டென்று மறைக்கிறார்கள். அந்த இடத்தைக் கடக்கும் போது வெறும் கதவைப் பார்த்துக் கொண்டு அவர் போவார். அதனால் அந்த கடவுள் நம்பிக்கை அவரிடம் அசையாது இருக்கும். அவநம்பிக்கை வராது இருக்கும் என்பதுதான் உண்மையான் ஐதீகம்.

சடாரியில் திருமுடியின் மேல் திருவடி

சடாரியில் திருமுடியின் மேல் திருவடி
அது புனிதமான கங்கைக்கரை. மரவுரி தரித்து தவக்கோலத்தில் வீற்றிருக்கிறான் ஸ்ரீராமன். அருகில் அன்புத் தம்பி லட்சுமணனும், பதியை விட்டுப் பிரிய மனமில்லாமல், மரவுரி தரித்து உடன் வந்த மனைவி ஜானகியும் பணிபுரிந்து நிற்கின்றனர். பாசத்தால் ஸ்ரீராமனைப் பரவசப்படுத்திய கங்கை வேடன் குகனும், அவன் பரிவாரமும் புடைசூழ்ந்து நிற்கின்றனர். துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகக் கருதும் ஸ்ரீராமனின் நிர்மலமான உள்ளத்தைக்கூட அப்போது உலுக்கியது, அவனது காலடியில் விழுந்து கதறி அழும் தம்பி பரதனின் கண்ணீர். தனக்கு இல்லையென்று ஆகிவிட்ட ராஜ்யத்தைதான் துறந்து வந்தான் ஸ்ரீராமன். ஆனால், தனக்கென கிடைத்த ராஜ்யத்தைத் துறந்து வந்திருந்தான் பரதன். ஸ்ரீராமன், கடமையை நிறைவேற்றக் கானகம் வந்திருந்தான். ஆனால் பரதனோ, அண்ணனின் பாதச் சுவட்டைப் பின்பற்றி, அரசைத் துறந்து, மரவுரி தரித்து, கானகம் செல்வதையே கடமையாக ஆக்கிக்கொண்டு வந்திருந்தான். ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவாரோ...? என்ற கம்பன் கவிதைக்கு அத்தாட்சியாக அங்கே நின்று கொண்டிருந்தான் பரதன். தந்தை இறந்த செய்தியைத் தெரிவித்து, தலைவன் இன்றித் தவிக்கும் அயோத்தி மக்களின் கண்ணீரைக் காரணம் காட்டி, நாடு திரும்பி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மக்களைக் காக்க வேண்டுமெனக் கதறி அழுதான் பரதன். மறைந்த தசரதனின் புகழ் வாழ வேண்டுமானால், அவர் தந்த வாக்கு நிறைவேற வேண்டும். அதற்குத் தனது ஆரண்யவாசம் ஒன்றுதான் வழி! என்று பரதனின் வேண்டுகோளை மறுத்துவிட்டான் ஸ்ரீராமன். நாடு திரும்ப ஸ்ரீராமன் விரும்பவில்லை; நாட்டை ஆள பரதன் தயாராக இல்லை.
வனவாசம் மேற்கொண்டு, தந்தை சொல் காத்த தனயன் எனப் பெருமை பெற்றான் ஸ்ரீராமன். அண்ணன் ஸ்ரீராமனுக்கு சேவை செய்ய வனவாசத்தை வலிய ஏற்று வந்து, தியாகி என்ற புகழைப் பெற்றான் லட்சுமணன். தந்தை தசரதனுக்கு ஈமச்சடங்கு செய்யும் பாக்கியம் பெற்றான் சத்ருக்னன். ஆனால், பாவி கைகேயி வயிற்றில் பிறந்த பாவத்தால், எத்தகைய பெருமையும் பெற இயலாத துர்பாக்கியவனாக நின்றான் பரதன். முடிவில், வேறு எந்த வழியும் தெரியாமல், ஸ்ரீராமபிரானின் பாதுகைகளை யாசித்தான் பரதன். அவற்றையே சிம்மாசனத்தில் வைத்து, ஸ்ரீராமனின் பிரதிநிதியாக அரசை நடத்திச் செல்ல, அனுமதி கேட்டு நின்றான் அவன். பரதனின் அன்புக்குக் கட்டுப்பட்டான் ஸ்ரீராமன். கண்ணீர் மல்க, தனது பாதுகைகளை பரதனுக்கு வழங்கினான். அண்ணலின் திருவடிகளை வணங்கி, அவரது பாதுகைகளைச் சிரத்தில் தாங்கி, அயோத்தி வந்தான் பரதன். பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து சத்ருக்னனோடு, நித்திய பூஜை செய்து வழிபட்டான். பாதுகைகளுக்குப் பட்டாபிஷேகம் செய்த பெருமை பரதனுக்குக் கிடைத்தது. என்னதான் ஸ்ரீராமன் சிறப்பானவன் என்றாலும், அரசர்கள் அமரக்கூடிய புனிதமான சிம்மாசனத்தில், பாதத்தில் அணியும் பாதுகைகளை வைக்க அனுமதிக்கலாமா? ஸ்ரீராமனுக்குப் பிரதிநிதியாக வேறு ஏதாவது உயர்ந்த பொருளை பரதன் யாசித்திருக்கக் கூடாதா? தேவர்களுக்கு ஒப்பான சூரிய குல மன்னர்கள் வீற்றிருந்த மகிமைமிக்கதொரு பீடத்தில் வெறும் பாதுகைகளா?
