Sunday, June 26, 2011

மகாலட்சுமியிடம் கற்க வேண்டியது என்ன?

நம்மை யாராவது சிறிதாக சீண்டினால்கூட, உடன் கோபித்து விடுவோம். ஆனால், மகாலட்சுமி அப்படிப் பட்டவள் அல்ல. தாங்கவே முடியாத துன்பங்களைத் தந்த போதிலும், பொறுமையின் சிகரமாக இருந்தவள் அவள். சீதையாகப் பிறந்தபோது ராவணன் அவளை இலங்கைக்குக் கடத்தியபோதும், சிறை வைக்கப்பட்டு அசோக வனத்தில் அசுரகுலப்பெண்கள் துன்புறுத்தியபோதும் அவள் கோபப்படவில்லை. அவளைதுன்புறுத்திய அசுரப்பெண்களை தண்டிக்க ஆஞ்சநேயர் விரும்பியபோதும், அவர்களை மன்னித்துவிடும்படி சொல்லிவிட்டாள். இவ்வாறு மகாலட்சுமி, எல்லையில்லாத பொறுமையின் சின்னமாக திகழ்கிறாள். அவரவர் வீடுகளுக்கு அவரவர் முன்வினைப் பயனுக்கேற்பவே அவள் வருவாள். அதிலும் கூட பொறுமை தான் காட்டுவாள். தீபாவளி திருநாளில் மகாலட்சுமியிடம் பொறுமையுடன் இருக்க வேண்டுவோம்.

No comments:

Post a Comment