கண்ணன்-ராதா...இந்த ஜோடியைப் போல சிறந்த காதலர்களை இனி உலகம் காணாது. ஜயதேவர் என்னும் பக்தர், கண்ணனைப் பற்றி "கீதகோவிந்தம்' என்னும் நூலை எழுதினார். அப்போது, அவருக்கு ஒரு விபரீதமான கற்பனை தோன்றியது. ""ராதா! உன் மீது கொண்ட காதல் என்னும் விஷம் இறங்க வேண்டுமானால், உன் பாதங்கள் என் தலையில் பட வேண்டும்,'' என்பது கண்ணன் சொல்வது போல் அமைந்தது அந்தக் கற்பனை. "கண்ணனின் தலையில் அவனது காதலியின் கால்கள் படுவதாவது...' இதென்ன விபரீதம்! இதை எழுதக்கூடாது என முடிவு செய்து எண்ணெய் தேய்த்துக் குளிக்க போய்விட்டார்.
திடீரென நல்ல கற்பனை ஒன்று மாறி வர, தன் மனைவி பத்மாவதியிடம் சுவடியை எடுத்து வரும்படி சொன்னார். ""எண்ணெய் கையாக உள்ளதே! கறைபடுமே! குளித்து விட்டு வந்து எழுதுங்கள்,'' என்றாள்.
""இல்லையில்லை, மனதில் தோன்றுவதை உடனே எழுதி விட வேண்டும். இல்லாவிட்டால் மறந்துவிடும்,'' என்று சொல்லி அதை எழுதினார். குளித்து விட்டு திரும்பியவர் மீண்டும் எழுத சுவடியை எடுத்தபோது, முன்பு உதித்த அதே கற்பனை அந்தச் சுவடியில் எழுதப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தார். மனைவியை அழைத்து, ""யார் இப்படி செய்தது?'' என்றார். ""நீங்கள் தானே எழுதினீர்கள், எண்ணெய்க் கறை கூட படிந்துள்ளதைப் பாருங்கள்,'' என்றாள் அவள். ""இல்லையே! நான் எழுதவில்லையே! இப்போது தானே குளித்து விட்டே வருகிறேன்,'' என்றவர் ""ஆஹா...அந்த மாயக்கண்ணனே வந்து இதை எழுதி, தன்னை விட தன் பக்தை ராதாவே உயர்ந்தவள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு போயுள்ளான்,'' என தன்னையும் அறியாமல் சொன்னார்.
ஆசைப்புயலிடம் மனதை பறிகொடுத்து விடாதே ! - பகவான் கிருஷ்ணர்
மனம் மகிழ்வோடு இருத்தலும், சாந்தமான போக்கும், மவுனமும், மனதை அடக்கி
ஆளுதலும், உள்ளத்தூய்மையும் என்ற இவையெல்லாம் நம் மனதுக்குள்ளேயே உள்ளது.
* விரும்பியதை அடைந்து விட்டால் வரம்பின்றி மகிழக்கூடாது. அதுபோல் துன்பம் வரும்போது ஒரேயடியாக மனம் கலங்கவும் கூடாது. மன உறுதியுடன் தெய்வ நிலையில் நிற்க வேண்டும்.
* மனதை ஒருமுகப்படுத்த முடியாதவனுக்கு அறிவும், ஆழ்ந்த சிந்தனையும் கிடையாது. ஆழ்ந்த சிந்தனையற்றவன் அமைதியும் இன்பமும் பெறமுடியாது.
* மனதை அடக்கி இருந்தாலும், எப்படியோ ஆசைப்புயல் புகுந்து மனிதனுடைய அடக்க சக்தியை வேரோடு பறித்து விடும். அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்து விடாமல் இருக்க வேண்டுமானால், என்னை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.
* பட்டினியாகக் கிடந்தால் உடல் சக்தியன்று அடங்கிப்போகும். ஆனால், தான் நினைத்ததை அடையவேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்குவதில்லை. கடவுளை நேரடியாகக் காணவேண்டும்என்னும்அளவுக்குஆன்மிகப் பயிற்சி எடுத்தால் தான் இது அடங்கும்.
* கோபத்தால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாறுகையில் புத்தி குழம்புகிறது. புத்தி குழம்பியவன் இறந்தவனுக்கு சமமாகிறான்.
* பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது. நினைவு அழிகிறது. நினைவு கெட்டால், லட்சியம் மறைந்துபோகிறது. அப்போது மனிதன் அழிந்து விடுகிறான்.
* புகையால் நெருப்பும், புழுதியால் முகப்பார்வையும் மூடப்பட்டு போகிறது. அதுபோலவே காமம் என்ற பகைவனால் மெய்யறிவு மூடப்பட்டு விடுகிறது.
* தானம் அளிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும். இடம், தகுதி, காலம் ஆகியவற்றைக் கவனித்து, திரும்பத்தர இயலாத ஒருவனுக்கு அளிக்கும் தானமே சாத்வீக தானம் எனப்படும். எதனால் மனதிற்கு வருத்தம் உண்டாகிறேதோ, எது பிரதிபலன் கருதி செய்யப்படுகிறதோ அந்த தானம் அது "ராஜஸ தானம்' ஆகும்.மரியாதை இல்லாமலும், அலட்சிய புத்தியுடனும், தகாத இடத்திலும், தானம் பெறுவதற்கு தகுதியில்லாதவனுக்கும் தரப்படுவது "தாமஸ தானம்' ஆகும்.
* மிகைபட உண்பவனுக்கு யோகம் இல்லை. உணவின்றி தனிமையில் இருக்க விரும்புபவனுக்கும் யோகம் கிடையாது. மிகுதியாக உறங்குபவனுக்கும், மிகுதியாக விழித்திருப்பவனுக்கும் அது இல்லை. இவற்றில் எல்லாம் அளவோடு இருப்பதே யோகம்.
* பசுவின் பால், அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் சத்தோடு சாரமாக கலந்து பரவி உள்ளதென்றாலும், மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் இருக்கிறான். எனினும் இதயத்தில் தியானத்தால் எழுந்தருளுகிறான்.
சின்னக்கண்ணனுக்கு பிறந்தநாள்.
நம் வீட்டு குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால், பெரியவர்
களெல்லாம் இணைந்து வாழ்த்துச் சொல்வோம். ஆனால், இந்தச் சின்னக்கண்ணன் நமக்கெல்லாம் ஆசி தருபவன். ஏனெனில், அவனே இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான். நாம் அவனை உறவினனாக பார்க்கலாம். ஆம்...தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய், அரசனாய், சீடனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய், சேவகனாய்...எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள் ளான். அவனது அவதார நன்னாளில், மகாகவி பாரதியார் பாடிய "கண்ணன் பிறப்பு' பாடலை நாமெல்லாம் பாடி மகிழ்வோமா!
கண்ணன் பிறந்தான்- எங்கள்
கண்ணன்பிறந்தான்- இந்தக்
காற்றதை எட்டுத்திசையிலும் கூறிடும்
திண்ணமுடையான்- மணி
வண்ணமுடையான் உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர் நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர்- இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர்- நன்கு
கண்ணை விழிப்பீர்- இனி
ஏதும் குறைவில்லை; வேதம் துணையுண்டு.

No comments:
Post a Comment