ராமன்தான் முடி துறந்து சென்றானே, அந்தத் திருமுடியையே சிம்மாசனத்தில் வைத்திருந்தால் போதுமே... என்றெல்லாம் சில கேள்விகள் அப்போதும் எழுந்தன; இப்போதும் எழுகின்றன. பரதன் தவறு செய்துவிடவில்லை. ஸ்ரீராமன் துறந்து சென்ற திருமுடியை சிம்மாசனத்தின் மேல் வைத்து, அதன் மீதுதான் அண்ணல் ஸ்ரீராமனின் பாதுகைகளை வைத்திருந்தான். திருமுடிக்கு மேலே அமரும் பாக்கியத்தை அந்தப் பாதுகைகள் பெற்றதற்கு ஒரு காரணமும் இருந்தது. அது-நமக்குத் தெரிந்த புராணத்தில் தெரியாத கதை!
ஒருமுறை, தான் கொலு வீற்றிருக்கும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமானார். சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். வழக்கமாகத் தன் பாதுகைகளை துவார பாலகர்கள் அருகே விடும் பரந்தாமன், அன்று மட்டும் அவற்றைக் கழற்றி, ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது. திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிபுங்கவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றார் பரந்தாமன். அப்போது, பாதுகைகளை அங்கேயே விட்டுவிட்டார்.
ஆதிசேஷன் மீது அலங்காரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அது அழகாகத்தான் இருந்தது. ஆனால், பாவம்... அருகிலேயே பாதுகைகளும் இருந்தன. இது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே துவளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்? என்று கேட்டன. இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார் என்றன பாதுகைகள். பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம்.
கிரீடம் இப்படிச் சொன்னதும் பாதுகைகளுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான் என்று வாதிட்டன பாதுகைகள்.
கிரீடம் விடுவதாக இல்லை. சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், அந்தக் கட்சி பலமுள்ளதாக இருந்தது. பாவம்.... ஆதிசேஷன்! நடு நிலைமை வகித்து, இவற்றின் அறியாமையை எண்ணி, அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தார். தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி நின்றிருந்தன. பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். சாதுக்களை ரட்சித்து, துஷ்டர்களை சம்ஹரித்து, தர்மத்தை நிலைநாட்ட நான் அவ்வப்போது பூமியில் அவதாரம் செய்வேன். அத்தகைய அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது! என்றார் பகவான்.
சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே! ஒன்றிற் சிறியர் ஒன்றிற் பெரியராம் ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியராம் என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்க திருமுடியும, பாதுகையும் சங்கமமான கதையே பாதுகா பட்டாபிஷேகம்!
வைணவக் கோயில்களில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். திருமுடி மேல் திருவடி என்பதே சடாரி. அதைத் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம் ஆணவம், அகங்காரம் ஆகியவை அழியவேண்டும் என்பதே தத்துவம்!
திருமுடி மேல் திருவடி என்பதே சடாரி , இதுவே இறைவன் வகுத்த நியதி

ராம ராம' என்று ஜெபித்துக் கொண்டிருந்தால்போதும்.

