Monday, July 25, 2011

திருமணநாள் கொண்டாடுவது எப்போது?

பெரும்பாலும் திருமண நாளைக் கொண்டாடுபவர்கள், ஆங்கில தேதியை அடிப்படையாக வைத்தே கொண்டாடுகிறார்கள். இந்துக்களைப் பொறுத்தவரை திருமணம் நடந்த நட்சத்திரத்தில் இந்நாளைக் கொண்டாடுவதே முறையானது என்று வேங்கடா ஆபஸ்தம்ப சூத்ரம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாளில் தம்பதியர் தங்களுக்கு பிடித்தமான சைவ உணவை, சாப்பிட வேண்டும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. திருமண நாளன்று புத்தாடை அணிந்து, சுவாமிக்கு நைவேத்யங்கள் படைத்து, பூஜித்து வணங்க வேண்டும். பின்பு, பெரியவர்களிடம் ஆசி பெறுவதுடன், குழந்தைகள் கேட்பதையும் வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

No comments:

Post a Comment