ஆதிசங்கரரின் பெற்றோர் நீண்ட காலமாகப் பிள்ளை இல்லையே என்று விரதம் இருந்தார்கள். ஒருநாள் ஒரே நேரத்தில் இருவர் கனவிலும் இறைவன் தோன்றி, "நீண்ட நாள் வாழும் மோசமான பிள்ளை உனக்கு வேண்டுமா.... கொஞ்சநாள் வாழும் நல்ல பிள்ளை வேண்டுமா?'' என்று கேட்டார். "அதுபற்றி நானே எப்படி முடிவு செய்ய முடியும்? என் மனைவியைக் கேட்டு சொல்கிறேன்'' என்றபடி கணவர் எழுந்தார்.
அதேநேரம், "கணவரைக் கேட்டுச் சொல்கிறேன்'' என்று அவரது மனைவியும் கண் விழித்தார். இறுதியில் இருவருமே சேர்ந்து, "பிறக்கப்போகும் குழந்தை பற்றி முடிவு செய்ய நாங்கள் யார்? நீயே முடிவு செய்'' என்று அந்த இறைவனிடமே விட்டுவிட்டனர்.
அதனால்தான், அவர்கள் வயிற்றில் உயரிய மகானான ஆதிசங்கரர் பிறந்தார். தலைக்கனத்தோடு வாழும் வாழ்க்கையில் அர்த்தம் இல்லை. நல்ல குணம் கொண்டவர்கள்தான் பிள்ளைகளாலும் பெருமை பெறுகிறார்கள் என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
No comments:
Post a Comment