ராம, ராம, ராம, ராம, ராம,ராம
ராம ராம' என்று ஜெபித்துக் கொண்டிருந்தால்போதும். வேறு எந்த பூசையோ, சந்தி, ஜெப தபங்களோ செய்ய வேண்டியதில்லை. எல்லா நன்மைகளும், கிடைக்க வேண்டிய எல்லாப் பலன்களும் ராம நாம உச்சரிப்பில் கிடைத்து விடும் என்கிறார் சித்தர் சிவவாக்கியர்.
அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்...
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே

- என்ற பாடலின் மூலம் ராம நாமத்தின் பெருமையைச் சொல்கிறார் சித்தர் சிவவாக்கியர்.
அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் ராம நாம உச்சரிப்பில் கிடைக்கும். சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், ராம நாம உச்சரிப்பில் கிடைக்கும். உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் ராம நாமத்தால் நன்கு வளர்ச்சியடையும் என்று ராம நாமப் பெருமையை எடுத்துரைக்கின்றார் சித்தர் சிவவாக்கியர்

Sunday, May 4, 2014

சுகபிரம்மர்

சுகபிரம்மர்
குருஷேத்திரத்தில் வேதவியாசர் ஹோமத்திற்கான அக்னியை தயார் கொண்டிருந்தார். அப்போது, கிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி அங்கு வந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய வியாசர், தான் ஒரு தபஸ்வி என்பதையும் மறந்து அவளது அழகில் மனதைப் பறி கொடுத்தார். கிருதாசீயும் அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டாள். தவசிரேஷ்டரின் மனதில் சபலம் ஏற்பட்டால், சாபத்திற்கு ஆளாவோமே என்ற பயத்தில் தப்பியோட முயன்றாள். நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தைப் பெறும் கிருதாசி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். கிளிகள் கூட்டமாக ஓரிடத்தில் நின்றன. தானும் ஒரு பச்சைக் கிளியாக மாறினாள். கிளிக்கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள். அவள் கிளியாக மாறிய பின்னும்கூட, வியாசரால் அவளை மறக்க முடியவில்லை. அவரது அந்த நினைவே, அந்தக் கிளியை கர்ப்பமாக்கியது.மீண்டும் சுயவடிவமெடுத்த கிருதாசீ தான் கர்ப்பமாக இருப்பதை <உணர்ந்தாள். அவளுக்கு கிளி முகத்துடன் ஒரு பிள்ளை பிறந்தான். (வேறு சில வழிகளில் ஹோமகுண்டத்தில் அவர் பிறந்தார் என்றும் சொல்வதுண்டு) அப்பிள்ளை தான் சுகபிரம்மர். சுகம் என்றால் கிளி. தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார் வியாசர்.குழந்தையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். உடனே குழந்தை சிறுவனாக மாறினான். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவேண்டுமா? வியாசரின் பிள்ளைக்கும் அவரைப் போலவே எல்லா ஞானமும் ஆற்றலும் அறிவும் இயல்பாக இருந்தன. இருந்தாலும் சம்பிரதாயத்திற்காக தேவகுரு பிரகஸ்பதி சுகருக்கு வேதங்களைக் கற்பித்தார்.
சுகபிரம்மத்தின் பெருமையை நமக்கு தெரியச் செய்த பெருமை பரீட்சித்து மகாராஜாவையே சாரும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் பேரன் இவர். பரீட்சித்துவின் தந்தை அபிமன்யு. இந்த மன்னன் பிறவியிலேயே விஷ்ணுவின் அருள்பெற்றவன். பாண்டவர்களின் வம்சத்தை அழிக்கும் எண்ணத்தில் இருந்த கவுரவர்கள், அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த பரீட்சித்து மீது பிரம்மாஸ்திரத்தை ஏவியபோது, விஷ்ணு தன் சக்கரத்தால் அதை தடுத்து நிறுத்தினார். பிறக்கும் முன்பே விஷ்ணுவால் காப்பாற்றப்பட்ட பரீட்சித்து, ஒரு சமயம் காட்டில் வேட்டைக்குச் சென்ற இடத்தில் தாகம் உண்டானது. தண்ணீர் தேடிச் சென்ற போது, வழியில் சமீகர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். வாசலில் நின்று தண்ணீர் கேட்டார். ஆனால், காதில் வாங்கிக் கொள்ளாமல் நிஷ்டையில் இருந்தார் சமீகர்.கோபம் கொண்ட மன்னன் பரீட்சித்து, காட்டில் கிடந்த செத்த பாம்பினை குச்சியால் எடுத்து மாலைபோல் அவருடைய கழுத்தில் போட்டார். பரீட்சித்தின் பாதகச் செயலை, அங்கு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சமீகரின் பிள்ளை சிருங்கி பார்த்து விட்டான். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ஏ! மன்னனே! நிஷ்டையில் இருந்த என் தந்தையை அவமதித்த நீ இன்னும் ஏழுநாளில் பாம்பால் அழிவாய், என்று சபித்துவிட்டான். உடனடியாக பரீட்சித்து தன் மகன் ஜன்மேஜயனுக்குப் பட்டம் கட்டி நாட்டுக்கு மன்னனாக்கினான். கங்கைக்கரையில் தவம் செய்து தன் உயிரைவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். விருப்பப்படியே கங்கையின் மத்தியில் அழகிய மண்டபத்தை அமைத்து அதில் தங்கினான். தகவல் அறிந்த அத்ரி, வசிஷ்டர், பிருகு, ஆங்கிரசர், பராசரர், தேவலர், பரத்வாஜர், கவுதமர், அகத்தியர், வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினான். இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவபூஜை செய்தபடியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 16. சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.
உயிர்பிரிய ஒரு வாரமே இருக்கும் சந்தர்ப்பத்தில், சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினான். ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில்,அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது, கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகபிரம்மர், அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார். அதுவே பாகவதம் என்னும் நூல் ஆயிற்று. இவரைப் பற்றிய இன்னொரு சம்பவமும் சுவையானது. பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜசூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது. அதில் ஒருலட்சம் பேர் சாப்பிட்டால் அதைதெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும். அதைக் கொண்டு ஒருநாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள். திடீரென்று ஒருநாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தரம் அடித்தால் ஒருலட்சம் தானே கணக்கு!இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு, குறித்துக் கொள்ள முடியாதபடி தொடர்ந்து மணி அடித்துக் கொண்டிருந்தது. என்ன அதிசயம்! வேகம் தாளாமல் மணி அறுந்து விழுந்துவிட்டது. தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை. அனைவரும் திகைத்து நின்ற வேளையில், எச்சில் இலைகளைப் போட்ட இடத்தில் பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் ஒரு சில பருக்கைகளைக் கொத்திவிட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது. சுகப்பிரம்மருக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டாலும், அவரது பெயரால் அன்னதானம் நடத்தினாலும் நமக்கு அளவற்ற செல்வமும், புண்ணியமும் கிடைக்கும்.

