அஞ்ஜநாநந்தனம் வீரம் ஜானகீ சோக நாசநம்' என்று ஸ்லோகம் உண்டு. "நந்தனன்' என்றால் "தாய்க்கு ஆனந்தம் தரும் பிள்ளை' என்று பொருள். ராமனை தசரத நந்தனன் என்றும், கிருஷ்ணரை தேவகி நந்தனன்' என்றும் சொல்வதும் போல, அனுமனை "அஞ்சனை நந்தனன்' என்பர். அவர் அஞ்சனை என்ற வானரப் பெண்ணுக்கும், வாயுதேவனுக்கும் பிறந்தவர். சூரியனை பழமாக நினைத்துக் கருதி வானில் பறந்து சென்று அதைப் பறிக்க முயன்ற போது, இந்திரன் அவரை அடிக்க அவர் எலும்பு ஒடிந்து தரையில் விழுந்தார். தன் குழந்தையை அடித்ததால் வாயுபகவான் கோபமடைந்து காற்றை நிறுத்த உலகமே தவித்தது. அப்போது தேவர்களெல்லாம் அனுமன் இவ்வுலகில் என்றும் வாழ்வான். அவன் "சிரஞ்சீவி' என்று வாழ்த்தினர். அப்படிப்பட்ட பெருமை அனுமனுக்கு கிடைத்த போது அஞ்சனை மகிழ்ந்தாள். பிள்ளை புகழடையும் போது பெற்றவள் மகிழ்வது இயற்கையே. அதில் அதிசயம் ஏதுமில்லை. ஆனால், எங்கோ பிறந்து, யாரோ ஒருவனுக்கு மனைவியான, முன்பின் தெரியாத சீதை என்னும் தாய்க்கு அவர் உதவினாரே...அது தான் அவரது உயர்ந்த நிலை. அசுரர்கள் தனது வாலில் பற்ற வைத்த நெருப்புடன், சீதையின் "சோகாக்னி' என்னும் நெருப்பையும் சேர்த்து பற்ற வைத்தார். இந்த இரட்டை நெருப்பால் இலங்கை அழிந்து போனது.
No comments:
Post a Comment