ஒருசமயம் விவசாயி தென்னமரக்கன்றுகளை தன் தோட்டத்தில் நட்டு மகிழ்ந்தான். தென்னை மரம் நன்கு காய்த்து பலன் தரவேண்டும் என்று குருவாயூரப்பனை வேண்டினான். அதற்கு காணிக்கையாக முதன் முதலில் பறிக்கும் தேங்காய்கள் அனைத்தையும் அவருக்கே அளிப்பதாக நேர்ச்சை செய்து கொண்டான். அதன் படியே முதல் விளைச்சலை ஒரு வண்டியில் ஏற்றி குருவாயூருக்கு கிளம்பினான். வழியில் திருடர்கள் வழிமறித்து சாக்கில் இருந்த தேங்காய்களைப் பறித்துக் கொண்டனர். விவசாயி அவர்களிடம், ""இந்த தேங்காய்களை எல்லாம் காணிக்கையாக குருவாயூரப்பனுக்குக் கொண்டு செல்கிறேன். அதனால் என்னைத் தடுக்காதீர்கள்,'' என்று அவர்களைத் தடுத்தான். திருடர்களின் தலைவன்,"" குருவாயூருக்கு கொண்டு செல்வதால் இதில் என்ன கொம்பா முளைத்திருக்கிறது?'' என்று கேலி செய்து சாக்கினை இழுத்தான். தேங்காய்கள் அனைத்தும் நாலாபுறமும் தெருவில் சிதறிவிழுந்தன. அவற்றில் எல்லாம் கொம்பு முளைத்திருந்ததைக் கண்ட திருடர்கள் திகைத்தனர். அறியாமல் செய்துவிட்ட தவறுக்காக திருடர்கள், விவசாயியிடம் மன்னிப்புக் கேட்டனர்.
""குருவாயூரப்பா! இவர்களை மன்னித்து விடு,'' என்று வேண்டிக் கொண்டு கோயிலுக்குச் சென்று காணிக்கை செலுத்தினான்.
""குருவாயூரப்பா! இவர்களை மன்னித்து விடு,'' என்று வேண்டிக் கொண்டு கோயிலுக்குச் சென்று காணிக்கை செலுத்தினான்.
No comments:
Post a Comment