யார்? சித்தர்கள் ?

யார்? சித்தர்கள் ?
"வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே"
என்கிறார் பட்டினத்தார். இருந்தாலும் அவரே பின்னர் நாம் ஏமாந்து விடக்கூடாது என்று,
"பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!"
பேய்போல் திரிந்து - பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு பகலாக திரிந்து,
பிணம்போல் கிடந்து - உறங்கினாலும் யோக நிலையில் இருந்தாலும் பிணம் போல் அசைவற்று,
இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி- யாராவது இடும் பிச்சையை நாய் போல் உண்டு,
நன்மங்கையரைத் தாய்போல் கருதித்- நல்ல மங்கையரை தனது தாய் போல் நினைத்து,
தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் - அடிமைபோல் அனைவருக்கும் தாழ்வாய் இருந்து,
சேய்போல் இருப்பர்கண்டீர் - குழந்தைபோல் இருப்பவர்களை கண்டீர்கள் என்றால்,
உண்மை ஞானம் தெளிந்தவரே - அவர்தான் உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்தவர்.
என்கிறார். ..
பரிசுத்த மெய்ஞ்ஞானம் பெற்றவர்களே சித்தர்கள்.சித்தர்கள் என்ற சொல்லின் பொருளைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். ‘சித்தர்கள்’ என்ற சொல் பொதுவானதாகும். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே அடைந்த அனைவரையும் இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். மேலும் வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் என்றும் கூறலாம். சித்தர்கள் என்பவர்கள் தெய்வமரபைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தூய்மையின் சிகரமாகவும் தெய்வீகத்தன்மையையும் கொண்டவர்கள்.
சித்தர்கள் எங்கிருந்து எதை உண்டாலும் எப்படித் தோற்றமளித்து எதைச் செய்தாலும் உலகியல் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தாலும் அவர்களுடைய சிந்தனை "சிவ" பரம்பொருளோடு ஒன்றாயிருக்கும். இல்லறவாழ்வெனும் உலகியலில் இருந்தாலும் பற்றுகளகன்று ஆசைகள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் புளியம்பழமும் ஓடும் போல் ஒட்டாமல் இருப்பர். எனவே, சித்தர் நிலையைத் தொட்டவர்கள் காட்டிலோ குகையிலோ வாழவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. “கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள், கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.”
மனிதர்களிடத்தே நிலவும் சாதிவேற்றுமைகளையும் ஏற்றதாழ்வுகளையும் கடுமையாகச் சாடிப் புரட்சி செய்தவர்கள் சித்தர்கள். சித்தத்தில் சிவனைக்காணும் வரை உடலைக் காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக் காயகல்பம் உண்டவர்கள். மேலும், ஏழைகளின் நோய்களைத் தீர்ப்பதற்கு சித்தர்கள் எளிய மருந்துகளைக் கண்டறிந்து அவர்களின் துன்பம் தீர்த்தனர். சித்தர்களில் பலர் யோகப்பயிற்சியாலும் சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள் ஆவர். இவர்கள் மனோ சக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள். இவர்கள் கண்ட சராசர ரகசியங்களை அறிந்து அவற்றை வெளி உலகிற்கு அளித்தவர்கள்.
