Monday, June 20, 2011

சித்தரகுப்த வழிபாடு:


சித்திரைப் பாவையே உன்றன் வருகையால்

தரணி செழிக்க வேண்டும்!

செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும்

தீமைகள் நீங்க வேண்டும்''

 சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பவுர்ணமியானது எமதர்மனின் கணக்காரன சித்ரகுப்தருக்கு மிகவும் புனிதமானது "சித்ரகுப்த'' என்ற வடமொழிச் சொல்லுக்கு `மறைந்துள்ள படம்' என்பது பொருள்.

சித்திரகுப்தன் நமது பாப புண்ணியங்களைக் கணக்கிடும் ஒரு தேவன். சித்ரகுப்தனைத் திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபட வேண்டும். அன்றைய தினம் சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு நடத்தப்படும்.


வாசனைப் பொருட்கள் கலந்த சாதம் கலக்கப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டுப் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும். இறுதியில் அக்கினி வழிபாடு செய்யப்படும்.
வழிபடும் முறை :

கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி சித்ரகுப்தனைத் தியானிக்க வேண்டும்.


"சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம்

லேகனிபத்ர தாரிணம்

சித்ர ரத்னாம்பரதரம்

மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்''


பிறகு தீபம் தூபம் காட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். விரத நாளில் பசுவின் பால், பசுவின் மோர் சாப்பிடக் கூடாது. எருமைப் பால் உபயோகிக்கலாம். உப்பு சேர்க்கக் கூடாது.பாசிப் பருப்புப் பாயாசம் செய்து அதில் எருமைப் பாலை விட்டு நிவேதனம் செய்யலாம்.
பலன்கள்:

1. சித்திர குப்தனைப் பிரார்த்திப்பதால் அவர் நம் பாவங்களைப் பொருத்தருள்வார்.

 2. ஒவ்வொரு வருடத்தின் முதலாவது பவுர்ணமியன்று செய்யப்படும் இந்த வழிபாட்டின் மானசீகமான பலன், இந்த பூவுலகில் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் இடைவிடாமல் கண்காணிக்கும் ஒரு மேலான சக்தி இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுவதாகும்.

 3. ஒவ்வாருவர் தோளிலும் சித்திரகுப்தர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் உருவானதற்கு காரணம் நாம் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று தூண்டுவதற்காகவேயாகும்.

 4. தானம் செய்வதால் இறையருள் கிட்டும்.

 5. குற்றால மலையில் அருவியாய் விழுந்து அழகு நடைபோடும் நதியின் பெயர் சித்திர நதியாகும். சித்திரா பவுர்ணமி அன்று இங்கு நீராடினால் புண்ணியம் சேரும்.

No comments:

Post a Comment