அம்பிகை மாதம்
அம்பிகை மாதம்
ஆடிமாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் வழிபாடு தொடங்கி
விடும். இந்த மாதத்தில் செய்ய வேண்டிய அம்பாள் வழிபாடு குறித்து அறிந்து கொள்வோமே!
ஆடி வெள்ளிக்கு அம்பாளுக்கு என்ன படைப்பது ?
ஆடி வெள்ளியன்று தவிட்டு அப்பம் செய்து அம்பாளுக்கு நைவேத்யம் செய்வது வழக்கம். தவிடை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை சப்பாத்தியை விட சற்று கனமான அளவில் தட்டி தீக்கனலில் சுட்டெடுக்க ("நான்' எனப்படும் எண்ணெய் இல்லாத காய்ந்த ரொட்டி சுடுவது போல) வேண்டும். தீக்கனல் இல்லாவிட்டால், "நான்ஸ்டிக்' தோசைக்கல்லில் சுட்டெடுக்கலாம். ஆடிவெள்ளியன்று காலையில் காபி, டீ கூட சாப்பிடாமல் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும். கேரளாவில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது. அங்கு இந்த அப்பத்தை "கனகப்பொடி' என்கின்றனர். தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் "பி' உள்ளது. வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்த சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யம் செய்து, அம்பாளின் அருள் கடாட்சமும் பெற்று சாப்பிடலாம்.
மாரியம்மன் மருந்து
மாரியம்மன் கோயில்களில் ஆடிச் செவ்வாய், ஆடிவெள்ளியன்று கஞ்சி வைத்து வணங்குவார்கள். இதை எப்படி வைப்பதென தெரிந்து கொள்ளுங்கள். "ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்' எனும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்? இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் கஞ்சி வைக்கிறார்கள். இதை "ஆடிக்கஞ்சி' என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண் டும். அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும். பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது. கோயில் நிர்வாகங்கள் இதற்குரிய ஏற்பாட்டைச் செய்யலாம்.

பராசக்தியே வருக ! நல்லருள் தருக !
ஆடி மாதத்தில் அம்பிகை வழிபாட்டை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அவள் பராசக்தியாக விளங்குகிறாள். பராசக்தி என்பதற்குரிய விளக்கத்தையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டுமே! படிப்போமா!
ஆதியில் ஒளி தோன்றியது. அந்த ஒளியில் ஆதிசக்தி தோன்றினாள். படைக்கும் கடவுளாக பிரம்மனையும், காக்கும் கடவுளாக விஷ்ணுவையும், அழிக்கும் கடவுளாக சிவனையும் படைத்தவள் சக்தியே. அந்த ஆதிசக்தியே கல்விக்குரிய கலைமகளாக, செல்வத்திற்குரிய அலைமகளாக, வீரத்திற் குரிய மலைமகளாகவும் ஆட்சி செய்கிறாள். தாய்க்கெல்லாம் தாயாக இருக்கும் இந்த சக்தி உயர்ந்தவள் என்பதாலேயே, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை முதன்மையாக வைத்தார்கள். அன்னையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை என்னும் வழக்கும் இதனால் தான் உண்டானது. இந்த ஆதிசக்தியை பராசக்தி என்றும்
வழங்குவர். "பரா' என்றால் அளவிடமுடியாதது என்பது பொருள். அளவிடவே முடியாத சக்தியின் இருப்பிடமாகத் திகழ்வதால் அம்பிகை பராசக்தி எனப்பட்டாள். இவளே ஆலயங்களில் அருள் செய்கிறாள். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வடிவழகு கொண்டு வெவ்வேறு திருநாமங்களில் வழங்கப்படுகிறாள். மகாசக்தி உமையவளே
மாரியாக, காளியாக, சங்கரியாக, துர்க்கையாக, முத்தாரம்மனாக, இசக்கியம்மையாக கொலு
வீற்றிருந்து உலக உயிர்களை தன் கடைக்கண்ணால் காத்து கரையேற்றுகின்றாள்.
அவளை வணங்கும் போது,
""தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!''
என்று இந்த வார ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகளில் பாடி மகிழ்வோமே
ஆடிப்பெருக்கே வா வா வா!
