Monday, June 20, 2011

சிவராத்திரி பற்றிய சிறு குறிப்புகள்

1. மகா சிவராத்திரி:- பாற்கடலில் தோன்றிய நஞ்சை சிவபெருமான் உண்டு கண்டனம் கருத்ததனால் நீலக்கண்டன் என்ற திருநாமம் பெற்றார். அந்த நாள் மகா சிவராத்திரி என்று புராணம் சொல்லுகிறது.
2. பார்வதி சிவபெருமான் கண்களை மூட உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் வேண்ட நெற்றிக் கண்ணை திறந்தார். இந்நாள் சிவராத்திரியாகும். இதனை அப்பர் கூறியுள்ளார்.

 3. மோட்சம் அடைய நான்கு வழிகள்:- சிவனை அர்ச்சிப்பது, ஸ்ரீருத்ரம் பாடலைப் பாராயணம் செய்வது, அஷ்டமி திதி திங்களில் விரதம் இருப்பது, காசியில் மரணம் அடைவது. இந்த 4 வழிகளிலும் நடக்க சிவராத்திரியில் சிவபூஜை செய்ய வேண்டும்.

 4. உலகம் அழிந்து எல்லாம் சிவபெருமானில் ஒடுங்கி இருந்த காலத்தில் அடர்ந்த இருளில் பார்வதி நான்கு காலம் ஆகம முறைப்படி சிவனை வழிப்பட்டாள் அவள் வழிப்பட்டது நினைவாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

 5. காவிரி கரையில் திருவிசலூர் என்னும் தலம் ஒன்று உள்ளது. இத்தலத்தில் மகா சிவராத்திரி இரவில் அகத்தியர் சுவாமியை பூசித்தார் என்று டாக்டர் உ.வே.சுவாமிநாதய்யர் கூறியுள்ளார்.
சிவராத்திரி அன்று கண் விழித்து சிவபுராணம், தேவாரம் முதலிய நூல்களை முற்றோதி எல்லா நலன்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக.

No comments:

Post a Comment