Monday, June 27, 2011

ராமன் கேட்ட இரண்டாவது வரத்தை தசரதரால் தரமுடியவில்லை.

ராவணவதம் முடித்தபின், ராமன் அயோத்தி திரும்பினார். பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதைக் காண தசரத சக்கரவர்த்தி சொர்க்கத்தில் இருந்து பூலோகம் வந்தார். பிள்ளையைக் கண்டதும் ஆனந்தக்கண்ணீர் கண்களில் பெருகியது. ""மகனே! அன்று கைகேயி வரம் என்ற பெயரால் என் நெஞ்சில் முள்ளைத் தைத்துவிட்டாள். அந்த முள் குத்திய வலி இன்றுவரை தொடர்கிறது. ஆனால், காந்தம் போன்ற உன் மேனியை கட்டியணைத்ததும் அந்த வலி நீங்கி விட்டது'' என்று பரவசத்துடன் சொன்னார்.
ராமரோ,""தந்தையே! உங்களால் ஒதுக்கப்பட்ட அன்னை கைகேயி என் தெய்வம். அந்த தெய்வத்தாயையும், என் தம்பி பரதனையும் மீண்டும் எனக்குத் தாருங்கள்,'' என்று ராமர் தந்தையிடம் வரம் கேட்டார். ஆனால், தசரதரோ ராமன் கேட்ட ஒரு வரத்தை மட்டுமே தந்தார். "" பரதன்மட்டும் உன் தம்பியாகட்டும். ஆனால், கைகேயி மீது கொண்ட கோபத்தை இப்போதும் மட்டுமல்ல, எப்போதும் என்னால் மறக்க முடியாது,'' என்று சொல்லி விண்ணுலகம் கிளம்பிச் சென்றார். பிள்ளை கேட்ட இரண்டாவது வரத்தை தசரதரால் தரமுடியவில்லை.

No comments:

Post a Comment