Monday, June 20, 2011

எல்லோருக்கும் புண்ணியம் கங்கை

சிவபெருமான் சடைமுடியில் கங்கை குடியிருக்கும். திருமாலின் கால் பெருவிரலிருந்து கங்கை உற்பத்தியாகிறது. எனவே, சைவர்-வைணவர் இருவருக்கும் பொதுவான புண்ணிய ஆறாக கங்கை விளங்குகிறது. திருமாலின் கால் கட்டை விரலில் தோன்றியதால் கங்கைக்கு விஷ்ணுபதி என்று பெயர் உண்டு.

 கங்கை சமவெளியில்பாயும் இடத்துக்கு அரித்துவாரம் (ஹரித்துவார்) என்று பெயர். இதை கொண்டுதான் திருமாலின் கால் கட்டை விரலில் கங்கை பிறந்தது என்று ஐதீகம் ஏற்பட்டது.


சைவர்-வைணவர் இருவருக்கும் முக்கிய தலம் ராமேஸ்வரம்.


வடக்கே -பத்திநாதம் (பத்ரிநாதம்)

கிழக்கே - ஜெகந்நாதம்

மேற்கே- துவாரகநாதம்

தெற்கே- ராமநாதம் என்ற புகழ் பெற்றது.


ஆதியில் விஷ்ணுவின் விண்ணப்பப்படி விச்வகர்மா ஒவ்வொருவருக்கும் சிவலிங்கம் செய்து கொடுத்தார்.


இந்திரன் -பத்மராகலிங்கம்

குபேரன்- சொர்ணலிங்கம்

எமன் - கோமேதக லிங்கம்

வருணன் - நீல லிங்கம்

பிரம்மா - ஸ்வரண லிங்கம்

நாகர்கள் -பவள லிங்கம்

லஷ்மி - ஸ்படிக லிங்கம்

மகா விஷ்ணு - இந்திர நீல லிங்கம்

அக்கினி - வஜர லிங்கம்

அஷ்டவசுக்கள் விஸ்வதேவர்கள் - வெள்ளி லிங்கம்

துவாதச ஆதித்தரிகள் - தாமிர லிங்கம்

நிருதி - தாரு லிங்கம்

சாயா தேவி - மாவுலிங்கம்

யட்சர்கள் - தயிர் லிங்கம்

அசுரர்கள் - சாணலிங்கம்

ஆவிகள் - இரும்பு லிங்கம்

பார்வதி - நவநீத லிங்கம்

யோகிகள் -பஸ்ப லிங்கம் (விபூதி)

சரஸ்வதி - நவரத்தன லிங்கம்

No comments:

Post a Comment