Saturday, June 25, 2011

தேர்வுக்கு செல்லும் மாணவர்களே! வாரியார் சொல்வதைக் கேளுங்க!

* மாணவர்கள் துணிச்சலுடன் தேர்வு எழுதினால், தெளிவான விடை எழுதலாம்.
* தேர்வு நாட்களில் கவலைக்கோ, குழப்பத்திற்கோ, பெறுப்பிற்கோ இடமளிக்கக்கூடாது.
* தேர்வு எழுதிவிட்டு வந்ததும், விடைகளில் உள்ள பிழைகளை நினைத்து வருந்தக்கூடாது.
* தேர்வில் பக்கத்தில் இருப்பவனை பார்த்து எழுதுவது அவமானத்தை உண்டாக்கும்.
* தேர்வுக்கு செல்லும் போது, வழியில் கோயில்கள் இருந்தால் வணங்கிச் செல்லுங்கள்.
* வெறும் மதிப்பெண் அல்ல, தலைசிறந்த அறிவு பெறுவதே கல்வியின் நோக்கம்.
* கல்வி, அறிவு, கண், கருத்து, பணம் இந்த ஐந்தும் கெடுவது சினிமாவால் தான்.
* படிக்கும் சமயத்தில் பிற விஷயங்களில் கவனம் செல்லக்கூடாது.
* மனதில் தங்காத படிப்பு, கற்பாறையில் நட்ட பயிருக்கு சமமானது.

No comments:

Post a Comment