Saturday, July 23, 2011

இறைவனை பூஜிக்கும் பூக்கள்

இறைவனை பூஜிக்கும் போதும், நற்செயல்கள் செய்யும்போது பூக்கள் தவறாது இடம்பிடிக்கின்றன. ஒருவரிடம் நாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும்போதும், வாழ்த்துக்கள் தெரிவிக்கும்போதும் மலர்க்கொத்துக்களை கொடுக்கிறோம். பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பயன்படுகின்றன. சில வகை பூக்கள் இறைவனை அலங்கரிப்பதில் முக்கியபங்கு வகிக்கின்றன. பூக்களுக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் ? அவை உணர்த்தும் தத்துவம் என்ன என்று தெரியுமா ? பூக்கள் சாத்வீக குணம் உடையவை. அவை அமைதியாக இருந்து நறுமணம் பரப்பி, தன்னுடைய பணியை மட்டும் செய்து நம்மையும் மகிழ்விக்கின்றன. இதைப்போலவே, மனிதனும் யாருக்கும் தொந்தரவுகள் இன்றி, அமைதியாக தான் செய்ய வேண்டிய கடைமைகளை சுயநலமின்றி செய்யவேண்டும். இவ்வாறு இறைவனின் தத்துவத்தை உணர்த்துவதால் பூக்களில் இறைவன் வாசம் செய்வதாக ஐதீகம். உயிர்கள், காற்று மூலமாக பூக்களின் நறுமணத்தை உணர்ந்து மகிழ்வது போல, பக்தி மூலமாக இறைவனின் திருவருளை உணர்ந்து அவன் பாதம் சேர வேண்டும் என்ற மாபெரும் தத்துவப்பொருளும் இதனுள் புதைந்துள்ளது.

No comments:

Post a Comment