ஆடிப்பெருக்கின் முக்கியத்துவம்தை முதல் ஆனி வரையுள்ள <உத்ராயண காலத்தில் மாசி, சித்திரை மாதங்களில் தீர்த்தமாடுதலும், ஆடி முதல் மார்கழி வரையிலான காலத்தில் ஆடி, ஐப்பசி மாதங்களில் புனித நீராடுதலும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, மழைக்காலத்தின் துவக்கமான ஆடியில், புண்ணிய நதிகளை வணங்கி வழிபடும் பழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருக்கிறது. விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அடிப்படையான நீர் நிலைகளைப் போற்றிக் கொண்டாடுவதே ஆடிப்பெருக்கு விழா. குறிப்பாக, காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடி 18ம் நாள் இந்த விழா கொண்டாடப்படும்.
காவிரிக்கு கர்ப்பம்ஆடிப்பெருக்கு குறித்த செவிவழி செய்திகள் தொடர்பாகவும் சில சடங்குகளை மக்கள் செய்வதுண்டு. இந்நாளில் காவிரியன்னை கர்ப்பமாக இருப்பதாகவும், கர்ப்பஸ்தீரிக்கு பிடித்தமான <உணவு வகைகளை படைக்க வேண்டும் என்ற அபிப்ராயத்திலும், மக்கள் சித்ரான்னங்களை எடுத்து வருவர். அறுசுவை கொண்ட சாம்பார் சாதம், புளியோதரை, கல்கண்டு சாதம், தேங்காய் சாதம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை மூத்த சுமங்கலிகள் சுமந்து வருவர். கரையில் பிள்ளையார் பிடித்து வைத்து, வாழை இலையில் ஒன்பது மண் உருண்டைகளை பிடித்து வைப்பர். அதன் முன்பு சித்ரான்னங்கள், காதோலை, கருகமணிமாலை, பூ, பொட்டு, தாலிக்கயிறு கரும்பு, இளநீர் மற்றும் வாழைப்பழம் உட்பட பழவகைகளை வைத்து பூஜிப்பர். இதை காவிரியில் மிதக்க விடுவர். பின், தேங்காய் பால் காய்ச்சி காவிரியில் ஊற்றுவர். மூத்த சுமங்கலி பெண் தங்கள் வீடுகளிலுள்ள திருமணமான பெண்களுக்கு தாலிகயிறு மாற்றிவிடுவார். ஆண்கள் கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வர். குடும்பத்துடன் காவிரிக்கரையில் அமர்ந்து சித்ரான்னங்களை பகிர்ந்து சாப்பிடுவர். இதன் மூலம் குடும்ப உறவு வளரும் என நம்புகின்றனர். ஆற்றுக்கு வர முடியாதவர்கள் வீடு, வயல்களிலுள்ள கிணறுகளையும் காவிரித்தாயாகக் கருதி பூஜித்து, பூஜைப் பொருட்களை சமர்ப்பிப்பார்கள்.
தவப்பலன் கிடைக்கும்யோகியரும், சித்த புருஷர்களும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் நீராடி, தங்கள் தவத்தின் பலனை மக்களுக்கு பகிர்ந்தளித்து செல்வதாக ஐதீகம். எனவே காவிரியில் நீராடி தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விடுவதுடன், தான, தர்மங்களையும் செய்தால் அவர்களது ஆசியைப் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று காவிரியின் கதையை படிப்பதும் சிறப்புதரும். காவிரியைத் தந்த உச்சிப் பிள்ளையாரையும் அன்று வழிபடுவார்கள். காவிரியின் மிச்சமாகக் கருதப்படும் தாமிரபரணி பாயும் பாபநாசம் (திருநெல்வேலி) அகத்தியர் அருவியிலும் அன்று தீர்த்தமாடி, அகத்தியர் பெருமானையும் தரிசித்து வரலாம்.
துணை ஆற்றங்கரைகளிலும் விழா
ஆடியில் காவிரி ஆற்றின் இரு கரை தளும்ப நீர் பெருக்கெடுத்து பாய்ந்து வரும். அதன் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, கல்லணைக் கால்வாயிலும் நீர் மிகுதியாக திறந்து விடப்படும். இந்தப் பகுதிகளிலும் மக்கள் நீராடி, ஆடிப்பெருக்கை சிறப்பாகக் கொண்டாடுவர்.
பக்தியுடன் நீராடுங்கள்ஆடிப்பெருக்கை ஒட்டி காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடினால் மிகுந்த புண்ணியம் பெறலாம். பணம் சம்பாதிப்பது எளிது. புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டுமானால், ஆடிப்பெருக்கு போன்ற அரிய நாட்களை தவற விட்டுவிடக்கூடாது. அது மட்டுமல்ல! தீர்த்தமாட போகிறேன் என்ற பெயரில் வீட்டிலிருக்கும் பாலிதீன் பைகளில் நமக்கு தேவையான உணவு, பொருட்களை எடுத்துச் சென்று ஆற்றில் போட்டு மேலும் பாவத்தை சேர்த்துவிட்டு வந்து விடக்கூடாது. பக்தியுடன் நீராடுங்கள். நாம் நீராடும் நதியை தெய்வமாக மதியுங்கள். நதியில் குப்பை மிதந்து வந்தால் எடுத்து கரையில் போடுங்கள். தண்ணீரை தெய்வமாக மதித்தால் தான், எதிர்காலத்தில் ஆற்றுத் தாய்மார்கள் நம் சந்ததியின் தாகத்தையும் தீர்த்து வைப்பார்கள்.
வீட்டில் ஆடிப்பெருக்கு பூஜை
காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும், மற்றவர்களுக்கு அப்படி ஒரு விழாவே இல்லை என யாரும் நினைக்க வேண்டாம். ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவும். நிறைகுடத்தில் இருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும் மஞ்சள் கரைந்து விடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்கவும். தண்ணீரில் உதிரிப்பூக்களைப் போடவும்.
கற்பூரஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி, கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, ""முன்னொரு காலத்தில் எங்கள் மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல், எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள்,'' என்று வேண்டுங்கள். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்தியமுனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும், செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விடுங்கள். அன்று சர்க்கரைப் பொங்கல் வைத்து குழந்தைகளுக்கு கொடுங்கள். ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக்குரிய உதவி செய்யுங்கள். உங்கள் வீட்டில் செல்வம் கொழிப்பது நிச்சயம்.
தீர்த்தமாட உகந்த நாட்கள்கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகள், கோயில் தீர்த்தங்கள், சமுத்திரக்கரைகளில் புனித நீராட கிரகணநேரம், சனி பிரதோஷம், துவாதசி, அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி, மகர சங்கராந்தி, ஆடிமாதம், ஆவணி மூலம், தீபாவளி, மகாநவமி, யுகாதி, கேதாரகவுரி விரததினம், விநாயகர்சதுர்த்தி, கந்தசஷ்டி விரதநாட்கள், மகா சிவராத்திரி, கோகுலாஷ்டமி, கார்த்திகை மாதம், மகம் ஆகிய நாட்களை குறிப்பிடுகின்றனர். குறிப்பாக ஆடிப்பெருக்கன்று நீராடுவது இரட்டிப்பு புண்ணியம் சேர வழிதரும். இந்நாட்களில் நீராடினால் வாழும் காலத்தில் சுகபோகங்கள் உண்டாவதோடு, பிறப்பற்ற நிலையான முக்தியும் பெறுவர் என்பது ஐதீகம்.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே! என்பது ஏன்
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று ஒரு சுலவடை உண்டு. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
குழந்தை தனக்கெதிரான பாவம் செய்தால் பொறுப்பவள் தாய். ஆனால், ஒரு எல்லையை மீறிவிட்டால் அவளும் கூட வயிற்றெரிச்சலில் சபித்து விடுகிறாள். இத்தகைய கொடிய பாவங்களைக் கூட களைபவள் நதித்தாய். எனவே தான், ""தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே'' என்று சொல்வார்கள். தாயைப் பழித்த கொடிய பாவத்தைச் செய்தவர்கள் கூட, ஆடிப்பெருக்கன்று புண்ணிய நதிகளில் நீராடி சாபம் நீங்கப்
பெறலாம்.
No comments:
Post a Comment