சித்தர்கள் யோகசனத்தால் பெற்ற பயன்களை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தினார்களே ஒழிய, தங்களுக்காக எதுவும் செய்து கொண்டதாக தெரியவில்லை. பதினெண் சித்தர்களுக்கு முன்னே நவநாத சித்தர்கள் என்ற ஆதி தமிழ்ச்சித்தர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அகத்தியர் வருகைக்குப் பின்பே சித்தர் மார்க்கத்தின் மீது ஆரியவண்ணம் பூசப்பட்டு விட்டது. சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும் மிக மிக, எளிமையான இலக்கண நடையில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஓலைச்சுவடிகளில் நூல்களாக எழுதியுள்ளார்கள்.
இத்தகைய சிறப்புப் பெற்ற சித்தர்கள், தங்கள் திருமேனியை மறைத்துக் கொண்ட இடமாகக்கருதப்படும் இடங்கள் எல்லாம் தெய்வீக சக்திமிக்க திருக்கோயில்களாகக் கருதப்பட்டு போற்றப்படுகின்றன.
இந்தத்திருத்தலங்கள் பதினெண் சித்தர்களின் சமாதித்தலங்கள் எனப்பின்வரும் பாடல்மூலமாக அறியலாம்:
“ஆதிகாலத்திலே தில்லையில் திருமூலர்
அழகர் மலை இராமதேவர்
அனந்தசயனம் கும்பமுனி
திருப்பதி கொங்கணவர் கமலமுனியாகி
சோதிரக் கஞ்சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லுமெட்டுக் குடியில் வான்மீகரோடு
ஒர் நெல்காசியில் நந்திதேவர்
பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனிமலை யோகநாதர்,
பரங்குன்ற மதில், மச்ச முனிபொய்யூர் கோரக்கர்
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீசுவரன்கோயிலில் தன்வந்திரி
திகழ் மயூரங்குதம்பை
சித்தருணை யோரிடைக்காடன் சமாதியிற்
சேர்ந்தன ரெமைக் காக்கவே”
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. அகத்தியர் என்ற பெயரில் மட்டும் 37 பேர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் நம் தமிழ் மரபைப் சேர்ந்த அகத்தியர் திருக்குற்றால மலையில் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருந்து திருமாலைச் சிவபெருமானாக அங்கு ஆலயம் அமைத்து வழிபட்டவர். இவரது காலம் கி பி. 13 ஆம் நூற்றாண்டாகும். அகத்தியர் தமிழ்மொழி, தமிழ் இலக்கணங்களைப் பரமசிவனிடத்தில் இருந்தும், முருகப்பெருமானிடத்திலிருந்தும் கற்றுத்தமிழ் மொழியைத் தமிழ் நாட்டில் நன்கு வளர்த்தார். இவர் மார்கழி மாதம் ஆயில்யநட்சத்திரம் 3ம் மாதத்தில் பிறந்ததாகப் போகர் தமது 7000 ஆம் நூலில் கூறுகிறார்.
அகத்தியர் அருளிய நூல்கள்:
அகத்தியர் 21,000 அகத்தியர் 12,000 அகத்தியர் பரிபூரணம் அகத்தியர் ஆயுர்வேதம் அகத்தியர் நயனவிதி அகத்தியர் குணயாடம் அகத்தியர் அமுதக்கலை ஞானம் அகத்தியர் செந்தூரம் 300 அகத்தியர் வைத்திய காவியம் 1500 முதலியவையாகும். இவர் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டதாகக் கூறப்படுகிறது. இமயமலையில் வசிப்பதாகவும் கூறுவர்.
இத்தனைக்கும் மேலே வாழ்வாங்கு வாழும் வள்ளுவர் வாக்கான திருக்குறளிலே,
"எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு"
என்று கூறினாலும் அதன் வழியில் நில்லாது போனால் யாருக்கு தாழ்வு...
நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!

