இரவில் குப்பையைக் கொட்டக் கூடாது என்று சொல்கிறார்கள். வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். விடிந்த பிறகுதான் கொட்ட வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலர், சிவன் சாப்பிடும் நேரம், அந்த நேரத்தில் கொட்டினால் அது அவருடைய சாப்பாட்டிலேயே கொட்டியதாக ஆகும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இதன் உண்மையான காரணம் என்ன. ஏன்?
குப்பை என்பது என்ன, நாம் பயன்படுத்தி மீதமானது. வெங்காயம் 4 நறுக்கினால் மீதி 4 வெங்காயம் வீட்டில் இருக்குமல்லவா, அதுமாதிரதான் கணக்கை முடிக்கக் கூடாது என்பார்கள். உபயோகப்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்பட்டப் பொருட்களின் எச்சம், தோல் பகுதி என்றே எடுத்துக்கொள்வோம். அதனை இரவோடு இரவாக தூக்கியெறியக் கூடாது. அப்படி எறிந்துவிட்டால் அந்தப் பொருளினுடைய அம்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் என்பது போன்றதுதான் அதன் அர்த்தம். அதனால்தான் இரவு நேரத்தில் குப்பையைக் கொட்டக் கூடாது என்பார்கள்.
குப்பையை சாதாரணப் பொருளாக நினைக்க வேண்டாம். ஏனென்றால் அதற்குள் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது.
குப்பை என்பது செல்வத்தின் அடையாளம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோன்ற செல்வத்தை கூட்டிப் பெருக்கி கொண்டுபோய் இரவில் வெளியில் கொட்டிவிட்டு வரக்கூடாது. அதனால் செல்வம் தேயும். அதுதான் பெரியவர்கள் சொன்னது. சில வீடுகளில் விளக்கு வைத்த பிறகு பெருக்கவே மாட்டார்கள். இதுபோன்று நிறைய விஷயங்கள் உண்டு. அதனால் குப்பையை சாதாரணமான விஷயமாகவே சொல்லக்கூடாது. அது லட்சுமியினுடைய வெளிப்பாடு, அதனால் இரவில் கொண்டுபோய் கொட்டக்கூடாது.

No comments:
Post a Comment