Saturday, July 23, 2011

அக்காலத்தில் மாமியார் மருமகள் சண்டை வராதது ஏன்

அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இனித்தது. பெரியவர்களால் இளைய தலைமுறையினருக்கு சிரமம் ஏதும் இல்லை. ஏனெனில் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் முடிந்த பிறகு பெரியவர்கள் வானப்பிரஸ்தம் எனப்படும் காட்டு வாழ்க்கை சென்று விடுவார்கள். அப்போது, நான்கு வகையான வாழ்க்கை முறை ஒரு மனிதனுக்கு இருந்தது. முதலில் பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்து கல்வி பயில்வார்கள். படிப்பு முடிந்ததும் கிருகஸ்தம் எனப்படும் குடும்ப வாழக்வை மேற்கொண்டனர். அறுபது வயதைத் தாண்டியதும், இளையவர்களிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, எல்லாவற்றையும் துறந்து, மனைவியுடன் காட்டுக்குச் சென்று பூஜை, தியானம் என இருந்து விடுவார்கள். மனப்பக்குவம் அடைந்ததும் காட்டில் வசிக்கும் முனிவர்கள் அவர்களுக்கு சன்னியாசம் எனப்படும் பற்றற்ற வாழ்வு வாழ அனுமதியளிப்பார்கள். வீட்டில் இருந்தவர்களுக்கும் நிம்மதி, காட்டில் இருந்தவர்களுக்கும் பிரச்சனையில்லை.

No comments:

Post a Comment