பித்ரு தோஷம், பித்ரு சாபம்

பித்ரு தோஷம், பித்ரு சாபம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….

 பித்ரு தோஷம், பித்ரு சாபம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….
பித்ரு தோஷத்திற்கும், பித்ரு சாபத்திற்கும் வேறுபாடு என்ன? இந்தக் கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். சூரிய பகவானை பித்ருகாரகர் அதாவது மூதாதையர்களை குறிப்பவர் என்று அழைக்கிறார்கள். சந்திர பகவானை மாத்ரு காரகர் அதாவது தாயைக் குறிப்பவர் என்று அழைக்கிறார்கள். இந்த இருவரின் நிலைமையை ஒரு ஜாதகத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டும். இவர்களின் சுப – அசுபத் தன்மையைக் கொண்டு ஒருவருக்கு பித்ருக்களின் ஆசி உள்ளதா அல்லது தோஷம் உண்டாகியுள்ளதா என்பதை அறிய முற்பட வேண்டும்.
பித்ரு தோஷம் அல்லது ஆசிகள் ஒருவருக்கு தந்தை வர்க்கம் அல்லது தாயின் வர்க்கத்திலிருந்து அமையக்கூடும். எங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு தன் தாயின் தந்தையின் ஜாதகத்தைப் போலவே அமைந்திருந்தது. அவரும் தன் தாத்தாவைப் போலவே அவர் சார்ந்த துறையிலே பணியாற்றி அவரைப் போலவே பெயரெடுத்தார். அதோடு ராகு பகவானை பிதாமஹர் அதாவது தந்தையின் தந்தை என்றும், கேது பகவானை மாதாமஹி அதாவது தாயின் தாய் என்றும் கூறுவார்கள். ஒன்பதாம் வீடு குறிப்பாக ஐந்தாம் வீட்டிற்கு முன்பாக பித்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் இந்த இரண்டு வீடுகளின் அதிபதிகள் பெற்ற சுப, அசுப நிலைமைகள், இவர்களுடன் ராகு, கேது பகவான்களின் தொடர்பு ஆகிவயற்றைக் கருத்தில் கொண்டும், அவர்கள் பெற்றுள்ள சாரம் மற்றும் சேர்க்கை ஆகியவற்றாலும் எந்த அளவுக்கு ஒருவருக்கு மூதாதையர்களின் உதவி கிடைக்கும் என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.
சூரிய பகவானுக்கு அவரின் புதல்வரான சனி பகவான் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகம். பலரும் சூரிய பகவான் மற்றும் சனி பகவான் ஆகியோரின் சேர்க்கை இருந்த போதிலும் சிறப்பான வளர்ச்சியடைவதைப் பார்க்கிறோம். சனி பகவானே சிறப்பான ஆதிபத்ய விசேஷம் பெற்று ஜாதகருக்கு உதவும் நிலைமையில் இருப்பார்கள். அதோடு சூரிய பகவானோடு ராகு பகவானின் சேர்க்கையும் பலரை சூரிய பகவான் தசையில் நல்ல நிலைமைக்கு உயர்த்துவதைப் பார்க்கிறோம்.
சூரிய பகவானுக்கு உகந்த காரகத்துவங்களான அரசியல் செல்வாக்கு, அரசாங்க ஆதரவு, கௌரவம், ஆற்றல், வீரம், கண் தொடர்பான விஷயங்கள் ஆகியவை பலமாக சூரிய பகவானால் கிடைக்கும். சூரியன், ராகு பகவான்கள் இணைந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் உயர் பதவிகளில் அமரும் வாய்ப்பு கிடைக்கும். சூரிய பகவான் எந்த அளவுக்கு நலம் சேர்ப்பாரோ அந்த அளவுக்கு சனி பகவானும் ஒருவரை பெரிய அரசாங்க அதிகாரி ஆக்குகிறார். சனி பகவான் கீழ்த்தட்டு மக்களை நிர்ணயிப்பவர் என்பதால் அவர்களுக்கு அவரின் ஆதரவு நிரம்பக் கிடைக்கும். பிறரை வேலை வாங்கும் அளவுக்கு அதிகாரமான நிலைமை உண்டாகும். அதனால் சூரிய, சனி, ராகு பகவான்களின் சேர்க்கையை ஒரு குறை என்கிற ரீதியில் மட்டுமே பார்க்காமல், அதில் எந்த கிரகத்திற்கு சுப பலம் உண்டாகிறதோ அந்தக் கிரகத்தின் அடிப்படையில் அவரின் முன்னேற்றம் இருக்கும் என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.
