Saturday, June 25, 2011

இல்லறமும்-, துறவறமும் உயர்ந்தது ?

கல்யாணம் பண்ணிக்கொண்டு இல்லறத்தில் மூழ்கி வாழும் வாழ்வு பெரிதா, சந்நியாசம் பெற்றுக்கொண்டு தவவாழ்வு வாழ்வது உயர்ந்ததா என்ற பிரச்னை ஒரு சமயம், திருச்சியில் அவதரித்த தாயுமானவர் சுவாமி முன்னால் வந்தது. இரு தரப்பாருமே படித்தவர்கள் என்பதால், பல மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி வாதிட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய தாயுமானவர், ""நீங்கள் பம்பரம் சுற்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா?'' என்றார்.
"ஆம்' என்றனர் அவர்கள். ஒரு சிறுவன் தன் பம்பரத்தை ஆட்டி விட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்குள் போய்விட்டான். அவ்வழியே வந்த ஒரு அறிஞன்,""பார்த்தீர்களா! பம்பரம் தானாக சுற்றுகின்றது. ஆட்டுவான் இன்றி ஆடுகிறது,'' என்றான். இவனை அறிஞன் என ஒப்புக்கொள்ள முடியுமா? "சிறுவன்' என்ற ஆட்டுபவன் இன்றி பம்பரம் ஆடாது.
அதுபோல் அம்பரம் (உலகம்) என்னும் பம்பரம் சுழல வேண்டுமானால் ஆண்டவன் என்பவன் வேண்டுமே! அதுபோல், இல்லறமும், துறவறமும் அமைவது இறைவனின் முடிவால் தான். அவன் எதை ஒருவனுக்கு அமைத்துத் தருகிறானோ அது உயர்ந்தது. ஆக, இல்லறமும், துறவறமும் உயர்ந்தது தான் என்று பிரச் னையை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment