Sunday, June 26, 2011

இருமுடியில் வைக்கும் பொருட்கள்

இருமுடியில் வைக்கும் பொருட்கள்

இருமுடியில் முன்முடி, பின்முடி என இரு பிரிவு உண்டு. முன்முடியில் பூஜை பொருட்களையும், பின்முடியில் பக்தருக்குரிய சமையல் மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட வேண்டும். பூஜைக்கு மஞ்சள்பொடி சிறிதளவு, மஞ்சள், பன்னீர் (சிறிய பாட்டில்), தேன் (சிறிய பாட்டில்), சந்தன வில்லைகள் பத்து, குங்குமம் சிறிய பாக்கெட், விபூதி பாக்கெட், பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சை, உலர்ந்த திராட்சை (50 கிராம்), முந்திரி, (50 கிராம்), கல்கண்டு, அச்சுவெல்லம் (இரண்டு), அவல், அவல்பொரி, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிப்பருப்பு, சுக்கு, ஏலக்காய், காணிப்பொன் (குறைந்த விலையில் கிடைக்கும் தங்கத்தகடு), கருப்பு வளையல், திரிநூல், பெரிய தேங்காய் ஒன்று, சிறிய தேங்காய் மூன்று, பச்சரிசி அரை கிலோ, பசுநெய் -300 கிராம். இருமுடிகட்டும் போது, "சுவாமியே சரணம் ஐயப்பா, பள்ளிக்கட்டு சபரிமலைக்கு, யாருடைய கட்டு, சாமியுடைய கட்டு, எப்போ பயணம், இப்போ பயணம், பகவானே- பகவதியே, பகவதியே- பகவானே, ஈஸ்வரனே- ஈஸ்வரியே, ஈஸ்வரியே-ஈஸ்வரனே, சுவாமியே.. ஐயப்பா என்ற சரண கோஷங்களை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்து சொல்ல வேண்டும். அனைவரும் கூற வேண்டும்.

No comments:

Post a Comment