மேலும் எந்த தசையில் நலம் உண்டாகும் என்பதையும் அறிய வேண்டும். அதோடு ஷட் பலம் அதாவது ஆறு விதமான பலத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். இதில் சூரிய பகவானுக்கு குறைந்தது 5 ரூப பலமும், சந்திர பகவானுக்கு 6 ரூப பலமும், செவ்வாய் பகவானுக்கு 5 ரூப பலமும், புதன் பகவானுக்கு 7 ரூப பலமும், குரு பகவானுக்கு 6.5 ரூப பலமும், சந்திர பகவானுக்கு 5.5 ரூப பலமும், சனி பகவானுக்கு 5 ரூப பலமும் கொடுத்திருக்கிறார்கள். இந்த சூரிய, சனி, ராகு பகவான்களின் சேர்க்கை பித்ரு தோஷம் என்று கூறினாலும் சூரியன், சனி பகவான்களுக்கு ஷட் பலத்தில் சிறப்பான ரூப பலம் கிடைத்துவிட்டால் அந்தக் கிரகமானது பித்ரு தோஷத்தையும் மீறி சிறப்பான பலன்களைக் கொடுக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதனால் பொதுவாக சற்றேரக்குறைய நால்வரில் இருவரின் ஜாதகங்களில் மேற்கூறிய அமைப்புகள் இருந்தால் அதை பித்ரு தோஷம் என்று கூற வேண்டும். அதற்குப் பிறகு அதில் எந்தக் கிரகங்கள் லக்ன சுபர்களாக ஆகிறார்கள், அவர்கள் பெற்ற சார பலம் மற்றும் சேர்க்கை, பார்வை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டும், ஷட் பலத்தையும் ஆராய்ந்து முடிவு செய்தால் ஓரளவுக்கு அந்த தோஷம் பெற்ற கிரகத்திற்கு சுப பலம் எந்த அளவுக்கு உண்டாகி இருக்கிறது என்றும், அவரால் எந்த அளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம் என்றும் அறிந்து, பலன்களைக் கூறினால் சரியாக அமைந்துவிடும்.
மற்றபடி மேற்கூறிய சேர்க்கைகளில் அசுபத் தன்மை கூடியிருந்தால் அதை பித்ரு சாபம் என்றுகூற வேண்டும். இத்தகையோருக்கு அதாவது நான்கில் ஒருவருக்கு இந்த அமைப்பு ஏற்படலாம். அவர்களும் தக்க பரிகாரம், சாந்திகளால் மேற்கூறிய தோஷத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு பரிகாரமாக திலஹோமம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். உங்களுக்கு பித்ருகாரகரான சூரிய பகவான் நீச்சமாகி சர்பக் கிரகத்தின் சாரம் பெற்றிருந்தாலும், அவருடன் லக்னாதிபதி மற்றும் சூரிய பகவானுக்கு நீச்ச பங்க ராஜயோகம் உண்டாகிறது என்பதை மறுக்க முடியாது. அதாவது நீச்சனேறிய ராசி நாதன் ஆட்சி உச்சம் பெறுகையில் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும் என்பது ஜோதிட விதி.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் சுகாதிபதியியன் தசையில் அனுகூலமற்ற அந்தரம் நடக்கும். அதற்குப் பிறகு உங்கள் ஆரோக்யம் மேம்பாடடையும். அதோடு ஆரோக்ய ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. அதனால் நிரந்தர உபாதைகள் என்று எதுவும் ஏற்படாது. மூத்த சகோதர ஸ்தானாதிபதியான சந்திர பகவான் அஷ்ட ராசியில் மறைந்திருக்கிறார்.
மற்றபடி அவரை நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சூரிய பகவான் பார்வை செய்வதால் பௌர்ணமி யோகம் உண்டாகிறது. அதோடு அவரை லக்ன கர்மாதிபதியும், தன பாக்யாதிபதிகளுமான தர்ம கர்மாதிபதிகள் பார்வை செய்வதாலும், 2015ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்குப் பிறகு தொடங்கும் பூர்வ புண்ய ஸ்தானாதிபதியின் புத்தியிலிருந்து மூத்த சகோதரருடன் ஏற்பட்ட உறவு மேம்படும்.
வியாழக்கிழமைகளில் குரு, தட்சிணாமூர்த்தியையும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

