Thursday, July 21, 2011

கிரகங்களில் ஆண் கிரகம், பெண் கிரகம் என்ற பேதம் இருக்கிறதா?

கிரகங்களில் ஆண் கிரகம், பெண் கிரகம் என்ற பா‌லிய‌ல் பேதம் இருக்கிறதா?

 பாலியல் பேதம் என்பதைவிட அவைகளுடைய இயக்க செல்பாடுகளை வைத்து ஆண் கிரகம், பெண் கிரகம் என்று சொல்கிறோம். செவ்வாய், சூரியன், குரு இதெல்லாம் ஆண் கிரகங்கள். ஆ‌ண் ‌கிர‌க‌ங்க‌ள் என்று சொல்வதைவிட ஆண் ஆதிக்க கிரகங்கள் என்று சொல்லலாம்.

சுக்ரன் பெண் ஆதிக்க கிரகம். ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்ரன் நன்றாக இருந்தால் நிறைய பெண்கள் அவருக்கு உதவுவார்கள். புதன், சனியை அலி ஆதிக்க கிரகங்கள் என்று சொல்கிறோம். ஒரு திருநங்கைக்கு புதன் திசை, சனி திசை வரும்போது அவர்கள் பெரிய நிலைக்கு வருவார்கள்.

இதுபோன்று பகுத்து பகுத்துப் பார்க்க வேண்டும். அதனால், குரு, செவ்வாய், சூரியனை ஆண் கிரகம் என்று சொல்வதை விட ஆண் ஆதிக்கம் மிகுந்த கிரகம் என்று சொல்லலாம். சுக்ரன், வளர்பிறை சந்திரன், இராகுவை பெண் ஆதிக்க கிரகங்கள் என்று சொல்லலாம். 

No comments:

Post a Comment