Saturday, June 11, 2011

பெண்கள் ருத்திராட்சம் அணியக் கூடாதா


பிள்ளைப்பேறில்லாமல் அல்லலில் வாடும் எனக்கு 12 வருட இறைவனின் வேண்டுதலில் என்ன குறை என்று தெரியவில்லை. இத்தனை வருடங்களாக பிள்ளையின்றி நான் இருப்பது தினம் தினம் செத்துப் பிழைப்பது போலுள்ளது. என் குறை நீங்க ஒருவழி உண்டா? ருத்திராட்சத் தின் மகிமை உணர்ந்து ருத்திராட்சம் வாங்கியுள்ளேன். நான் பெண் என்பதால் அணியக் கூடாதென சிலர் திட்டுகிறார்கள். எத்தனை மன வேதனையைத்தான் தாங்குவது? என்னிடம் செலவு செய்ய வசதியும் இல்லை. நான் என்ன செய்வது? தாங்கள்தான் எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.


-
உலகத்தில் திருமணம், புத்திர பாக்கியம் இந்த இரண்டு மட்டும்தான் நிறைவான விஷயமாகவும்; திருமணம் ஆகாமல் இருந்தால் அதைக் குறைபாடா கவும்; திருமணம் ஆகி குழந்தை இல்லாவிட்டால் அதை மேலும் ஒரு குறைபாடாகவும் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் எத்தனை ஆழ்வார்கள், எத்தனை நாயன்மார்கள் திருமணம் ஆகாமல் இருந்தார்கள்- திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாமல் வாழ்ந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக கண்ணப்ப நாயனாரை எடுத்துக் கொண்டால், அவர் திருமணமாகாதவர்; இறைவனால் "என் அப்பனே' என்று அழைக்கப் பட்டவர். திருமணமாகி, குழந்தைப்பேறு இல்லாமல் இறைவனை பூதஉடலுடன் தரிசித்து, இறைவனால் "என் அம்மையே' என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார்.

இறை பக்திக்கும் மோட்சத்திற்கும் திருமணமோ புத்திர பாக்கியமோ காரணமாக அமைவதில்லை. இறந்தபின், இறந்தவருக்கு சடங்குகள் செய்ய புத்திரன் தேவை என்று தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவன் பித்ரு காரியங்களைச் செய்வதால் "புத்' என்ற நரகத்தை இறந்தவர் அடைவதில்லை என்பது நம்பிக்கை.

விதைகள் அனைத்தும் மரமாவதில்லை. மரங்கள் அனைத்தும் பூப்பதில்லை. பூக்கும் அனைத்தும் காய்ப்பதில்லை. காய்க்கும் அனைத்தும் பழுப்பதில்லை. இறைவன் திருவுள்ளம் எது என்று சாமான்யமான நம்மால் அறிய முடியாது. அதனால் புத்திர பாக்கியம் இல்லை என்று மனச் சோர்வு அடைவதை நீங்கள் விட்டுவிடுங்கள்.

. வீட்டில் சந்தான கோபால கிருஷ்ணனைப் பூஜித்து வாருங்கள். புத்திரஜீவி மரம் என்று அழைக்கப்படும் காட்டுப்பலா மரக் கன்றை, தர்ம ஸ்தாபனத்தில் நீங்கள் பிறந்த கிழமை அன்று நடுங்கள்.

ருத்திராட்ச மாலையின் பெருமை என்று சொன்னால், ஏக முக ருத்திராட்சத்தின் அதி தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள். இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம் விலகும்.

மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னி தேவனாகும். இதை அணிவதால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பிரம்மாவாகும். இதை அணிவதால் பிரம்மா ப்ரீதி அடைவதுடன், மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக்கூடாத செயல் களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியராகும். இதை அணிவதால் ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன், பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும்.

எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப் பெருமானாகச் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன், செய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம் விலகுகிறது.

ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில் வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச தோஷங் களும் விலகும்.

பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள் ளது. இதை அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம் செய்த பலன் களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.

இதுபோன்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ருத்திராட்சத்தை அணிந்து குளிக்கும்போது ருத்திராட்சத்தில் பட்ட நீர் நம்மீது படுவதால் புண்ணிய நதியில் குளித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தீட்டுக் காலங்களிலும், மல, ஜல விசர்ஜன காலங்களிலும் ருத்திராட்சத்தைக் கழற்றி வைத்துவிட்டு சுத்தமான பின் அணியலாம்.

ருத்திராட்சம் அணிந்தவர்கள், ருத்திராட்சம் அணியாதவர்களை வணங்கக்கூடாது. ருத்திராட்சம் அணிந்தவர்கள் சிவசொரூபம் ஆவார்கள். (வைணவர்கள் ருத்திராட்சம் அணியும் வழக்கம் இல்லை. அவர்கள் துளசிமணியை அணிவதால் ருத்திராட்சம் அணிந்த சிறப்புகளைப் பெறுவார்கள்.) ஒருவர் இயற்கையாக மரணம் அடையும்போது ருத்திராட்ச மரத்தின் காற்றுபட்டால் அவர்களுக்கு கைலாச பதவி கிடைக்கும் என்பார்கள். ருத்திராட்ச தானத்திற்கு இணையாக எதுவும் இல்லை என்று சொல்வார்கள்.

நீங்கள் ருத்திராட்சம் அணிவதைவிட 54 பெரிய ருத்திராட்சம் கொண்ட மாலையை வாங்கி அதில் சிவபஞ்சாட்சரி அல்லது சக்தி பஞ்சாட்சரம், பஞ்சதசீ என ஏதாவது ஒரு ஜெபத்தை உபதேசம் பெற்றுச் செய்து வாருங்கள். ருத்தி ராட்சத்தை தானம் செய்யுங்கள். பவள மாலை அணியுங் கள். ருத்திராட்சத் தால் ஜெபம் செய்தாலும், தானம் செய்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் நிச்சயம் கிடைக்கும்.

1 comment:

  1. . இறைவன் திருவுள்ளம் எது என்று சாமான்யமான நம்மால் அறிய முடியாது

    ReplyDelete