வசிய திருநீறு...

வசிய திருநீறு...
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகும், பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி வாங்கிடும் பழக்கம் அருகி விட்டாலும், கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருகிறது. இது பொது விதியாக இருந்தாலும், சிலர் தங்கள் தேவை...களை, லட்சியங்களை நிறைவேற்றிடும் பொருட்டு வசிய விபூதியை உருவாக்கி பயன் படுத்தி இருக்கின்றனர்.
இத்தகைய வசிய திருநீற்றைத் தயாரிக்கும் பல்வேறு முறைகளை சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணமுடிகிறது. அப்படியான ஒரு வசிய திருநீற்றினை தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். அகத்தியரின் "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. இதன் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் அணுகிட வேண்டுகிறேன்..
கிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று
கெணிதமுடன் சொல்லுகிறே னன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
சுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
ஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே.
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்
வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
சிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்
அண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்
அப்பனே ஓம்கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்
பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு வார்கள்
துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய மாமே.
ஆதி குருவான சிவன் விரும்பி வசிக்கும் பூமியான இடுகாட்டிற்குச் சென்று எரியும் சுடலையில் இருந்து நன்கு வெந்த அஸ்தியை சேகரித்து எடுத்து வந்து, அதன் எடைக்கு சம அளவில் விஷ்ணு கிரந்தியின் வேரினைச் சேர்த்து கல்வத்தில் இட்டு அதனோடு தாய்ப்பால் சேர்த்து நன்கு அரைத்து உருண்டையாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த உருண்டைகளை சூரிய ஒளியில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு வரட்டிகளைக் கொண்டு புடமிட வேண்டுமாம். இதனால் அந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும் என்கிறார். இந்த திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.
இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "அங்" என்று லட்சம் உரு செபித்து பின்னர் அதனை நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம் சென்றால் அரசர்கள் வசியமாவார்களாம். இது இராஜவசியம் என்றும் அத்துடன் செக மோகமும் பெண்வசியமும் உண்டாகும் என்கிறார்.
மேலும் இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "ஓம்கிலிறீ" என்று லட்சம் உரு ஓதி நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள வேண்டுமாம் அப்போது எதிரிகளும் வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு செய்யும் விலங்குகளும் வசியமாகும் என்கிறார்.

லவண நியமம்

அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
''உணவின் ருசியே உப்பை பொறுத்துத் தான் இருக்கிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். சுவைக்கு ஆதாரமான உப்பைக் குறைத்த...ுக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்று சாஸ்திரம் சொல்கிறது. வயதான காலத்தில் உப்பில்லாமல் சாப்பிட்டுக் கொள்ளலாம் என விட்டு விடாமல் இருக்கவே, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை போன்ற பல விரத நாட்களில் உப்பில்லாமல் சமைக்க வேண்டும் என கட்டுப்பாட்டை உருவாக்கினர். இதனை லவண நியமம் என்று சொல்வார்கள். லவணம் என்றால் உப்பு.