Monday, June 27, 2011
கிரிவலம் செல்வது எப்படி ? நவம்பர் 19,2010,16:01 IST திருவண்ணாமலையில் மலை சுற்றும் பாதையின் துவக்கத்தில் இந்திர லிங்க கோயில் உள்ளது, இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வலம் வர துவங்க வேண்டும். சுற்றுப்பாதையிலுள்ள அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், நேர் அண்ணாமலை, வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் வழியாக, சுடுகாட்டிலுள்ள ஈசான்ய லிங்க கோயிலுக்குச் செல்ல வேண்டும். ""மனிதா! நீ யாரை வேண்டினாலும், என்ன சம்பாதித்தாலும் இறுதியில் வருமிடம் இதுவே,'' என்பதை கிரிவலத்தின் இறுதியில் நாம் உணர்கிறோம். இதனால் ஆசைகள் அகல்கின்றன. ஆணவம் நீங்குகிறது. அகங்காரம் அழிகிறது. கடைசியாக அண்ணாமலையார் கோயிலுக்குள் நுழைந்து, அருணாசலேஸ்வரரையும், உண்ணாமுலையம்மனையும், இதர தெய்வங்களையும் வணங்கி விட்டு கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment