Saturday, June 25, 2011

பூமியை அளந்தவனைப் பாடிய பூமித்தாய்

தசாவதாரங்களை முடித்த பிறகு, திருமால் தன் மார்பில் சாய்ந்திருந்த லட்சுமியிடம், ""லட்சுமி! கிருஷ்ணாவதார காலத்தில் நான் உபதேசித்த கீதையின் <சாரத்தை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசிக்க வேண்டியுள்ளது. நீ மறுபடியும் பூலோகத்தில் போய் பிறக்க வேண்டும். நான் பின்னால் வருகிறேன்,'' என்றார்.""வேண்டாம் சாமி! ராமாவதாரம் எடுத்து என்னைக் காட்டில் அலைக்கழித்ததை விட, என் மேல் சந்தேகப்பட்டீர்களே! அந்தக் கொடுமை பூலோக வாழ்வில் மீண்டும் வர வேண்டாமைய்யா! ஆளை விடுங்கள்,'' எனச்சொல்லி விட்டாள்.அவர் பூமாதேவி பக்கம் திரும்பினார்.""அவள் பொறுமையின்

சிகரம். நாம் தவறே செய்தாலும் கூட, பெருமாளிடம் சொல்லிக்கொடுக்க மாட்டாள். இதோ! புறப்படுகிறேன். அதற்காகத்தானே காத்திருக்கிறேன்,'' என்று சொல்லி கிளம்பிவிட்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த பெரியாழ்வாரின் மகளாகப் பிறந்தாள். "இவ்வுலக வாழ்வில் இருந்து விடுபட்டு இறைவனை அடைய அவனைச் சரணடைவதே உகந்த வழி' என்ற கீதையின் சாரத்தை, மிக எளிமையாக "திருப்பாவை' என்னும் பாடல் வரிகளாக்கினாள்.அவள் பூமித்தாய் இல்லையா! அதனால், தனது திருப்பாவையில் பூமியை அளந்த வாமனமூர்த்தியை மூன்று பாடல்களில் புகழ்ந்தாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி' என்று முதல் பத்து பாடல்களுக்குள் பாடி முதல் திருவடியைப் புகழ்ந்தாள். "அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த' என்று இரண்டாவது பத்து பாடல்களுக்குள் வணங்கினாள். "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி' என்று கடைசி பத்துப்பாடல்களில் ஒன்றில் போற்றினாள்.இதில் இன்னொரு விசேஷம்...பகவான் மூன்றடியை எட்டி எட்டி வைத்ததால், முதல் பத்து, இரண்டாம் த்து, மூன்றாம் பத்து என பிரித்துப் பாடியது இன்னும் விசேஷம்.

திருவோணத் திருநாளில், திருப்பாவையின் இந்த மூன்று பாடல்களையும் (3, 17, 24) பாடி, வாமனரைத் தரிசியுங்கள். ஓணப் பாயாசம் போல வாழ்க்கை இனிக்கும்

No comments:

Post a Comment