திருமால், கிருஷ்ணராக பூமியில் அவதரித்தபோது, இந்திரனையும் தன்னுடன் அவதரிக்கும்படி செய்தார். இந்திரனின் பெருமை தருமனாகவும், பலம் பீமனாகவும், பாதி அம்சம் அர்ஜுனனாகவும், அழகு நகுலன், சகாதேவர்களாகவும் தோன்றினர். இவ்வாறு பாண்டவர்கள் இந்திரனின் அம்சமாகவே அவதரித்தனர். இதனால், திரவுபதி ஐந்து பேரை திருமணம் செய்தாக கூறினாலும், இந்திரன் ஒருவனையே திருமணம் செய்தவள் ஆகிறாள் என்று ஒரு விளக்கம் சொல்கிறார்கள். மதுரையில் திரவுபதிக்கு கோயில் இருக்கிறது.
No comments:
Post a Comment