குரங்கு நம்மிடமுள்ளதை பிடுங்கிக் கொள்ளும் குணமுடையது. அதையே தெய்வமாகப் பார்த்தால் ஆஞ்சநேயனாய் மாறி அருளை வாரி இறைக்கிறது. யானை நம்மை விரட்டினால் அலறியடித்து ஓடுகிறோம். ஆனால், கணேசா! என்னைக் காப்பாற்று, என வாய் நம்மையறியாமலே ஆனைமுகனை நினைக்கிறது. இதன் பொருள் என்ன? மிருகம் தனக்குரிய இயற்கையான குணத்தை ஆண்டவனின் கட்டளைப்படி காட்டுகிறது. ஆனால், மனிதன் தனக்குரிய நிலையில் இருந்து மாறி மிருககுணத்துடன் அலைகிறான். அவன், மிருக நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர வேண்டும். இதனால் தான், மனதில் எழும் எண்ணங்களை, மிருகங்களாக உருவகப்படுத்தி, அவற்றை அடக்க வேண்டும் என்ற அடிப்படையில், நமது தெய்வங்கள் அதன் மீது அமர்ந்துள்ளனர். வாகனங்களின் மீது அமர்ந்து வீதியுலா வருகின்றனர். மிருகங்கள் தங்கள் இனத்தைப் பெருக்க வரையறை வைத்துக் கொள்வதில்லை. தன்னைச் சார்ந்த எல்லா மிருகங்களுடனும் உறவு கொள்ளும். மனிதன் அப்படியிருக்கக்கூடாது. தனக்கென ஒருவன் அல்லது ஒருத்தியை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மிருக குணத்தை விட்டொழிக்க வேண்டும்
No comments:
Post a Comment